இந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த
உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில்
அவர் நடந்துக்கொண்டவிதம். இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை
என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர்.
இந்த
மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம்.
இந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து
வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர்.
ஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு
உதாரணம் சகோதரர் பார்னெல்.
இஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய
இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை "வலீத்" என
மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வலீத் என்றால்
"புதிதாக பிறந்தவன்" என்று பொருள்.
பார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு
பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அவருடைய முடிவிற்கு சக
தென்ஆப்பிரிக்க வீரர்களான ஹாசிம் அம்லாவோ அல்லது இம்ரான் தாஹீரோ காரணமல்ல
என்று தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளரான முஹம்மது மூசாஜி
குறிப்பிட்டுள்ளார்.
இதனை உறுதிப்படுத்தியுள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள், பார்னெல்லின்
மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம்
மீதான பற்றைக்கண்டு தாங்கள் கவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது
பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல்
தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான Castle Lager (பீர்
நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் தங்களை மிகவும்
கவர்ந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூறுகின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது
அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.
மதுபான கம்பெனி "லோகோ" போட்ட "ஜெர்சி" அணிந்து
விளையாட முடியாது : கிரிக்கெட் வீரர் "ரசூல் பர்வேஸ்" அதிரடி!
புனே வாரியர்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் "ரசூல் பர்வேஸ்" மதுபான கம்பெனியின் லோகோவுடன் கூடிய "ஜெர்சி" அணிந்து விளையாட முடியாது என தெரி...வித்து விட்டார்.
இதையடுத்து, அந்த லோகோவின் மீது "டேப் ஒட்டி மறைத்து"விட்டு, அவர் போட்டியில் கலந்துக் கொண்டார்.
சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான விளையாட்டின் போது, இந்த சம்பவம் நடந்தேறியது.
IPL போட்டியின் ஸ்பானசரான அந்த மதுபான கம்பெனியின் லோகோ குறித்து தெரிந்தவுடன் இந்த முடிவை அவர் எடுத்ததாக தெரிவித்தார்.
தற்போது, பயிற்சி ஆட்டங்களிலும் குறிப்பிட்ட அந்த லோகோ உள்ள "ஜெர்சி" அணியமுடியாது என தெரிவித்து விட்டார்,ரசூல்.
இது குறித்து, IPL ன் நிர்வாகத்துக்கு முறையாக தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், மேலும் தெரிவித்தார், ரசூல் பர்வேஸ்.
புனே வாரியர்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் "ரசூல் பர்வேஸ்" மதுபான கம்பெனியின் லோகோவுடன் கூடிய "ஜெர்சி" அணிந்து விளையாட முடியாது என தெரி...வித்து விட்டார்.
இதையடுத்து, அந்த லோகோவின் மீது "டேப் ஒட்டி மறைத்து"விட்டு, அவர் போட்டியில் கலந்துக் கொண்டார்.
சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான விளையாட்டின் போது, இந்த சம்பவம் நடந்தேறியது.
IPL போட்டியின் ஸ்பானசரான அந்த மதுபான கம்பெனியின் லோகோ குறித்து தெரிந்தவுடன் இந்த முடிவை அவர் எடுத்ததாக தெரிவித்தார்.
தற்போது, பயிற்சி ஆட்டங்களிலும் குறிப்பிட்ட அந்த லோகோ உள்ள "ஜெர்சி" அணியமுடியாது என தெரிவித்து விட்டார்,ரசூல்.
இது குறித்து, IPL ன் நிர்வாகத்துக்கு முறையாக தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், மேலும் தெரிவித்தார், ரசூல் பர்வேஸ்.
நான் முதலில் ஒரு முஸ்லிம், பிறகு தான் கிரிக்கெட் வீரர், கிரிக்கெட்டுக்காக எனது இஸ்லாமிய கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்றார்,அவர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 24 வயது கிரிக்கெட் வீரர் ரசூலுக்கு, ரோல் மாடலாக திகழும் பிரபல கிரிக்கெட் வீரர் "ஹாஷிம் ஆம்லா" மதுபான கம்பெனி ஸ்பான்சர் செய்யும் எந்த போட்டிகளிலும் கலந்துக் கொள்வதில்லை என்பதை கொள்கையாக செயல்படுத்தி வருகிறார்.
"ஹாஷிம் ஆம்லா"
http://rahmanfayed.blogspot.in/2013/02/blog-post_18.html.
ஹாஸிம் அம்லா வழியில் கிரிக்கெட் வீரர் மட்டும் அல்ல பிரபல காலபந்தாட்டா வீரர் யாயா டோரே (Yaya toure)..
உலகின்
பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று.
முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு
கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர்.
ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க
மறுத்துவிடுகின்றார்.
இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சற்றே சிந்தித்து
பாருங்கள். இன்று உலக ஊடகங்கள் பலவும் இந்த செய்தியை பெரிய அளவில்
பேசுகின்றன. கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும்
இந்த வீரர், தன்னுடைய இந்த செயலால் பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள்
மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார்.
யார் இவர்?
எந்த போட்டி அது?
என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்?
தற்போது நடந்துவரும் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) போட்டிகளில் தான் இந்த
சம்பவம் சென்ற ஞாயிறுக்கிழமை நடந்தேறியுள்ளது. இந்த வீரரின் பெயர் யாயா டோரே (Yaya toure). ஐவரி கோஸ்ட்
நாட்டை சேர்ந்த இவர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ப்ரீமியர்
லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கிய
tournament-டையும் வென்றதில்லை மான்செஸ்டர் சிட்டி. தற்போது யாயா டோரே
போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தால் மகுடம் கிடைக்கலாம் என்று
எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இன்னும் ஒரே ஒரு ஆட்டம் தான். அதில் வென்று
விட்டால் சரித்திரம் படைக்கப்போகின்றது இந்த டீம்.
யாயா டோரே - இந்த மனிதர் கால்பந்தாட்ட ஹீரோக்களில் ஒருவராக
பார்க்கப்படுகின்றார். மிகச் சிறந்த மத்தியகள ஆட்டக்காரரான இவர் பந்தை தன்
கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், நீண்ட தூரம் லாவகமாக பாஸ் செய்வதிலும்,
போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதிலும் கில்லாடி.
Yaya Toure (Image courtesy - goal.com)
ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று விருதை (African
Footballer of the Year) 2011-ஆம் ஆண்டு பெற்ற இவர், தேவைப்பட்டால்
முன்னேறிச்சென்று தாக்குவதிலும் வல்லவர். இதனாலேயே இவருக்கு box-to-box
player என்ற செல்லப்பெயரும் உண்டு.
கடந்த ஞாயிறுக்கிழமை newcastle அணியுடன் நடந்த முக்கிய போட்டியில் தன்
அணிக்காக இரண்டு கோல்களை போட்டு வெற்றி தேடித்தந்தார் டோரே. இதற்காக
ஆட்டநாயகனாக தேந்தேடுக்கப்பட்ட அவருக்கு பெரிய ஷாம்பைன் (champagne)
பாட்டில் பரிசாக கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தன்
பக்கத்தில் இருந்த சக வீரரிடம் கொடுத்துவிட்டார் டோரே.
என்ன காரணம்?
இதற்கு அவர் கூறிய காரணம், "நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு
முஸ்லிம் (I don't drink because I am a
Muslim)"
மது வாங்க மறுத்த காட்சியை கீழே காணலாம்.
மது வாங்க மறுத்த காட்சியை கீழே காணலாம்.
EPL நிர்வாகத்தாருக்கு யாயா டோரேயின் இந்த செய்கை சங்கடத்தை தந்தாலும்,
இந்த நிகழ்வுக்கு பின்னணியில் மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. அதாவது,
இம்மாதிரி நடக்கலாம் என்று முன்பே தாங்கள் யூகித்து பரிசை மாற்றுவது
குறித்து ஆலோசனை செய்ததாக கூறி மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளனர்
நிர்வாகத்தினர். இருப்பினும், ஷாம்பைன், வீரர்களால் மிகவும் விரும்பப்படும்
பரிசு என்பதால் அதனை மாற்ற வேண்டாம் என்று இறுதியில் முடிவெடுத்ததாகவும்
தெரிவித்துள்ளனர்.
தாங்கள் எண்ணியது போலவே தற்போது நடந்துள்ளதால், எதிர்காலத்தில் பரிசுகளில்
மாற்றம் கொண்டு வர எண்ணியுள்ளனர். அதாவது, ஷாம்பைன் பாட்டிலுடன்
பதக்கவில்லையும் சேர்த்து தர திட்டம் தீட்டியுள்ளனர். மது வேண்டாமென்னும்
வீரர்களுக்கு பதக்கம் மட்டும் தரப்படும்.
மான்செஸ்டர் சிட்டி அணியின் முக்கிய வீரர்கள் பலரும் முஸ்லிம்கள் என்பதால்
அவர்களுக்கென தனி தொழுகை அறை வசதியை அணி நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது
இங்கே கவனிக்கத்தக்கது.
நட்சத்திரங்களின் செய்கைகள் அவர்களது ரசிகர்களை பாதிக்கும் என்பது உண்மை. அந்த வகையில் மதுவை நிராகரித்து தன் ரசிகர்களுக்கு ஒரு மிக சிறந்த முன்னுதாரணத்தை காட்டிவிட்டார் யாயா டோரே என்றால் அது மிகையாகாது.
இஸ்லாத்தை பின்பற்றும் சிறந்த மார்க்கப்பற்றுள் கிரிக்கெட் வீரர் ஹாஸிம் அம்லா பற்றி அறிய <<இங்கே>> சுட்டவும்.
http://rahmanfayed.blogspot.in/2013/02/blog-post_18.html.
.
specialthanks to
http://rahmanfayed.blogspot.in/2013/02/blog-post_18.html.
.
specialthanks to
No comments:
Post a Comment
welcome ur comment,