ஷூவில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க சில எளிய வழிகள்!!!
அன்றாடம் அலுவலகம் செல்லும் போது அணிந்து செல்லும் ஷூவை வீட்டிற்கு வந்ததும் கழற்றும் போது வாந்தி வரும் அளவில் துர்நாற்றம் வீசுகிறதா? இந்த துர்நாற்றம் வீசுவதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லையா? அப்படியானால் தொடர்ந்து படித்து வாருங்கள். பொதுவாக பெரும்பாலானோர் ஷூவை துவைக்கவேமாட்டார்கள். மழை வந்தால் மட்டும் தான், ஷூவிற்கு பலர் தண்ணீரிலேயே நனைப்பார்கள். முக்கியமாக பேச்சுலர்கள் ஷூவை கண்டு கொள்ளவேமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்காக
இங்கு அன்றாடம் அணியும் ஷூவில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை எப்படி எளிமையாக போக்குவதற்கு ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முயற்சித்து வந்தால், ஷூவில் இருந்து வரும் துர்நாற்றத்தைப் போக்கலாம்.
பேக்கிங் சோடா
அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும், ஷூவில் சிறிது பேக்கிங் சோடாவை தூவி இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு, காலையில் அதனை அணியும் போது தட்டிவிட்டு பின் அணிந்து வந்தால், ஷூவில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்கலாம்.
டால்கம் பவுடர்
தினமும் ஷூ போடும் முன், கால்களில் டால்கம் பவுடரை தடவி, பின் ஷூ போட்டு வந்தால், பவுடரானது வியர்வை சுரப்பியை அடைத்துவிடும். இதனால் வியர்வை வெளியேறாமல் இருப்பதுடன், துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.
உப்பு
ஷூவில் உள்ள துர்நாற்றத்தைப் போக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது உப்பை ஒரு கவரில் போட்டு கட்டி, அதனை இரவில் படுக்கும் போது ஷூவில் வைத்து வந்தால், துர்நாற்றம் நீங்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு காட்டனில் நனைத்து, அதனைக் கொண்டு ஷூவை துடைத்து, பின் சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடம் வைத்து எடுத்தால், ஷூவில் இருந்து வெளிவரும் நாற்றம் போய்விடும்.
சூரிய வெளிச்சம்
நாற்றம் வீசும் ஷூவை சூரிய வெளிச்சத்தில் வைத்து எடுத்தால், நாற்றமானது நீங்கிவிடும். ஆனால் ஷூவை சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் வைத்தால், ஷூ பாழாகிவிடும். எனவே கவனமாக இருங்கள்.
நாப்தலின் பந்துகள்
பூச்சிகளை விரட்ட உதவும் நாப்தலின் பந்துகளை ஷூவில் போட்டு வைத்தால், துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.
கரித்துண்டு
கரித்துண்டுகளும் துர்நாற்றத்தைப் போக்க உதவும். அதற்கு கரித்துண்டுகளை ஒரு பையில் போட்டு, அதில் ஒரு ஓட்டை போட்டு, ஷூவின் உள்ளே 1 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும்.
உறைய வையுங்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் ஷூவைப் போட்டு,
அதில் ஊசி வைத்து ஒரு துளையிட்டு, பின் அதனை ஃப்ரீசரில் இரவில் படுக்கும் போது வைத்து எடுங்கள். இதனால் ஷூவில் நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அதிகப்படியான குளிர்ச்சியினால் அழிந்துவிடும்.