Saturday, August 31, 2013

ஹாஸிம் அம்லா வழியில் சில விளையாட்டு வீரர்கள்

ஹாஸிம் அம்லா வழியில்  சில விளையாட்டு வீரர்கள்....

ஹாஸிம் அம்லா வழியில் இங்கிலாந்து வீரர்



லண்டன்: முயீன் முனீர் அலி. தற்பொழுது இங்கிலாந்து உள்ளக பிரபல அணிகளுக்கிடையில் பேசப்பட்டுவரும் ஒரு வீரர். தற்பொழுது வூஸ்டர்செயார் கவுண்டி அணியில் விளையாடி கலக்கி வருகிறார் முயீன் அலி. ஜூன் 18, 1987இல் இங்கிலாந்து, பேர்மிங்கம் நகரில் பிறந்த இவர், தற்பொழுது இங்கிலாந்து தேசிய அணிக்குள் எதிர்பார்க்கப்படும் வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.



இடது கை துடுப்பாட்டம் மற்றும் வலது கை ‘ஓப்’ சுழல் பந்து வீச்சாளர் என்ற சகலதுறை வீரராக தனது கவுண்டி அணியில் சாதனைக்கு மேல் சாதனைகளை பதிவு செய்து வருகின்றார். முன்னாள் இங்கிலாந்தின் சிறந்த துடுப்பாட்ட வீரரான கிரகம் ஹிக், இதே கவுண்டி அணியில் நிகழ்த்திய சாதனைகளை முயீன் அலி தற்பொழுது நிரப்பி வருகின்றார். பத்தொன்பது வயதுக்கிடைப்பட்ட இங்கிலாந்து அணியில் விளையாடியதன் பின்னர் கவுண்டி அணியில் தனக்கொரு இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.



பாகிஸ்தான் பூர்வீகத்தைக் கொண்ட முயீன் அலி, சிறந்த மார்க்கப்பற்றுள் இளைஞர். விளையாட்டின்போது தொழுகைகளை விடமாட்டார். ஓய்வு நேரங்களில் புனித அல்குர்ஆனை ஓதி, ஆராய்ந்து வருகின்றார். இதனால் முயீன் அலியை இங்கிலாந்து மக்கள் மற்றுமொரு ஹாஸிம் அம்லா என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

இதுவரை 102 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள முயீன் அலி, 5,984 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவற்றுள் 10 சதங்களும், 37 அரைச்சதங்களும் உள்ளடங்கும்.

எதிர்காலத்தில் இங்கிலாந்து தேசிய அணிக்குள் பிரவேசிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன

இந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம். இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர். 
இந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம். 
இந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர். 
ஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல்.
 
இஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை "வலீத்" என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வலீத் என்றால் "புதிதாக பிறந்தவன்" என்று பொருள். 
பார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அவருடைய முடிவிற்கு சக தென்ஆப்பிரிக்க வீரர்களான ஹாசிம் அம்லாவோ அல்லது இம்ரான் தாஹீரோ காரணமல்ல என்று தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளரான முஹம்மது மூசாஜி குறிப்பிட்டுள்ளார். 
இதனை உறுதிப்படுத்தியுள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள், பார்னெல்லின் மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம் மீதான பற்றைக்கண்டு தாங்கள் கவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான  Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூறுகின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.
 
மதுபான கம்பெனி "லோகோ" போட்ட "ஜெர்சி" அணிந்து விளையாட முடியாது : கிரிக்கெட் வீரர் "ரசூல் பர்வேஸ்" அதிரடி!


புனே வாரியர்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் "ரசூல் பர்வேஸ்" மதுபான கம்பெனியின் லோகோவுடன் கூடிய "ஜெர்சி" அணிந்து விளையாட முடியாது என தெரி...வித்து விட்டார்.

இதையடுத்து, அந்த லோகோவின் மீது "டேப் ஒட்டி மறைத்து"விட்டு, அவர் போட்டியில் கலந்துக் கொண்டார்.

சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான விளையாட்டின் போது, இந்த சம்பவம் நடந்தேறியது.
IPL போட்டியின் ஸ்பானசரான அந்த மதுபான கம்பெனியின் லோகோ குறித்து தெரிந்தவுடன் இந்த முடிவை அவர் எடுத்ததாக தெரிவித்தார்.

தற்போது, பயிற்சி ஆட்டங்களிலும் குறிப்பிட்ட அந்த லோகோ உள்ள "ஜெர்சி" அணியமுடியாது என தெரிவித்து விட்டார்,ரசூல்.
இது குறித்து, IPL ன் நிர்வாகத்துக்கு முறையாக தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், மேலும் தெரிவித்தார், ரசூல் பர்வேஸ்.

நான் முதலில் ஒரு முஸ்லிம், பிறகு தான் கிரிக்கெட் வீரர், கிரிக்கெட்டுக்காக எனது இஸ்லாமிய கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்றார்,அவர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 24 வயது கிரிக்கெட் வீரர் ரசூலுக்கு, ரோல் மாடலாக திகழும் பிரபல கிரிக்கெட் வீரர் "ஹாஷிம் ஆம்லா" மதுபான கம்பெனி ஸ்பான்சர் செய்யும் எந்த போட்டிகளிலும் கலந்துக் கொள்வதில்லை என்பதை கொள்கையாக செயல்படுத்தி வருகிறார்.
"ஹாஷிம் ஆம்லா"
http://rahmanfayed.blogspot.in/2013/02/blog-post_18.html.

ஹாஸிம் அம்லா வழியில் கிரிக்கெட் வீரர் மட்டும் அல்ல பிரபல காலபந்தாட்டா வீரர் யாயா டோரே (Yaya toure)..

 


லகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார்.
இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சற்றே சிந்தித்து பாருங்கள். இன்று உலக ஊடகங்கள் பலவும் இந்த செய்தியை பெரிய அளவில் பேசுகின்றன. கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும் இந்த வீரர், தன்னுடைய இந்த செயலால் பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார்.
யார் இவர்?
எந்த போட்டி அது?
என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்?
தற்போது நடந்துவரும் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) போட்டிகளில் தான் இந்த சம்பவம் சென்ற ஞாயிறுக்கிழமை நடந்தேறியுள்ளது. இந்த வீரரின் பெயர் யாயா டோரே (Yaya toure). ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த இவர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ப்ரீமியர் லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கிய tournament-டையும் வென்றதில்லை மான்செஸ்டர் சிட்டி. தற்போது யாயா டோரே போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தால் மகுடம் கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இன்னும் ஒரே ஒரு ஆட்டம் தான். அதில் வென்று விட்டால் சரித்திரம் படைக்கப்போகின்றது இந்த டீம்.
யாயா டோரே - இந்த மனிதர் கால்பந்தாட்ட ஹீரோக்களில் ஒருவராக பார்க்கப்படுகின்றார். மிகச் சிறந்த மத்தியகள ஆட்டக்காரரான இவர் பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், நீண்ட தூரம் லாவகமாக பாஸ் செய்வதிலும், போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதிலும் கில்லாடி.
Yaya Toure (Image courtesy - goal.com)
ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று விருதை (African Footballer of the Year) 2011-ஆம் ஆண்டு பெற்ற இவர், தேவைப்பட்டால் முன்னேறிச்சென்று தாக்குவதிலும் வல்லவர். இதனாலேயே இவருக்கு box-to-box player என்ற செல்லப்பெயரும் உண்டு.
கடந்த ஞாயிறுக்கிழமை newcastle அணியுடன் நடந்த முக்கிய போட்டியில் தன் அணிக்காக இரண்டு கோல்களை போட்டு வெற்றி தேடித்தந்தார் டோரே. இதற்காக ஆட்டநாயகனாக தேந்தேடுக்கப்பட்ட அவருக்கு பெரிய ஷாம்பைன் (champagne) பாட்டில் பரிசாக கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தன் பக்கத்தில் இருந்த சக வீரரிடம் கொடுத்துவிட்டார் டோரே.
என்ன காரணம்?
இதற்கு அவர் கூறிய காரணம், "நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம் (I don't drink because I am a Muslim)"

மது வாங்க மறுத்த காட்சியை கீழே காணலாம்.

EPL நிர்வாகத்தாருக்கு யாயா டோரேயின் இந்த செய்கை சங்கடத்தை தந்தாலும், இந்த நிகழ்வுக்கு பின்னணியில் மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. அதாவது, இம்மாதிரி நடக்கலாம் என்று முன்பே தாங்கள் யூகித்து பரிசை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்ததாக கூறி மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளனர் நிர்வாகத்தினர். இருப்பினும், ஷாம்பைன், வீரர்களால் மிகவும் விரும்பப்படும் பரிசு என்பதால் அதனை மாற்ற வேண்டாம் என்று இறுதியில் முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் எண்ணியது போலவே தற்போது நடந்துள்ளதால், எதிர்காலத்தில் பரிசுகளில் மாற்றம் கொண்டு வர எண்ணியுள்ளனர். அதாவது, ஷாம்பைன் பாட்டிலுடன் பதக்கவில்லையும் சேர்த்து தர திட்டம் தீட்டியுள்ளனர். மது வேண்டாமென்னும் வீரர்களுக்கு பதக்கம் மட்டும் தரப்படும்.
மான்செஸ்டர் சிட்டி அணியின் முக்கிய வீரர்கள் பலரும் முஸ்லிம்கள் என்பதால் அவர்களுக்கென தனி தொழுகை அறை வசதியை அணி நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

நட்சத்திரங்களின் செய்கைகள் அவர்களது ரசிகர்களை பாதிக்கும் என்பது உண்மை. அந்த வகையில் மதுவை நிராகரித்து தன் ரசிகர்களுக்கு ஒரு மிக சிறந்த முன்னுதாரணத்தை காட்டிவிட்டார் யாயா டோரே என்றால் அது மிகையாகாது.
இஸ்லாத்தை பின்பற்றும்  சிறந்த மார்க்கப்பற்றுள் கிரிக்கெட் வீரர் ஹாஸிம் அம்லா பற்றி அறிய  <<இங்கே>> சுட்டவும்.

http://rahmanfayed.blogspot.in/2013/02/blog-post_18.html.

.
 specialthanks to 

எதிர்க்குரல் aashiq ahamed.


Sunday, August 25, 2013

வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொன்றது ஏன்... ?


வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொன்றது ஏன்... ?




வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொன்றது ஏன்... ?
....................................................................................


இளைஞர்களே தெரிந்து கொள்ளுங்கள்..
.....................................................................

அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது.

மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை ...விலக்கி வருகிறது..

ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று.

சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று,

ஆஷ், கேட்கிறார்,

மனிதர்களில் தாழ்ந்தவர்களா,

அவர்கள், திருடும் இனமா? என்றான்?

இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்.

வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” –

அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.

அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை.

அங்கே, ஒரு பிரசவ வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள். சுற்றிலும் நான்கைந்து பெண்களும், தூரத்தில் சில ஆண்களும்.

ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று..

பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன்,

ஆஷ் கேட்கிறான்,

பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று.

அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான்,

அய்யா,

அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும்.

வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும்.

ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப்பட்டு இருக்கிறோம்.

ஆஷ், அங்கிருந்தவர்களைப் பார்த்துச் சொல்கிறார்,

” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன்,

உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள்.

நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன், என்று சொல்லி சொன்னது போல் செய்தான்,

அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டாள் என்கிற செய்தி,பரவியது.

வாஞ்சிநாதன் ஒரு உயர் சாதித் தீவிர வாதி.

எப்பாடு பட்டாவது வர்ணங்களையும்,

குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும்

ஒரு சாதியக் குலக் கொழுந்து.



அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணி மனியாச்சியின் புகை வண்டி நிலையத்தில் வைத்து,

வாஞ்சினாதன் என்கிற பிராமணன் ஆஷ் துரையைத் தன் துப்பாக்கித் தோட்டாவுக்கு இரையாக்கிய போது அவனுக்கே தெரியாது,


நமக்கு இப்படி ஒரு நாட்டுப் பற்று விருது கிடைக்கும் என்று.

மனிதம் காப்பாற்றிய ஆஷ் துரை வரலாற்றினை எப்படி மறைத்திருக்கிறது இந்த வரலாற்று உண்மை.,

நன்றி..செல்வா கவிஞர்,

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்..

Saturday, August 17, 2013

கமல் கண்ணன கார்ட்டூன் பேசுகிறது....

படம் பார்த்து கதை சொல்…..!

 கார்ப்பரேட் காவாலிகளால் நாம் இழக்கும் நம் வளங்கள்… !!!
மூளை மழுங்கடிக்க பட்ட கிரிக்கெட் கிறுக்கன்கள் ஒரு புறம் ,,, வக்கிரம் கொண்ட காம வெறியன்கள் மறு புறம் …!
அய்யோகோ ! இதுதான் உணர்ச்சி பொங்கும் தேசபக்தியின் வெளிபாடோ ???


பேசும் படம் !!

இந்திய விவசாயின் இன்றைய நிலை ! நாளைய நம்முடைய நிலைமை ? நன்றி

 

 படம் பார்த்து கதை சொல்

இந்த ஒரு படம் சொல்லும் ஓராயிரம் கருத்து புரிகிறதா நண்பர்களே சிந்தித்து செயல்படுவோம் இயற்கைச்சூழல் காப்போம் மனித சந்ததிக்கு வளம் சேர்ப்போம்……!!!




யுவர் அட்டென்சன் ப்ளீஸ்…! உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையென்றால் இருக்க வையுங்கள்.வெறும் இரண்டே நிமிடங்கள்… படத்திலிருக்கும் முறை போல் உங்களின் கை மூட்டு மற்றும் கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்கும் படி செய்து கொள்ளுங்கள். இது யோகாசன முறை போலதான்.இப்படி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றால் போதும் (ஒரு நிமிடம் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளி விடும்). அப்படி நிற்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு நிமிடங்களாக முயற்சி செய்யுங்கள்.

பின் இரண்டு நிமிடங்கள் என்று மூன்று முறை செய்தால் போதும்… நாளாக நாளாக நிமிடங்களை அதிகரியுங்கள்… நேரத்தை வெகுவாக குறைக்கும் பயிற்சி… இதன் பலனை இரண்டே வாரங்களில் நீங்கள் காணலாம்… குண்டானவர்களுக்கு மட்டுமல்ல மெலிந்தவர்களும், பெண்களும் செய்யலாம்…





சிந்திக்க வேண்டிய தருணம் !!

 thanks to

  கமல் கண்ணன.

இன்று ஒரு தகவல்(பக்கம்)