Sunday, June 1, 2014

இந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்!!!

இந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்!!!


உலகத்தில் உள்ள நாடுகளில் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி பேசுகையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இங்கே பல இடங்கள் பேய்களுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல இடங்களில் ஆவி நடமாட்டம் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அதற்கு காரணம் அந்த இடத்தின் வரலாறு மற்றும் அங்கே நடந்தேறிய நிகழ்வுகள். இதுவே அந்த இடங்களை ஆவி நடமாடும் இடமாக மாற்றிவிட்டது.

இந்தியாவில் சில இடங்கள் ஆவி நடமாடும் இடங்களாக திகழ்கிறது என சில அமானுஷ்ய வல்லுனர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு, இந்தியாவில் ஆவி நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்றாக திகழ்கிறது பனார்க் என்ற இடம். ராஜஸ்தானில் உள்ள இந்த இடத்தைச் சுற்றி பல கதைகள் பிண்ணப்பட்டிருக்கிறது. மிகவும் அழகிய இடமாக இருந்த பனார்க் இன்று பாழடைந்து, அழிந்த பகுதியாக உள்ளது.

இப்படி ஆவி நடமாடும் இடங்களானது, கிராமங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. காரணம் இந்தியாவில் முக்கியமான சில நகரங்களிலும் கூட ஆவி நடமாடும் இடங்கள் இருக்கத் தான் செய்கிறது. மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கட்டா, உத்தர பிரதேசம் போன்ற நகரங்களில் ஆவி நடமாடும் இடங்கள் உள்ளது. அங்கே வசிக்கும் மக்கள் சிலர், உறைய வைக்கும் சில அமானுஷ்ய நிகழ்வுகளைப் பற்றி புகார் எழுப்பியுள்ளனர்.


வேறு: பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!! சில இடங்கள் மிகவும் ஆபத்தாக இருந்தாலும் கூட, பல பேய்களும் தீய ஆத்மாக்களும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு மும்பையில் உள்ள பிரிஜ்ராஜ் பவன் அரண்மனை அல்லது டிசோசா சாவல் ஆஃப் மாஹிம் போன்ற இடங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த இடங்களை பார்க்கும் போது உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அங்கே இருக்கும் தீய சக்திகள் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை என மக்கள் கூறுகின்றனர். சரி அப்படிப்பட்ட இடங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம் வாங்க!

பன்கர்ஹ் கோட்டை, 


ராஜஸ்தான் ஆவி நடமாடும் இடங்களின் மீது நாட்டம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக பன்கர்ஹ் கோட்டையைப் பற்றி தெரிந்திருக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்கர்ஹ் என்ற புகழ்பெற்ற நகரம், இந்தியாவில் உள்ள ஆவி நடமாடும் இடங்களில் ஒன்றாகும். 

இந்த இடத்தைப் பற்றி பல கதைகள் உள்ளது. இங்கே தொலைந்து போனவர்களைப் பற்றி பல புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பிரச்சனைகளை தவிர்க்க, அந்த மாநிலத்தின் அரசாங்கம் ஒரு எச்சரிக்கை பலகையை அதன் நுழைவாயிலில் மாட்டியுள்ளது.

ராமோஜி ஃபிலிம் சிட்டி, 


ஹைதராபாத் இந்தியாவில் ஆவி நடமாடும் முதன்மையான இடங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. காரணம் வீரர்கள் செத்து மடிந்த போர்க்களத்தில் தான் இந்த பிலிம் சிட்டி கட்டப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் உணவகங்கள் கூட அங்கே நிலவும் அமானுஷ்யத்தைப் பற்றி கூறியுள்ளார்கள்.

டுமாஸ் கடற்கரை, 


குஜராத் இந்த புகழ்பெற்ற சுற்றுலாத்தளமும் ஆவி திரிகின்ற இடமாக கருதப்படுகிறது. இரவு நேரத்தில் இந்த கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கவும். காரணம், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, பலர் இங்கே தொலைந்து போயுள்ளனர். இந்த கடற்கரையை முன்பொரு காலத்தில் மனித சடலங்களை எரிக்க இந்துக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

டவ் மலை, மேற்கு வங்காளம் 


குர்சியாங் என்ற இடத்தில் உள்ள இந்த மலையில் உள்ள பள்ளியிலும், காட்டிலும் பேய் நடமாட்டம் இருக்கிறது என நம்பப்படுகிறது. இங்கே நடந்துள்ள பல கொலைகளும் அமானுஷ்யங்களும், இங்கே உள்ள மக்களிடம் பீதியை கிளப்பியுள்ளது.

செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள பேய் வீடு, 


பெங்களூரு இந்தியாவில் ஆவி நடமாடும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே மர்மமான முறையில் கொலை செய்யப்பட சின்னப்பெண் மற்றும் அங்கே நடக்கும் அமானுஷ்ய செயல்கள் இந்த இடத்தைப் பற்றி பல கதைகளை கிளப்பியுள்ளன.

டெல்லி கண்டோன்மென்ட், டெல்லி 


டெல்லியில் ஆவி நடமாடும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே உள்ள அடர்ந்த பச்சை பசுமையான காட்டில் பேய் நடமாட்டம் உள்ளதென்று நம்பப்படுகிறது. காரணம், அங்கே வெள்ளை நிற சேலையில் ஒரு பெண் உடன் பயணிக்க உதவி கோருவதை பலர் கண்டுள்ளனர். அப்பெண் உங்கள் பின்னாலேயே ஓடி வந்து உங்களை முந்தியும் செல்வாளாம்.

ஷனிவார்வாடா கோட்டை, 


பூனே இங்கே இரவு நேரத்தில் ஒரு பையனின் அலறல் சத்தம் கேட்குமாம். இங்கே நிலவும் கதைகளின் படி, தன் உறவினர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட 13 வயது இளவரசனால், இக்கோட்டையில் பேய் நடமாட்டம் உள்ளதாம். பௌர்ணமி அன்று இங்கே பேய் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

பெங்களூரு சர்வதேச விமான நிலையம் 


விமான நிலையம் போன்ற சுறுசுறுப்பான இடத்தில் ஆவி நடமாட்டம் இருக்கும் என்றால் யாராவது நம்புவார்களா? பயணிகளும். பணியாளர்களும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சில அமானுஷ்ய செயல்களை கண்டுள்ளனர்.

சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் 


தமிழ் நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயம் மற்றும் மாநிலத்தின் நான்காவது பெரிய புலிகள் சரணாலயமான இங்கேயும் ஆவி நடமாட்டம் இருக்கிறது என கூறப்படுகிறது. 2004-ல் வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு, அங்கே சில அமானுஷ்ய செயல்களும், நிகழ்வுகளும் மக்களை அச்சுறுத்தியுள்ளது. தானாக கண்ணாடி விளக்கு காற்றில் பறப்பதும், நெடுஞ்சாலையில் ஆவிகள் நடமாடுவதும், இந்த சரணாலயத்தை ஆவி நடமாடும் இடமாக மாற்றியுள்ளது.

thanks to
one india.

No comments:

Post a Comment

welcome ur comment,