Wednesday, March 4, 2015

கடலில் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி போன்ற மாயை தோற்றம் தரும் மொரீஷியஸ் தீவு

கடலில் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி போன்ற மாயை தோற்றம் தரும் மொரீஷியஸ் தீவு


போர்ட் லூயிஸ்: மொரீஷியஸில் உள்ள கடற்பரப்பை படு வித்தியாசமாக புகைப்படம் எடுத்து புதிய கற்பனையைத் தூண்டி விட்டுள்ளார் ஒரு புகைப்படக்காரர். 

மேலிலிருந்து பார்க்கும்போது அந்தக் கடல் பரப்பானது ஒரு பெரிய நீர்வீழ்ச்சி போல தோற்றம் தந்து வியப்பில் விழிகளையும், இதயங்களையும் விரிய வைக்கிறது. 

இந்தியக் கடலில் அமைந்துள்ள தீவுதான் மொரீஷியஸ். அராபியர்கள்தான் இந்தத் தீவை கண்டறிந்தனர். கிபி 975ம் ஆண்டு இந்தத் தீவு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தத் தீவு போர்ச்சுகீசியர்கள் வசம் போனது. பிறகு படிப்படியாக பிரெஞ்சு, டச்சு, பிரிட்டிஷ் என கை மாறியது. 

1968ம் ஆண்டு சுதந்திரம் பெற்று, 1992ம் ஆண்டு குடியரசாக மாறிய நாடு மொரீஷியஸ். இந்தத் தீவு நாட்டின் தென் மேற்கு முனைப் பகுதியில்தான் இந்த பிரமாண்ட "நீர்வீழ்ச்சி" காணப்படுகிறது. மேலிருந்து இந்தப் பகுதியைப் பார்க்கும்போது இந்த இடம் பெரிய நீர்வீழ்ச்சி போல தோற்றம் தருகிறது. 

அதேபோல செயற்கைக் கோள் வழியாக இதைப் படம் எடுத்தபோதும் இதை விட அது பிரமிப்பைக் கூட்டுவதாக உள்ளது. உண்மையில் இங்கு நீர்வீழ்ச்சி ஏதும் இல்லை. மாறாக, கடலோரம் உள்ள மணல் திட்டுக்கள் காரணமாகவே இப்படி நீர்வீழ்ச்சி போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மொரீஷியஸ் தீவே கண்ணுக்கு விருந்தான ஒன்று.. அதில் இந்த கூடுதல் மாயை மேலும் பிரமிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது....!

No comments:

Post a Comment

welcome ur comment,