அமேசான் நதியின் கொலைகார மீன்கள்...!!!
மீன்களில் நாம் சாப்பிடக் கூடிய மீன்கள் பல உண்டு. சிக்கினால் நம்மையும் சாப்பிடும் சுறா, ஆக்டோபஸ் போன்றவையும் கடலில் வசிக்கின்றன. ஆனால் உருவத்தில் மிகச்சிறியதாக, ராட்சத மீன்களை விட மிகக் கொடூரமான ரத்த வேட்கை பிடித்த கொலைகார மீனும் இருக்கிறது.
தென் அமெரிக்கா கண்டத்தில் ஓடும் அமேசான் நதியில்தான் அந்த மீன்கள் வசிக்கின்றன. 'பிரான்ஹா' மீன் எனப்படும் அந்த மீன்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும்.
MONSTER RIVER |
ஒரு சிறிய மீன் எப்படி இவ்வளவு பயங்கரமான பிராணியாக இருக்கிறது என்பதை தெளிவாக கண்டறிந்திருக்கிறார்கள், நீர் வாழ் உயிரின ஆய்வாளர்கள். 'பிரான்ஹா' மீன்கள் சிறியவையாக இருந்தாலும் அவற்றின் மண்டை ஓடும், பற்களும் மிகவும் பலம் பொருந்தியவை. குறிப்பாக பற்கள் மரங்களை அறுக்க உதவும் ரம்பம் போல் கூர்மையாக காணப்படுவதுடன், வாயை மூடும் போது மேற்பர்களும் கீழ்ப்பர்களும் மிக கச்சிதமாக பொருந்தும்படி அமைந்துள்ளன. அதனால் இதன் வாயில் சிக்கிய எந்த பொருளும் அவ்வளவு எளிதாக தப்ப முடியாது.
இரண்டாவதாக, இந்த மீன்கள் தனியாக இறை தேடப்போவதில்லை. இந்த மீனுக்கு மிகச்சிறந்த மோப்ப சக்தி உண்டு. அது வசிக்கும் தண்ணீரில் இறங்கும் எந்த பிராணியையும் சில நொடிக்குள் மோப்பம் பிடித்து விடும். அடுத்த சில நிமிடங்களில் படு வேகமாக நீந்தி இரையை பிடித்து விடும். இவற்றுக்கு குதிரை, மான், மாடுகள் போன்ற விலங்குகள் இரையாக கிடைக்காவிட்டால் மற்ற இன மீன்களை சாப்பிடத் தொடங்கி விடும்.
அதேநேரம், 'பிரான்ஹா' மீன்கள் இருக்கும் நதியில் அமேசான் நதி ஒர கிராமங்களில் வசிக்கும் மக்கள் நீந்துகிறார்கள் . அவர்கள் இந்த மீனை கண்டு பயப்படுவதில்லை என்கிறார்கள். என்னதான் 'பிரான்ஹா' மீன்கள் பெரிய கொலைகார மீன்களாக இருந்தாலும் அவையும் மனிதனின் அடுப்பில் உணவாக வந்து தான் சேர்கின்றன. தென் அமெரிக்க பழங்குடியுனர் 'பிரான்ஹா' மீன்களை ஆற்றுக்குள் இறங்காமல் லாவகமாக பிடித்து விடுகிறார்கள். அதாவது, மயக்கமூட்டும் ஒரு செடியின் சாற்றை நதி நீரில் கலந்து விடுகிறார்கள். இந்த சாற்றின் நெடியால் மயக்கமடைந்து நீரில் மிதக்கும் 'பிரான்ஹா' மீன்களை எடுத்து வந்து குழம்பு வைத்து விடுகிறார்கள். இந்த மீனின் பற்களை அம்புக்கு முனைகளால கட்டுகிறார்கள். எவ்வளவு பெரிய 'பிரான்ஹா'வும் மனிதனிடம் மாட்டினால் கடைசியில் அதன் முடிவு அதோ கதிதான்.
No comments:
Post a Comment
welcome ur comment,