Tuesday, July 28, 2015

அன்று, இன்று. அப்துல் கலாம்

அன்று, இன்று. அப்துல் கலாம்


இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக பணியாற்றியவர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். இவரது முழுப்பெயர் அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

ஏழ்மையில் முளைத்த விடிவெள்ளி 

அப்துல் கலாம் அவர்கள் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். படிப்பு எட்டாக்கனியாக கனியாக இருந்த போதும் கூட, தனது விடா முயற்சியால் எட்டிப்பிடித்தவர். தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறுவயதிலேயே வேலைக்கும் சென்றவர். வீடு வீடாய் சென்று நாளிதழ் போட்டு வருமானம் ஈட்டி, தனது குடும்பத்திற்கு பணம் சம்பாதித்து கொடுத்தவர் அப்துல் கலாம்.

சுஜாதா அப்துல் கலாம்

திரு.அப்துல்கலாம் அவர்கள் இன்று உலகம் போற்றும் விஞ்ஞானியாக உருவாக முக்கிய காரணமாக இருந்த இடம் திருச்சி ஆகும். இந்த மலைக்கோட்டை நகரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் தான் 1952 - 1954 வரையிலான காலகட்டத்தில் இளங்கலை இயற்பியல் பாடத்தை பயின்றிருக்கிறார். மறைந்த எழுத்தாளரான சுஜாதா அப்துல் கலாம் அவர்களுடன் ஒரே வகுப்பில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அப்துல் கலாம் அவர்களை பற்றிய நினைவுகளை முன்பொருமுறை பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொல்கையில் "கல்லூரி காலத்தில் வகுப்பில் பிரபலமான மாணவராக அப்துல் கலாம் இருக்கவில்லை என்றும் மிகவும் அமைதியான கூச்ச சுபாவம் உடையவராகவே இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்று கலாம் அவர்களின் மறைவை ஒட்டி அவர் படித்த கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கல்வி கட்டணம் கட்ட முடியாத நிலையில் இருந்த கலாம் எம்.ஐ.டி-யில் சேர அனுமதி கட்டணம் கட்ட கூட பணம் இன்றி தவித்தார் அப்துல் கலாம். அவரது தந்தையாலும் பணம் தர இயலாத சூழ்நிலை இருந்தது. அப்போது, கலாம் அவர்களது அக்கா தான் தனது வளையல்களை விற்று பணம் கொடுத்து கலாம் படிக்க உதவினார்.

டி.ஆர்.டி.ஓ (DRDO) 

டி.ஆர்.டி.ஓ-வில் (DRDO) விஞ்ஞானியாக இருந்த போது இவரது முதல் சாதனையாக கருதப்பட்டது, இவர் கண்டுபிடித்த சிறிய ரக ஹெலிகாப்டர். இதை இந்திய இராணுவத்திற்காக உருவாக்கினார் அப்துல் கலாம்.

இந்தியாவின் முதல் அணு சோதனையில் பங்கு அப்துல் கலாம் அவர்கள், ராஜ ராமண்ணா என்ற விஞ்ஞானியின் குழு நடத்திய இந்தியாவின் முதல் முறை அணு ஆயுத சோதனையில் பங்கெடுத்திருந்தார்.

உடன் பணிபுரிபவர் மீது அதிக அக்கறை 

தன்னுடன் பணிபுரிபவர்கள் மீது அதிக எப்போதும் அதிக அக்கரை எடுத்துக்கொள்வார் அப்துல் கலாம் அவர்கள். ஒருமுறை, கலாம் உடன் பணிபுரிந்த ஒருவர் தனது குழந்தைகளை ஓர் திருவிழாவிற்கு அழைத்து செல்வதாய் வாக்களித்திருந்தார். ஆனால், வேலை நிமித்தம் காரணமாக அவர் செல்ல மறந்துவிட்டார். கடைசி தருணத்தில் நினைவு வந்து வீட்டிற்கு சென்ற போது தான் தெரிந்தது, முன்னரே சென்ற கலாம், அவரது குழந்தைகளை, திருவிழாவிற்கு கூட்டி சென்று விட்டார் என்று.

விருதுகளும் பெருமைகளும் 


அரசின் சார்பில், பத்மா பூஷன்(1981), பத்மா விபூஷன் (1990) விருதுகளும். அறிவியல் சார்ந்து இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்குவகித்ததன் காரணமாய் பாரத ரத்னா விருதும் (1997)அப்துல் கலாம் அவர்கள் பெற்றிருக்கிறார்.

மாணவர் தலைவர் 


மாணவர்கென்று ஓர் தலைவர் இருக்கிறார் என்றால் அது எப்போதும், அப்துல் கலாம் ஐயா அவர்கள் தான். அவர் மறைந்தாலும், அவர் ஏற்றிய எழுச்சி தீ மாணவர் மனதில் என்றும் எரிந்துக் கொண்டே தான் இருக்கும். கடந்த 2003 மற்றும் 2006 ஆம் ஆண்டு எம். டிவி-யின் யூத் ஐகான் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.

சுவிட்சர்லாந்து அரசாங்கம் கௌரவம் 

நமது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களை, அவரது அறிவியல் அறிவை போற்றும் வகையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் கௌரவம் செய்துள்ளது. இவர் சுவிட்சர்லாந்து சென்று வந்த நாளை, அவர்கள் அந்நாட்டின் அறிவியல் நாளாக கொண்டாடி வருகிறார்கள்.

வல்லரசு என்னும் விதையை விதைத்தவர் 

இந்தியா 2020-ல் வல்லரசு நாடாக மாறும் என்று, நீண்ட நாள் வெறும் கனவாக எந்த தூண்டுதலும் இன்றி இருந்த ஓர் விஷயத்திற்கு, மாணவர் மற்றும் இளைஞர்கள் மூலம் உயிரோட்டம் அளித்து, பெரும் விதையை ஒவ்வொரு இந்தியனின் மனத்திலும் விதைத்தவர் அப்துல் கலாம் அவர்கள்.

உலக கௌரவங்கள் 

உலகெங்கிலும் இருக்கும் பல பல்கலைக்கழகங்கள் கலாம் ஐயா அவர்களுக்கு டாக்டர் பட்டமளித்து கௌரவித்துள்ளது. இது மட்டுமின்றி, ராமானுஜன் விருது, இந்திரா காந்தி விருது, வீர் சவர்கர் (Veer Savarkar) விருது, கிங் சார்லஸ் II பதக்கம் என பல வகைகளில் கௌரவம் செய்யபட்டுள்ளார் கலாம் ஐயா.


அன்று : 

இந்தியாவின் முதல் ராக்கெட் பாகங்கள் சைக்கிளில் வைத்தும், மாட்டு வண்டியில் வைத்தும் கொண்டு வரப்பட்டன, அதை பெரிய அளவில் கேலி செய்தன பிற நாடுகள்..!

இன்று : 



வளர்ந்த நாடுகள் அனைத்தும் இஸ்ரோவின் வளர்ச்சியை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறது, சில நாடுகல் இஸ்ரோவின் உதவியை நாடுகிறது. இதற்கெல்லாம் பிரதான காரணம் - டாக்டர் அப்துல் கலாம்..!

No comments:

Post a Comment

welcome ur comment,