Tuesday, September 9, 2014

நாசாவின் நிலவிற்கான பயணமும் மர்மமும்....


நாசாவின் நிலவிற்கான பயணமும் மர்மமும்.... 






20/6/1969 அன்று அப்பலோ 11 விண்கலத்திட்டத்தின் படி நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் காலடிவைத்ததாக உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அதுவரை பூமியைத் தரையை தவிர வேறு தரைகளை கண்டிராத மக்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அப்பலோ திட்டத்தின் சுவடுகளாக கிடைக்கப்பெற்ற புகைப்படங்களும் வீடியோ ஆதாரங்களும் பெரும் விருந்தாக அமைந்தன. எனினும் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட காலம் தொட்டே பலரால் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுவந்துள்ளது. அந்த சந்தேகங்களையும் அவற்றின் உண்மைத்தன்மைகளையும் பார்ப்போம்... 

அமெரிக்க கொடி அசைந்தது. மிகப்பரவலாக சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு விடையம் இது. நாசா வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களின் படி நிலவில் அமெரிக்க கொடியை ஊன்றிய போது அக் கொடி அசைவதாக காட்டப்பட்டுள்ளது. நிலவில் வளி மண்டலமும் காற்றும் இல்லாத நிலையில் எப்படி கொடி அசைந்தது என்ற தர்க்கவியலான கேள்வி பல விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டது. நாசா அதற்கு கொடுத்த விளக்கம், அந்த கொடி விசேட தன்மையுடன் தயாரிக்கப்பட்டதாகவும்… அதில் அலைவடிவ அலங்கரிப்புக்கள் இருந்ததாகவும் அதுவே கொடி காற்றில் பறப்பது போன்ற விளைவை ஏற்படுத்தியதாகவும் மழுப்பியுள்ளார்கள்!... 

நிழல்களின் முரன்பாடு.


நிலவில் பெறப்பட்டதாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில், சம்பந்தப்பட்ட பொருட்கள், நபர்களின் நிழல்கள் ஒன்றிற்கொன்று முரன்பட்டதாக உள்ளது. (புகைப்படத்தை பாருங்கள்.) நிலவிற்கு ஒளிதரும் ஒரே ஒரு முதல் சூரியன். ஆகவே ஒரே திசையில் தான் நிழல்கள் விழவேண்டும். ஆனால், புகைப்படத்தில் இரண்டு திசைகளில் நிழல்கள் விழுகின்றன. ( நிலவில் காலடி வைத்த சம்பவம் ஒரு Stuido வில் எடுக்கப்பட்டதாகவும் அங்கு இருந்த இரு வேறு விளக்குகளின் விளைவாகவே இவ்வாறான நிழல்கள் உருவானதாகவும் கூறப்படுகிறது.)... 

இதற்கு நாசா கூறும் விளக்கம், நிலவின் தரை புவியின் தரை போன்று நீண்ட தூர சமதரை அல்ல, பல குன்றுகள் மலை வடிவங்களுடனான தரை. எனவே, குன்றுகளில் பட்டுத்தெறிப்படைந்த ஒளியினால் நிழலில் மாற்றம் ஏற்பட்டதாக அறிவித்தார்கள்.... 

விண்வெளி வீரர்களின் முகத்தில் தெரியும் மர்ம உருவம்! 

நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள் தங்களை தாங்களே எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் ஒன்றில், விண்வெளி வீரரின் முகக்கவசத்தில் திட்டத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு உருவம் தெரிகிறது! இது Stuido களில் பயன்படுத்தப்படும் கமெராவாக இருக்கும் என கருதப்படுகிறது.... 

இதற்கு இதுவரை நாசா விளக்கம் கொடுக்கவில்லை. ( தெளிவற்ற புகைப்படப்பிடிப்பு என நாசா விஞ்ஞானிகள் சிலர் காரணம் சொல்லியுள்ளார்கள்.)... 

நடை அசைவும் நாடாவும். நிலவில், நிலவில் ஈர்ப்புவிசைக்கு ஏற்றவாறு வீரர்கள் பாய்ந்து நடக்கிறார்கள். ஆனால், வீடியோவை உற்று அவதானிக்கும் போது அவர்கள் நாடாக்கள் மூலம் பாய்வது இனங்காணப்பட்டுள்ளது. அதாவது சினிமாக்களில் பயன்படுத்தப்படும் யுக்தி!... 

சார்பாளர்கள் சொல்லும் காரணம், “1970 ஆண்டு படப்பிடிப்பு கருவிகளில் இருந்த தொழில் நுட்ப கோளாறுகளின் விளைவே அது.” எனினும் ஒரு காட்சியில், தரையில் மண்டியிட்டிருக்கும் ஒரு விண்வெளி வீரர் எழும் போது சாதாரன பெளதீக விதிகளுக்கு ஏற்ப அவரது அசைவு இல்லை. அவரது முதுகுப்புறமாக மேல் நோக்கி இழுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. கால்களில் அசைவு மூலம் பறக்கும் நிலவு தூசுகள் உடனடியாவ தரையில் விழுகின்றன. (புவியின் ஈர்ப்பு விசையில் விழும் வேகத்தில்!)... 

நிலவின் கல்லில் “C” அடையாலம்! நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில், அங்கு தரையில் கிடக்கும் ஒரு கல்லில் “C” என்ற அடையாளம் உள்ளது. Stuido வில் அடையாளத்திற்காக போடப்பட்ட அது, ஒழுங்கமைப்பாளரின் தவறான திருப்பத்தால் கமெராவில் பதியப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.... 

நாசா சொல்லும் மழுப்பல் விளக்கம், புகைப்படத்தை முதல் அச்சிட்டவர் நகைச்சுவையாக போட்ட அடையாளம் அது என்றார்கள். பின்னர், அச்சிட்டவரின் தலைமுடி விழுந்திருக்கலாம் என்ரார்கள்.... 

நிலவின் பின்னனி. நிலவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் காட்சிகளில் ஒரே பின்னனி பயன்படுத்தப்பட்டிருப்பது இனங்காணப்பட்டுள்ளது. இதற்கு நாசா சொன்ன விளக்கம் நிலவின் பின்னனி புவியைப்போன்றதல்ல, ஒரே மாதிரியான அமைப்பை கொண்டது எனவே அப்படியொரு தோற்றப்பாடு என்றார்கள். ஆனால், ஒரே விண்வெளி பயண திட்டத்தில் எடுக்கப்பட்டதாக காட்டப்படும் காட்சிகளில் தரை இறங்கிய விண்கலம் ஒரு காட்சியில் இருக்கிறது, மறு காட்சியில் இல்லை! (படத்தை பாருங்கள்.)... 

மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது இப்படியான குற்றச்சாட்டுகளுக்கு நிலவில் முதலில் காலடிவைத்த மனிதன் நீல் ஆம்ஸ்ரோங் எந்த வித கருத்தையும் கூறாது இருந்தது தான்! (நீல் ஆம்ஸ்ரோங் நிலவிற்கு சென்றுவந்ததும் இஸ்லாம் மதத்தை தழுவினார். அதற்கு அவர் சொன்ன காரணம், நிலவில் ஓதும் சத்தத்தை கேட்டதாக. ஆனால், நிலவில் வளிமண்டலம் இல்லாதவிடத்து அதற்கு சந்தர்ப்பம் இல்லை! அவர் அப்படி சொன்னமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.)... 

அந்த காலகட்டத்தில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் விண்வெளியில் ஆதிக்கம் தொடர்பான பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. ஏற்கனவே 12/4/1961 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் சார்பாக விண்வெளியில் பயணித்த முதல் மனிதரானார் யூரி ககாரின். எனவே, அதை ஈடுகட்டும் முகமாக அமெரிக்கா நடத்திய நாடகமாக நிலவுப்பயணம் இருக்கலாம். மேலும், 4 சகாப்தங்களில் பாரிய தொழில் நுட்ப மேம்பாடுகளை கண்டிருந்தாலும், 1972 ஆம் ஆண்டிற்குப்பின்னர் அமெரிக்கா நிலவிற்கான பயணத்தை நிறுத்திக்கொண்டுள்ளது. நவீன நுட்பங்கள் இருந்தும் இப்போது பயணம் இல்லை 

சமீபத்தில், நிலவில் கால் பதித்ததற்காக இருந்த ஒரே ஒரு நேரடி ஒளிப்பதிவும் தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்டதாக நாசா அறிவித்தது!... 


( கண்டிப்பாக படித்து பகிரவும் )..



அம்பலமாகியுள்ள அமெரிக்காவின்   Area 51  இரகசியங்கள் காண இங்கே <<கிளிக்>> செயுங்கள் 

Monday, September 8, 2014

ஏலியன்ஸ்-10 : எமது உலகை செதுக்கிய ஏலியன்ஸ்!

ஏலியன்ஸ்-10 : எமது உலகை செதுக்கிய ஏலியன்ஸ்!

பார்ட்-1
பார்ட்-2

பார்ட் -3

பார்ட்-4
பார்ட்-5
பார்ட் - 6
பார்ட் -7
பார்ட்-8
பார்ட்-9

ஏலின்ஸ் எட்டவது  பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..

போன பதிவில்… கூறிய படி சில முரன்பாடான தகவல்களையும்… எகிப்திய பிரமிட்டின்… ஆச்சரிய தொழில் நுட்பத்தையும் பார்ப்போம். இன்றுடன்… ஏலியன்ஸ் எதிர்கால நாங்கள் தான் என்ற கோனத்திலான பார்வையை தற்காலிகமாக விட்டு விட்டு… ஏலியன்ஸ் உண்மையிலேயே வேற்றுக்கிரகத்தினர்தான்… என்ற கோணத்திலான பார்வையை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். ——————————————————————————————

“சிரியஸ் பி” எனும் நட்சத்திரம்… நவீன விஞ்ஞானக்கருவிகளுனுதவியுடன்… கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால்… தென்னாபிரிக்காவில் வாழும்.. டோஹான் என்ற பலங்குடி மக்கள் இதே சிரியஸ்ஸை அறிந்து வைத்துள்ளார்கள். அவர்களின்… பரம்பரை குறிப்புக்களிலும்… அவர்களுக்கென உள்ள பிரத்தியேக கலண்டரிலும்… இந்த சிரியஸ் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாம்....
——————————————————————————————-

சாதாரணமாக… இந்த சிரியஸ் பி நட்சத்திரம்… வெற்றுக் கண்ணுக்கு புலப்படாது. அப்படியானால்… இவர்களின் பரம்பரை குறிப்புக்களில்… எவ்வாறு அந்த நட்சத்திரம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது??? யார் சொல்லி இருப்பார்கள்??? ஏலியன்ஸா??? ( ஏற்கனவே… பண்டைய உலக வரை படத்தை உருவாக்கி கொடுத்தது நிச்சயம் ஏலியன்ஸ்தான்… என்ற கருத்து இருந்து வருகிறது. காரணம்… பூமியை விட்டு வெளியே சென்று பார்க்காமல்… கேள்வி ஞானத்தை மட்டும் வைத்து அவ்வாறான ஒரு வரை படத்தை வரைவதற்கு சந்தர்ப்பமே இல்லையாம்.) இவற்றுக்கு இன்று வரை தெளிவான விடையில...


அடுத்து… எகிப்திய பிரமிட கட்டப்பட்ட முறையும் மிகவும் வியப்பானதே…. அதுவும் முக்கியமாக… கீஸா பிரமிட்டில் பயண்படுத்தப்பட்டுள்ள கணித முறையும்… தொழில் நுட்பமும்… எவ்வாறு பயண்படுத்தினார்கள்… என்பதில் இன்றும் குழப்பங்கள் உள்ளன....

கீஸா பிரமிட்டில் 2.3 மில்லியன்ஸ் கற்கள் பயண்படுத்தப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றினதும் நிறை சுமார் 2.5 டன்கள்… இவ்வளவு நிறையையும் நேர்த்தியாக பக்க நீளங்கள் 230 மீட்டராக உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. சரிவு கூட 51 பாகையாக பேணப்பட்டுள்ளது. இன்றய தொழில் நுட்பத்திலேயே சற்று சிரமமான இந்த வேலையை… அவர்கள் அவ்வாறு தனியாக செய்தார்கள்??? மேலும்…...

மஹா பிரமிட் என அழைக்கப்படும் பிரமிட்டில்… நட்சத்திரங்கள்… கோல்கள்… உப கோல்ளின் அமைப்புக்கள்… போன்றவற்றின் நிலையான‌ அமைப்பு வரையப்பட்டுள்ளதாம். பூமியின் சுற்றளவு, விட்டம், பூமியின் திணிவு, புவியீர்ப்பினால் உண்டாகும் வேக வளர்ச்சி எல்லாம்… அந்த பிரமிட்களைக்கொண்டு அறியத்தக்கதாக உள்ளது....


இந்தளவு அறிவையும் அவர்களுக்கு கொடுத்தது யார்??? ஏலியன்ஸா??? அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான்… பிரமிட் சுவரோவியங்களில்… ஏலியன்ஸ் உதவுவது போன்று வரையப்பட்டுள்ளதா??? அப்படி ஏலியன்ஸ் உதவி இருந்தார்களானால்… ஏன் இப்போது எமக்கு தொழில் நுட்பம் கற்றுத்தரவில்லை??? ஏற்கனவே உதவியதால்… அவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டதனாலா???

தெளிவான விடையற்ற கேள்விகள்…...

எகிப்திய சாம்ராஜ்ஜத்தின் திடீர் வீழ்ச்சிக்கு… நைல் நதி வற்று மற்றும்… திடீர் பனியுகம் மட்டும்தான் காரணமா??? அல்லது அவற்றுக்கும்… ஏலியஸிக்கும் தொடர்பிருக்குமா??? சும்ம கேட்டன்… :) ——————————————————————————————-...

ம்ம்ம்… இதை எழுதிட்டு இருக்கும் போது இன்னும் சில சம்பவங்களும் நினைவுக்கு வருகிறது… அவை ஏற்கனவே எழுதியதுதான்…. இதை கிளிக் பண்ணி… மதம் என்பதை விடுத்து… பண்டைய அறிவு என்கிற ரீதியிலும்… இந்த அறிவு எப்படி வந்தது என்கிற ரீதியிலும்… இந்த சந்தர்ப்பத்துடன்… தொடர்பு படுத்தி பார்க்கவும். :) ——————————————————————————————-

இத்துடன்… இன்னும் தகவல்களை சேகரிக்கும் வரை… ” நாங்கள் தான்… ஏலியன்ஸ்” என்ற கொள்கையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு… ஏலியன்ஸ் உண்மையிலேயே… வேற்றுக்கிரக வாசிகளாக இருப்பதற்கான… சந்தர்ப்பங்களை பார்ப்போம்… நமது… சூரியகுடும்பம்… மற்றும் நட்சத்திரங்கள் உள்ளடங்களான… நம்து கலக்ஸியை நாங்கள் படமாகப்பாக்கிறோம்… அது எப்படி??? நாங்கள் ஒளியின் வேகத்தில் சென்றால் கூட… கல்க்ஸிக்கு வெளியே செல்ல பல நூறாண்டுகள் எடுக்குமே… அதுவும்… நாங்கள் இன்னமும் ஒளியின் வேகத்தை கிட்ட கூட நெருங்கவில்லை… அப்படி என்றால் எப்படி… இந்த படங்கள் எடுக்கப்பட்டன??

இதற்கான விடை பலருக்கு தெரிந்திருக்கும்… அவர்களுக்கு நான் என்ன சொல்ல போறன் என்பதும் விளங்கி இருக்கலாம்… குழப்பமாக உள்ளவர்களுக்கு அடுத்த பதிவில்… சுவாரஷ்யமான தகவல்களுடன் சந்திப்போம்.
——————————————————————————————-

கலக்ஷியை ஃபோட்டோ எடுத்தது எப்படி? நாங்கள் அண்டத்தில் எங்கே இருக்கிறோம்… ஏலியன்ஸ் எங்களுடன் தொடர்பு கொண்டார்களா? ஏன் நாங்கள் ஏலியன்ஸிடன் தொடர்பு கொள்ளவில்லை… அல்லது… கொண்டோமா?…...

Sunday, September 7, 2014

ஏலியன்ஸ்-9 : ஏலியன்ஸ் ஏன் நம்மை தாக்குவதில்லை? தாக்கினால் என்னவாகும்?

ஏலியன்ஸ்-9 : ஏலியன்ஸ் ஏன் நம்மை தாக்குவதில்லை? தாக்கினால் என்னவாகும்?

பார்ட்-1
பார்ட்-2

பார்ட் -3

பார்ட்-4
பார்ட்-5
பார்ட் - 6
பார்ட் -7
பார்ட்-8

ஏலின்ஸ் எட்டவது  பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..


போன பதிவில், தியரி ஒஃப் ரிலேட்டிவிடிபற்றி அறிந்ததை எழுதி இருந்தேன்… அந்த வேகத்தை அடைந்தால் என்ன பிரச்சனைகள் எழும் என்பதையும்… ஏற்கனவே குறிப்பிட்ட சில சம்பவங்களில் ஏலியன்ஸ் தோன்றியதற்கு காரணம் என்ன என்பதையும் இன்று எழுதுகிறேன்… ——————————————————————————————

ஏற்கனவே… கடந்த பதிவொன்றில்… செப்டொம்பர் 11 அமெரிக்காவின் டுவின்ஸ்டவர் தாக்கி அழிக்கப்பட்ட போது… அதன் பின் புற வானத்தில் ஒரு பறக்கும்தட்டு நிற்பது போன்ற படத்தை போட்டிருந்தேன்… அது ஏன் என்பதை பார்ப்போம்.

எனது தாத்தாவிலிருந்து அப்பாவும்… அப்பாவிலிருந்து நானும்… என்னிலிருந்து அடுத்த சந்ததியும் உருவாகப்போகிறது… இதில்… ஒரால் அழிந்தாலும்… எதிர்காலத்தில் மாற்றம் வரும்… ஒரு அடியில் இருந்து பல பேர் உருவாகி இருப்பார்கள்… ஆகவே பெரிய மாற்றம் நிகழும் எதிர்காலத்தில்… உதாரணமாக, ஜித் என்பவருக்கு 5 பிள்ளைகள் என்றால்… 5 பிள்ளைகளுக்கும் ஒராலுக்கு 2,3 பிள்ளைகள் பிறக்கும்… 3ம் தலை முறை 10,15 ஆகும் நான்காவது 20,30 ஆகும்… இப்படியே அதிகரிக்கும்… இதில் ஜித் இல்லை என்றால் பின்னால் ஒன்றுமே இருந்திருக்காது/ உருவாகி இருக்காது.

இதை இங்கு சொன்னதற்கு காரணம்.

ஏலியன்ஸின் வருகைகளால் இது வரைக்கும் எம்மில் இழப்பு ஏற்படவில்லை என்பதை நாங்கள் ஜோசிக்க வேண்டும்…
(ஒரேயடியாக காணாமல் போன இராணுவ வீரர்கள்… அது போன்ற சில சம்பவங்கள் தவிர்து… அதுக்கு ஏலியன்ஸ்காரண்மில்லை என்று ஏற்கனவே மாற்றுலக கொள்கைமூலம் எழுதியிருக்கிறேன்.) இதுகூட அவர்கள் நம் எதிர்காலத்தவராக இருக்கலாம் என்பதற்கு சான்றுதான்.

மாறாக அவர்கள்… எம்மை அழித்தார்களானால்… இழப்பு அவர்களிலேயே ஏற்படும்… ( இதுக்கு மேல சொல்லத்தெரியல… ) அதனால்தான் அவர்கள் எம்மை கண்கானிப்பதிலும்… எமக்குத்தெரியாமல் சில ஆராச்சிகளை செய்துவிட்டு போவதாகவும் இருகலாம். ( இப்போது இருக்கும் நாமது உருவ,உடலமைப்பு தேவைப்பட்டதால்த்தான்… ஏற்கனவே சொன்ன சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு கர்ப்பமுண்டாக்கி… கருவை 7 மாதத்திலேயே கொண்டுபோனார்களாகவும் இருக்கலாம்.).

இப்போது விளங்கி இருக்கும்… டிவின்ஸ்டவர் சம்பவத்தில் பறக்கும் தட்டு நின்டமைக்கான காரணம்… எமக்கு ராஜராஜ சோழரின் படையெடுப்பை பற்றி தெரிந்திருக்கிறது… பார்க்க ஆசை இருக்கிறது… ஆனால், பின்னால் சென்று பார்க்க முடியாது… ஆனால், எதிர்காலத்தில் அதீதவேகங்கள் சாத்தியமாகும் போது… பின்னோக்கி பயணிப்பதும் சாத்தியமாகும். அப்போதும்… அதே ஆசைகள் இருக்கத்தான் செய்யும்… அதன்டிப்படையில்…

2001 செப்டொம்பர் 11 இல் என்ன நடந்தது என்பதை கண்கானிப்பதற்காக வந்திருந்திருக்கலாம். ஆனால், தடுக்க முடியாது… தடுத்தால்… அழிவது அவர்களாக கூட இருக்கலாம்… அந்த பில்டிங்கில் இருந்தவர்கள் இருந்திருப்பின்… திருமண பந்தங்கள் மூலம் எதிர்காலம் மாறி இருக்கும்… பறக்கும் தட்டில் வந்தவர்களே உருவாகாமல் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளதே… ——————————————————————————————
இதேகாரணத்துக்காத்தான்… ஏற்கனவே சொன்ன சம்பவத்தில்


2ம் உலக யுத்தத்தில்… விமானத்தை பிந்தொடர்ந்ததுக்கு காரணமாக இருக்கலாம். அதிலும்… அவர்கள் ஒரு மிரட்டலை மட்டுமே கையாண்டார்கள்… ஏன் அந்த மிரடல் என்பது தெரியவில்லை… யுத்தத்தை தடுக்கும் நோக்கமில்லை… ( அன்று ஏற்படுத்தப்பட்ட அந்த மிரட்டல்… இன்று என்னையும் உங்களையும் அதை பற்றி பேச வைத்துள்ளது… அப்படியானால்… இது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா???? ஏன்???… எனக்குத்தெரியாது… )

——————————————————————————————
அவர்கள், எமக்கு தொழில் நுட்பத்தை கற்றுத்தருவதில்லை… அதற்கு காரணமும்… ஏற்கனவே சொன்ன காரணங்கள்தான்… அவர்கள் இல்லாமல் போக அதே வழிவகுத்துவிடும்… ——————————————————————————————
இங்கு… ஒரு சைன்ஸ்ஃபிக்ஷன் சிறுகதை நினைவு வருகிறது
(சுயாத்தாவினதாக இருக்கலாம்)… தெவைப்பட்டால்… அதை ஒரு பதிவாக இடுகிறான். :) சிபி கேட்டபடி… உடைந்ததை ஒட்ட வைக்க முடியுமா? என்பதற்கு வரும் பதிவுகளில் பதில் தருகிறேன். ——————————————————————————————
அப்படி இருந்தாலும்…

எகிப்திய பிரமிட்டோவியங்களில்… ஏலியன்ஸ் உதவுவது போன்று வரையப்பட்டது ஏன்? எகிப்தில் இருந்த… நட்சத்திர வட்டத்தை எவ்வாறு கச்சிதமாக உருவாக்கினார்கள்? மற்றும் தற்போதைய விஞ்ஞான உலகம் கண்டு கொண்ட உண்மைகள்…


சில பழங்குடி மக்களிடையே ஏற்கனவே பழக்கத்திலிருந்தது எப்படி? மற்றும்… பல தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்…


Tuesday, September 2, 2014

ஏலியன்ஸ் 08 - தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் ஏலியன்ஸ் நோட்டமும்!

ஏலியன்ஸ் 08 - தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் ஏலியன்ஸ் நோட்டமும்!

பார்ட்-1
பார்ட்-2
பார்ட் -3

பார்ட்-4
பார்ட்-5
பார்ட் - 6
பார்ட் -7
ஏலின்ஸ் ஏழுவது      பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..


தியரி ஒஃப் ரிலேட்டிவிடி படி… நாம் ஒளியின் வேகத்தை அண்மிக்கும் போது… அதாவது… 3*10^8 ( 299 792 458 ) ஐ அண்மிக்கையில் நாம் எதிர்காலத்துக்கே போவோம்…...

உதாரணத்துக்கு… கால இயந்திரத்தில் (?) ஒரு லட்சம் மீற்றர்/செக்கன் வேகத்தில் நாம் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்… எமக்கு காலம் மெதுவாக நடை பெறும்… அதாவது… வெளியே இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் கடக்கின்றன என்றால், இயந்திரத்தினுள் இருக்கும் எமக்கு அது 1 ஆண்டாகவோ அல்லது 2 ஆண்டாகவோ இருக்கும். ( குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் கணித்துப்போடல )...

அப்படி என்றால்… 2010 இல் நாம் பயணிக்கத்தொடங்கினால்… வெளியாட்களின்( பூமியின் கணக்குப்படி/கலண்டர் படி) ஆண்டுபடி 10 ஆண்டுகள் பயணித்தால் அவர்கள் 2020 ம் ஆண்டில் இருப்பார்கள். அப்போது எமக்கு 2012 ஆம் ஆண்டுதான். இப்போது நாங்கள் வாகனத்திலிருந்து இறங்கினால், நாம் 2020 இல் இறங்குவோம்… ( ஆனால், எமக்கு இரண்டு வருடங்கள்தான் ஓடி இருக்கும்… 21 வயதில் வெளிக்கிட்டிருந்தால் 23 வயது… வெளியாளுக்கு 31 வயது). அதாவது… அது நமது எதிர்காலத்தில் நாம் இறங்கி இருப்போம்… அப்போது நாம் காணும் வெளித்தோற்றம் அனைத்துமே… நமது எதிர்காலத்துக்குரியது...



( இங்கு நாம் அதிக வேகத்தில் பயணிக்கும் போது… எமது உருவம் வெளியாட்களுக்குத்தெரியாமல் போகும். காரணம்… அவர்களின் நிகழ்காலத்தில் நாங்கள் இல்லாமல் இருப்போம். அதாவது, காலம் ஓடிக்கொண்டிருக்கும்… நாங்கள் காலத்துடன் ஓடாது சற்று மெதுவாக ஓடிட்டிருப்போம்…. ஏற்கனவே, நான் சொன்னதில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது… இலத்திரன்,புரோத்திரன் போன்ற இயல்பை பெறுவதால் துணிக்கைத்தன்மையாகி மறைவோம் என்று சொல்லி இருந்தேன்… அதுவும் சரிதானே???? :) ) ————————————————————————————

சரி… அப்ப இறந்த காலத்துக்கு போவது எப்படி… அதுவும் இதே போன்ற கால இயந்திரத்தில்தான்… ஆனால், அந்த இயந்திரத்தின் வேகம் ஒளியின் வேகத்தை கட்டாயம் மிஞ்சியிருக்க வேண்டும். அப்படி மிஞ்சும் பட்சத்தில் நாங்கள் இறந்தகாலத்துக்கு போகலாம்…...

உதாரணமாக… நாம் 400 000 000 மீற்றர்/செக்கனில் 2010 பயணிக்க ஆரம்பிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்… ஒரு 10 ஆண்டுகளில்… பயணிக்கும் நாங்கள் 2008,2009 அப்பிடி நாம் ஆரம்பித்த காலத்தை விட குறைவான காலத்துக்கு சென்றிருப்போம்… வெளியாட்கள் 2020 க்கு போயிருப்பார்கள். நாம் வேகத்தை எவ்வ‌ளவு கூட்டினாலும்… எம்மால் இறந்த காலத்துக்கு உடனடியாக பாய்ந்து செல்ல முடியாது… ஒவ்வொரு ஆண்டுகளாக/ நாட்களாக/செக்கன்களாகத்தான் பின்னோக்கி போக முடியும்… ஒவ்வொரு சம்பவமும் இயந்திரத்தின் யன்னலூடாக ஒரு திரையில் ஓடும் காட்சிபோல் ஓடுமா...

இந்த பின்னோக்கி போகும் வேகம்… இயந்திரத்தின் வேகத்தில் சார்ந்திருக்கும்…

( ஒவ்வொரு சம்பவமும் காட்சி போல் மாறும்… என்பது சரியா இருக்கலாம்… ஆனால், எங்களால் உணர முடியும் என்று நினைக்கவில்லை… காரணம்… வேகமாக காட்சிகள் மாறும்… காட்சிகள் என்பது நிறங்களால் காணக்கூடியது… நிறங்கள் வேகமாம மாறும் போது வெள்ளையாகவே தோன்றும்… ஆகவே, நமக்கு வெள்ளையாகத்தான் வெளியே தெரியும்… :) )...

இதெல்லாம் சரி… நாம் இந்த வேகத்தை பயண்படுத்தி பயணித்தோமென்றால்… இறந்தகாலத்துக்கு சென்று பார்க்க முடியும்… நம்ம தாத்தா… கொள்ளுத்தாத்தா… அப்டினு எல்லாரையும் பார்த்துட்டு வரலாம்… ஆனால்… ஜோசித்து பாருங்கள்… இது சாத்தியமானால்… பல குழப்பங்கள் ஏற்படும்… இன்று பதிவில் முக்கியமான கொள்கையை பார்தததாலும் (?)… பதிவு நீள்வதாலும்… நிறித்திடுறேன்… —————————————————————————————...
அப்படி வேகத்தை அடைந்தால்… என்ன என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை பார்ப்போம்… இப்போது பலருக்கு விளங்கி இருக்கும்.., ஏற்கனவே போன பதிவி குறிப்பிட்ட சம்பவத்தில்… விமானத்தை ஏன் பிந்தொடர்ந்தார்கள் என்பதும்… அந்த டுவின்ஸ்டவர்ஸின் பின் புலத்தில் ஏன் அந்த பறக்கும்தட்டு (இது உண்மை என்று உறிதியில்லை) இருந்தது என்பதும் விளங்கி இருக்கும்… விளங்காதவர்கள்… அடுத்த பதிவில் விளங்கிகொள்ளலாம்… :)


இதன் ஒன்பதாம்    பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ...

Thursday, August 28, 2014

ஏலியன்ஸ் 07 - மாற்று உலகமும் எம்மை நோட்டமிடும் ஏலியன்ஸும்

ஏலியன்ஸ் 07 - மாற்று உலகமும் எம்மை நோட்டமிடும் ஏலியன்ஸும்

பார்ட்-1
பார்ட்-2
பார்ட் -3

பார்ட்-4
பார்ட்-5
பார்ட் - 6

ஏலின்ஸ் ஆறாம்    பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..


போன பதிவில் ஏலியன்ஸ் என்பவர்கள் எதிர்கால மனிதராக இருக்கலாம் என்பதை சான்றுகளுடன் பார்த்திருந்தோம். இன்று… மாற்று உலகம் எனும் கோட்பாட்டை பார்க்க முதல்… முன்னர் குறிப்பிட மறந்த சில சம்பவங்களையும்… ஏற்கனவே குறிப்பிட்டதன் படி… பிரமிட்களில் பாவனைக்குட்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பம் பற்றியும் எழுதிடுறேன்…
————————————————————————————–...
இது நடந்தது 2ம் உலக யுத்த காலகட்டத்தில்…

இரண்டாம் உலக யுத்தன் மும்முரமாக நடந்துகொண்டிருந்த‌ போது… நேசப்படைகளை சேர்ந்த விமானிகள், பல நேரங்களில் தமது விமானத்தை ஒரு ஒளிமிகுந்த பொருள் பிந்தொடர்ந்ததை அவதானித்தார்கள்… ஆனால், அவர்கள் அது தொடர்பாக தமது மேலதிகார்களிடம் பதிவு செய்த போது, அது ஜேர்மனிய படைகளின் நவீன விமானமாக இருக்கலாம் என்று பதிவு செய்துகொண்டார்கள். சில ஆண்டுகளின் பின்னர் போர் நிறைவுக்கு வந்தது… அப்போதுதான் தெரிந்தது… ஜேர்மனிய விமானிகளும் அதே போன்ற ஒளிமிகுந்த பொருட்களை கண்டுள்ளார்கள், அவர்களின் பதிவுகளில்… அது அமெரிக்காவின் விமானமாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது…...

விமானத்தளபதிகளான இவர்கள் பொய்யான தகவல்களை பதிவு செய்திருக்கத்தேவையில்லை… ஆக‌வே, அவர்கள் ஒரு ஒளிரும் பொருளைக்கண்டுள்ளார்கள். பொதுவாக, இந்த ஏலியன்ஸ்கள் வருகைதருவதாக கருதப்படும் வாகனங்களை (பறக்கும் தட்டு) குறிப்பிடும் போது… இதே போன்று ஒளிரும் தன்மை பற்றியும் வேகம் பற்றியும் அதிகமாக கூறப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் கண்டது பறக்கும் தட்டுக்கள்தான் என முடிவு செய்யலாம். ஆனால், ஏன் அவர்கள் விமானங்களைப்பின் தொடர்ந்தார்கள் என்பதற்கு தெளிவான விளக்கமில்லை. இரு சாராருக்குமிடையே யுத்த வெறியைத்தூண்டி விடுவதற்காகவா??? அல்லது… மாறாக இரு தரப்பினருக்கும் பயத்தை உண்டுபண்ணி யுத்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவா??? ( இந்த இடத்தில், நான் இரண்டாவதை நம்புகின்றேன்… காரணம் இருக்கிறது… அதை பிறகு தெளிவாக சொல்கிறேன்…)...

மேலும், பறக்கும் தட்டின் சிதைந்த பகுதிகள் எனக்கூறி சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பூமியில் தற்சமையம் பாவனையிருக்கும் உலோகங்களுடன் ஒத்துப்போவதில்லையாம். அவர்களின் விமானங்களின் வடிவங்கள் கூட எம்மோடு ஒத்துப்போவதில்லை…...

ஆனால், போன வருடம் விமானங்களின் வடிவங்களை மாற்றியமைப்பது சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டு போட்டிகள் கூட நடாத்தப்பட்டன. ( இடத்தையும், எரி பொருளையும் சிக்கனப்படுத்துவதும்… வேகத்தை அதிகரிப்பதுமே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது…) அதில் இந்திய மாணவியாள் வடிவமைக்கப்பட்ட விமான மாதிரிக்கு பரிசு கிடைத்திருந்தது. அவர் வடிவமைத்த மாதிரியில்… விமானங்களுக்கே உரித்தான செட்டைகள் இருக்கவில்லை… மேலும்… அது ஏறத்தால ஒரு கூம்பு போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டிருந்தது…...

இப்போதே இவ்வாறான அமைப்புக்கள் தயாரிக்க முடியும் என ஏற்றுக்கொள்ளப்படுவதால்… இன்னும் பல ஆண்டுகளின் பின்னர்… பறக்கும் தட்டின் வடிவில்… விமானங்கள் வர வாய்ப்பில்லையா???… அத்தோடு, இரசாயன விஞ்ஞானத்தில்… சில உலோகங்களை தயாரிப்பதற்கு சிலவகை ஊக்கிகள் அறியப்படாமல் இருக்கின்றது… எதிர்காலத்தில், இவ்வூக்கிகள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் புதிய உலோகங்கள் கண்டு பிடிக்கப்படக்கூடும்… இன்று எம்மால் என்ன வென்று அறிந்துகொள்ள முடியாதுள்ள இந்த சிதைந்த பாகங்களின் உலோகங்கள் எதிர்காலத்தில்நாமே உருவாக்கினதாகவும் இருக்கலாம்… ————————————————————————————–...

ம்ம்ம்… பதிவு நீளமாகிறது… ( நீண்ட பதிவுகள் வாசிக்க கஷ்டமாக இருப்பதாக சொன்னார்கள்…)

அதனால்…

எகிப்திய பிரமிட்டுக்களை பார்க்க முன்னர்… மாற்று உலக கோட்பாடு பற்றி என்க்கு தெரிந்தவற்றை ஆரம்பிக்கிறான்… உலகத்தில்… ஒவ்வொன்றிற்கும் எதிர்த்தன்மையுடன் இன்னொன்றிருக்குமாம்…...
புரோத்திரனுக்கு இலத்திரன் எதிர்த்தன்மையுடனிருப்பது போன்று… இந்த உலகத்திற்கும் இன்னொரு மறை உலகம் இருக்கிறது என்பதே இந்தக்கொள்கை. அது பூமியிலிருந்து குறிப்பிடத்தக்க இடைவெளியிலேயே இருக்கும்… ஆனால், அங்கு அனைத்துமே பூமிக்கு எதிரானதாக இருக்குமாம்… சுத்தும் திசை முதல் கொண்டு அனைத்துமே… பரிமாணங்கள் கூட பூமிக்கு எதிரானதாகையால்த்தான் எங்களால் அதை பார்க்கவோ… உணரவோ முடிவதில்லையாம்… கேக்க லூசுத்தனமாத்தான் இருக்கு… ஆனால், சில புதிர்களுக்கு இந்தக்கொள்கை விடையளிக்கிறது. இதைப்போன்றே இன்னும் பல ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் இருக்கின்றன… அவை பெரும்பாலும் இருக்கு ஆனா இல்லை… என்கிற வகைகள்… அவற்றை எதிர்வரும் பதிவுகளில்… சந்தர்ப்பங்களின் போது பார்ப்போம்…

இந்த மாற்றுலக கொள்கையை இலகுவாக விளக்குகிறார்கள்… இரண்டு கோல வடிவான பொருட்களை ( உதாரணமாக… ஃபூட்பொல் பந்து) எடுத்து… குறிப்பிட்ட இடைவெளியில்… எதிர் எதிர் திசைகளில் சுற்ற விடும் போது… ஒரு கோலப்பொருளில் தாழ்ப்பான இடமும் மற்றையதில் மேடான இடமும் வரும் போது… தாழ்ப்பான இடத்திலிருக்கும் பொருள்… மேடாக உள்ள கோலத்தின் பகுதிக்கு இடம் பெயர்க்கப்படும்…காரணம்… அங்கு ஏற்படும் அமுக்க வேறுபாடாகும்… ( இங்கு இரண்டு கோளங்களினது வெளியமைப்பும் தளமானதல்ல…)...

இந்த கொள்கையை நான் ஏன் இங்கு குறிப்பிட்டுள்ளேன்… என்பது பலருக்கு தெரிந்திருக்கும்… தெரியாதவர்கள்/ இன்னமும் விளங்கிக்கொள்ளாதவர்கள்… அடுத்த பதிவில் சம்பவங்களுடன் எழுதும் போது விளங்கிக்கொள்ளலாம்… ————————————————————————————–...
இங்கு… பென்டகன் தகர்க்க பட்ட போது.. பிடிக்கப்பட்ட படத்தை பாருங்கள்… அது சம்பந்தமானக எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம்… ( முகில் கூட்டமாகவுமிருக்கலாம்…) பிரமிட்களில் பயண்படுத்தப்பட்டுள்ள… நவீன விஞ்ஞானம் என்ன??? ...

அவர்கள் அந்த அறிவை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பதுகளை அடுத்த பதிவில் பார்ப்போம்… ( இங்குதான், எனக்கு நிறைய குழப்பம் இருக்கிறது… இரண்டு வகையாக ஜோசிக்க வேண்டியுள்ளது… ஒன்று லெமூரியா… மற்றது ஏலியன்ஸ்…. அடுத்த கிழமைக்குள்… லெமூரியா தொடர்பாக நான் மேலதிகமாக வாசித்த சில வியப்பான சம்பவங்களுடன் லெமூரியா தொடரின் அடுத்த பகுதியை எழுதுகிறேன்…)

இங்கு குறிப்பிட்டிருப்பது பலது எனது ஐடியாக்கள், கருத்துக்கள்தான்… அதனால், தவறு என நீங்கள் கருதுவதை பின்னூட்டத்தில் இடவும்… ( எடுத்துக்காட்டாக பயன்படுத்தப்பட்ட கொள்கைகள் விஞ்ஞான உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள்…)...


இதன் எட்டவது   பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ...

ஏலியன்ஸ் 06 - வேற்றுக்கிரகவாசிகள் எனப்படும் “ஏலியன்ஸ்” எதிர்கால மனிதர்களா?

ஏலியன்ஸ் 06 - வேற்றுக்கிரகவாசிகள் எனப்படும் “ஏலியன்ஸ்” எதிர்கால மனிதர்களா?

பார்ட்-1
பார்ட்-2

பார்ட் -3

பார்ட்-4
பார்ட்-5


ஏலின்ஸ் ஐந்தாம்    பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..


நாங்கள்தான் ஏலியன்ஸாக இருக்கலாம் எ ன போன பதிவில் நான் கூறியிருந்தேன்… அதை பார்ப்பதற்கு முன்னம் சில சம்பவங்களை பார்த்தால் பொருத்தமாக இருக்கும்…

1954 ம் ஆண்டில் அமெரிக்காவில் பிரபலமாக பேசப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்த தகவலின் படி…...

அமெரிக்காவின் குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் பல பகுதிகளைச்சேர்ந்த மக்களால்… தாம் விசித்திரமான உயிரினங்களை( மனிதர்களை) கண்டதாக வெவ்வேறு இடங்களில் பொலிஸ்ஸாரிடம் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இவர்கள் அனைவரினதும் புகார்களிலும்… “குட்டையான உருவமும், பெரிய தலையும், நீண்ட கைகளும், விசித்திரமான நீளமான கண்களும் கொண்ட மனிதர்களை (?) தாம் கண்டதாகவும்…. அவர்கள் தம்மை கண்டதும் ஓடி மறைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்… மேலும் அவர்களை பின் தொடர்ந்து சென்றவர்கள் மயக்கமுற்று சுயனினைவின்றி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்… சிலர்… தாம் அவர்கள் வந்திறங்கிய இயந்திரத்தை/பறக்கும்தட்டை கண்டதாகவும் கூறியுள்ளார்கள்…...

( ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பலர் குறிப்பிட்ட நேர இடைவெளியில் இந்த தகவல்களை பதிவு செய்தமையால்… இது நம்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது… குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் என்பதன் மூலம்… அவர்களின் வேகம் சம்பந்தமாகவும் நங்கள் இந்த பதிவுகளை கணக்கெடுக்கலாம்… ) ————————————————————————————–

இது போன்றே… பொதுவாக அனைத்து பறக்கும்தட்டு சம்பவங்களிலும் கூறப்பட்டுள்ளது… நாங்கள் இங்கு கவணிக்க வேண்டியது… அவர்கள் கூறிய உடலமைப்பைத்தான்… அவர்கள் கூறிய உடலமைப்பில்… கைகள் நீளமாகவும் உடல் குட்டையாகவும் தலை பெரிதாகவும் இருந்ததாக கூறியுள்ளார்கள்… இதுதான் இங்கு முக்கியமானது… ஏனென்றால், விஞ்ஞானிகள் மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியில் என்ன என்ன உடல் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்வு கூறுகிறார்களோ… அதையொத்தே இந்த சம்பவங்களின் போது கூறப்பட்ட ஏலியன்ஸின் உருவ அமைப்பும் இருக்கிறது…. (விஞ்ஞானிகளால் எதிர்கால மாற்றம் சம்பந்தமாக கூறப்பட்ட விளக்கங்கள் முதல் 2,3 ம் பதிவுகளில் இருக்கிறது… வாசிக்காதவர்கள் வாசிக்கவும்… :) ) அத்தோடு இதுவரை பார்த்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களின் போதும்… ஏலியன்ஸின் உருவமென அடையாலம் கூறப்பட்ட அனைத்து சம்பவங்களிலுமே ஏலியன்ஸின் உருவ அமைப்பு மனிதனின் உருவ அமைப்பினைஜொத்ததாகவே உள்ளது. ( சில சம்பவங்களில் வேறு அமைப்பு கூறப்பட்டாலும்… அதாவது பல கைகள் என்பது போன்ற உருவங்கள் கூறப்பட்டாலும்…. அவையும் நாம் பூமியில் காணும் ஏதோ ஒரு உயிரினத்தின் சாயலை ஒத்ததாகவே ஒத்ததாகவே உள்ளதை காணமுடியும்….)...

இதன்னடிப்படையில் பார்க்கும் போது… ஏலியன்ஸ் என பொதுவாக கூறப்படும் உடலமைப்பானது எமது புலன்களால் உணரப்பட்ட உருவங்களை அடிப்படையாக கொண்டே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது....

ஆனால், நான் ஏற்கனவே செவ்வாயும் மனிதனும் நாமும் பதிவில் கூறியதன் படி… ஓரனு அமீபாவாக உருவான உயிரின ஆரம்பம்… கலன்களின் பிரிவின் போது ஏற்பட்ட சிறு…சிறு தவறுகளின் காரணமாகவும்… பிற்காலத்தில் ஏற்பட்ட இனக்கலப்பினாலும் பல உயிரினங்களாக பரிணாம வளர்ச்சியடைந்து… இன்று உச்சக்கட்டமான பரிணாமமடைந்த மனிதன் உருவாகியுள்ளான்…...

இந்த பரிணாம வளர்ச்சி நிண்டுவிடும் என கூற முடியாது… பரிணாமவளர்ச்சி என்பது தொடர்ச்சியானது… ஆகவே… குரங்கிலிருந்து மனிதன் வந்தது போன்று… மனிதனிலிருந்தும் இன்னொரு மேம்பட்ட உயிரினம் உருவாகும் என்பது அனைவருமே ஏற்றுக்கொள்ளத்தக்க வெளிப்படை உண்மை. நோர்மலாகவே… ஆதிகாலத்து மனிததுக்கும் நமக்கும் பல வித்தியாசங்கள் உருவாகிவிட்டன… மூக்கு , விலா எலும்பு என பல படிகளில் நாம் பரிணாம் அடைந்துவிட்டோம்… ஹீ….ஹீ… இன்று கூட சூழல் மாற்றங்களால் தேவையற்றதாக கருதப்படும் முடிகூட கொட்டுகிற… ( இது சம்பந்தமாகவும் ஏற்கனவே விரிவாக பார்த்துள்ளோம்…) மொட்டை விழுபவர்கள் இனி கவலைப்படதேவையில்லை…. ஹீ…ஹீ…. பரிணாம ரீதியில் அவர்கள் எம்மைத்தாண்டிக்கொண்டிருக்கிறார்கள்….

ஆனால்…....

வேற்றுக்கிரக வாசிகளாக கருதப்படும் ஏலியன்ஸும் மனிதனின் உடலமைப்பை ஒத்திருக்கும் என கூறுவது ஒரு நெருடலான விடையம். ஏனென்றால்… பூமியில் அணுக்கலன்களில் ஏற்பட்ட தவறுகளால்த்தான் இன்று நாம் உருவாகியுள்ளோம்.. இதே படியில்… தவறுகள் ஏற்பட்டால்த்தான்… 2 கை,2கால்,ஒரு முகம் என மனித அமைப்பையோ அல்லது பூமியின் இயற்கை உயிரின அமைப்பையோ ஒத்திருக்க சந்தர்ப்பம் உள்ளது. ஆனால்… இதே தவறுகள் ஏற்பட வேண்டுமெனின்… பூமி இருக்கும் அதே அண்டவெளி சூழ் நிலை இருக்க வேண்டும். இது மிகவும் சாத்தியம் குறைந்தது… ( சாத்தியமும் இருக்கிறது அதை இதில் கூறினால் இடம் ஓவராக நீண்டுவிடும் என்பதால் எதிர்வரும் பதிவுகளில் பார்க்கலாம்…) நாங்கள் முக்கியமாக இன்னொரு விடையத்தையும் இங்கு பார்க்கனும்….

அதாவது…. மனிதன் எவ்வளவுதான் கெட்டித்தனமானவனாக இருந்தாலும் இயற்கையின் அமைப்பை மீறி… எம்மால் சிந்திக்க முடியாது… சும்மா பார்த்தாலே இது தெரியும்… கார்,பிளேன்,கப்பல் என எதைப்பார்த்தாலுமே ஏதோ ஒரு வகையில் இயற்க்கையாக உள்ள அமைப்பை ஒத்தே இது இருக்கிறது… காரணம் மனிதனின் மூளையில் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எண்ணக்கருக்கள் இவை… இது மாறுவதற்கு சந்தர்ப்பம் மிக…மிக குறைவு… அதனால்… கூட ஏலியன்ஸின் உருவங்களை மனிதனுடம் ( எமக்கு உட்பட்ட இயற்கையுடன் ) ஒப்பிட்டு கூறுகிறார்களாக இருக்கலாம்...

ஏற்கனவே இந்த ஏலியன்ஸின் அமைப்பு பற்றி… கிரேக்க , எகிப்திய‌ , புராதன குகைகளில் காணப்பட்ட குறிப்புக்களைப்பார்த்திருந்தோம்… அந்த‌ குறிப்புக்களில்… மனிதனுடன் இணைந்து செயற்படுவது போன்றுள்ளது… இது ஒரு முக்கியமான விடையம்… காரணம்… எகிப்திய பிரமிட்களின் கட்டிட அமைப்புக்களில் பயண்படுத்தப்பட்டுள்ள… தொழில் நுட்பங்களில்… பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரங்கள்… பூமியின் விட்டங்கள்… மற்றும் சில முக்கியமான தொழில் நுட்பங்கள்… பயன்படுத்தப்பட்டுள்ளன… முக்கியமாக வட்டத்துக்கு… பயன்படுத்தப்படும்… “ஃபை 22/7 = 3.14…)” பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவு அவர்களுக்கு ஏலியன்ஸ் ( எதிர்கால நாம்(?) ) கொடுத்ததாக இருக்குமா… என்பதையும்… காலப்பயணம் சம்பந்தமான சில விடையங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.

அவற்றை அடுத்துவரும் பதிவுகளில் பார்க்கலாம்

இதன் ஏழம்   பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ...


ஏலியன்ஸ் 05 - ஆட்களைக்கடத்தும் வேற்றுக்கிரக வாசிகள்!

ஏலியன்ஸ் 05 - ஆட்களைக்கடத்தும் வேற்றுக்கிரக வாசிகள்!

பார்ட்-1
பார்ட்-2

பார்ட் -3

பார்ட்-4
ஏலின்ஸ்  நான்காம்   பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..


போன பதிவில் ஏலியன்ஸால் பரிசோதிக்கப்பட்ட சிலரின் சம்பவங்களைப்பார்த்திருந்தோம்…

இன்று அதன் தொடர்ச்சியாக மேலும் சில சம்பவங்களைப்பார்ப்போம். ரஷ்ய மலைப்பகுதியில்.. யுத்தம் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் நடந்த சம்பவம் இது…...

வழமையாக போரின் போது தனித்தனி பெரும் குழுக்களாக இருப்பது வழக்கம்… அந்த மாதிரித்தான் 3 குழுக்களைச்சேர்ந்த 1000 சிப்பாய்கள் தமது ஆயுதங்கள் சகிதம் ஒரு மலையடிவாரத்தில் தங்கியிருந்தார்கள்… அங்கு அவர்கள் தங்கியிருப்பது ஒன்றும் புதிதல்ல… 2,3 வாரமாகவே அங்குதான் நிலைகொண்டிருந்தார்கள்… ஒரு நாள் அந்த குழுவை சேர்ந்த சிப்பாய்கள் இருவர் மட்டும்… அடுத்த குழுவுடன் தமது உணவு சம்பந்தமான விடையங்களை கதைப்பதற்காக ( இன்னொரு நூளில் வாசித்ததன் படி… காலை கடன்களை முடிப்பதற்காக…) தனியாக சென்றிருந்தார்கள்… தமது வேலைகள் முடிந்ததும்… 1 மணி நேரத்தின் பின்னர் அவர்கள் தமது குழுவுடன் இணைவதற்கு திரும்பினார்கள்… என்ன ஆச்சரியம்… அங்கு இவர்களின் குழுவைச்சேர்ந்த ஒருவரைத்தானும் காணமுடியவில்லை… ஆனால்… அங்கே இருந்த ஆயுதங்கள், தங்கியிருந்த ரென்ட்கள், வாகனங்கள் அவர்களால் பயண்படுத்தப்பட்ட அனைத்துப்பொருட்களும் அப்படியே இருந்தன… இவர்கள் பீதியுடன் அத்தகவலை… தமது மேலிடத்துக்கு அறிவித்தார்கள்… அவர்கள் பெரும் தேடுதலை மேற்கொண்டும் ஒரு பலனுமில்லை… ( கூகுள்…)...

இந்த சந்தர்ப்பத்தில் வேற்று படையினர் இவர்களை கைது செய்திருக்க சந்தர்ப்பமில்லை… 1000 பேரி இருந்தவர்கள் ஒரு எதிர்ப்பை காட்டியிருப்பார்கள்… மற்றத்கு 1 மணி நேரத்துக்குள் இவளவும் நடக்க சந்தர்பமில்லை… தேடுதலின் போதும் அவர்கள் அகப்பட வில்லை… அந்த பனி மலைப்பிரதேசத்தில் கூட்டமாக தப்பி போவது என்பது சாத்திய பட வாய்ப்பில்லை… மேலும் பனிச்சரிவில் சிக்கி இருப்பார்கள் என்று நினைப்பதும் முற்றாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை… ( எங்கு என்ன நடந்து இருக்கும்… என்பதை இரண்டு கண்ணோட்டத்தில் பார்க்க முடியும்… அதுக்கு முன்னாடி இதே போன்று பதிவுசெய்யப்பட்ட இன்னொரு சம்பவத்தை பார்ப்போம்….) ———————————————————————————–...
http://rahmanfayed.blogspot.in/2012/08/blog-post_10.html
இது கொஞ்சம் பழசு… 1881… பேர்முடா!!!! பிரதேசம்… (பேர்முடா முக்கோன வலையமே ஒரு மர்மம்தானே… அது தொடர்பாக க பார்க்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் )...

பேர்முடா பகுதிவில் றோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை… ஒரு நாள் அப்படித்தான் றோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் காரர்களின் கண்களுக்கு… தூரத்தி ஒரு பாய்மரக்கப்பல்… ஒன்று தனியாக மிதந்து கொண்டிருந்தது தெரிந்தது… உடனே அருகில் சென்று பார்த்தார்கள்… என்ன துரதிஷ்டம் கப்பலில் ஒருத்தரையும் காணவில்லை…. ஒரு நாய் மட்டும் பசியால் வாடிப்போயிருந்தது…. கடல் கொள்ளையர்களின் வேலையாக இருக்கும் என்றால் அதுக்கும் சந்தர்ப்பமில்லை… ஏனெனின்… பயணிகளால் கொண்டு வரப்பட்ட நகைகள் மற்றும் தளபாடங்கள் அனைத்தும் அப்படிஅப்படியே இருந்தன… ( மேகதூதன் பதிப்பகம்…) அப்படி என்றால் என்னதான் நடந்திருக்கும்… ———————————————————————————–
இன்னொன்று… மேலுள்ள சம்பவங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானது… இதுவும் ஊர் பேர் தெரியாதது… ஆனால், பல விஞ்ஞானிகளாளும் ஆய்வாலர்களாளும் நேரடியாக உணரப்பட்ட ஃபேமஸான சம்பவம்…...

ஒரு விவசாயி… தனது தோட்டத்தில் அதிக படியான விளைச்சலை காட்டி இருந்தமையால் அவரை கெளரவிக்கும் நோக்கத்துடன் விவசாயத்துக்கு பொறுப்பான அதிகாரி… ஒரு நாள் மாலைஅவரின் வீட்டுக்கு வந்திருந்தார்… இருவரும் தமது தோட்டத்தில் கதைத்துக்கொண்டு உலாவினார்கள்… அப்படியே உலாவிக்கொண்டுருக்கையில்… அதிகாரி திரும்பி பார்த்த போது… விவசாயியை காணவில்லை… அந்த வெட்ட வெளி பிரதேசத்தில் அவர் ஓடி ஒழிந்திருக்க சந்தர்ப்பமே இல்லை…. சுற்று முற்றும் தேடினார்கள்… ம்ஹீம்… ஒரு அறிகுறியுமில்லை… உடனே ஆய்வாளர்களுகுக்கு ந்த புத்திசாலி அதிகாரி அறிவித்தார்…. அவர்களும் வந்தார்கள்…விவ‌சாயியை கண்டு பிடிக்க முடியவில்லை… ஆனால் இருவரும் நடந்து வந்துகொண்டிருந்த ஒரு இடத்தில் ஒரு பகுதியில் மாத்திரம்… வட்ட வடிவாக தரை புள்வெளியில் மஞ்சள் படிவு காணப்பட்டது…. அது ஏன் வந்தது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை…. அதைவிட ஆச்சரியம் என்னவென்றால்… அம்மனிதர் காணாமல் போன நாளிலிருந்து 3 நாட்களுக்கு அடிக்கடி தன்னை காப்பாற்றுங்கள் என பொருள் பட சத்தம் கேட்டதாக சில ஆய்வாளர்களும்… பல ஊர்மக்களும் தெரிவித்தார்கள்…. 3நாட்களின் பின்னர் அந்த குரல் ஓய்ந்துவிட்டது….
————————————————————————————

சரி… இனி என்ன நடந்திருக்கும் என்பதை பார்ப்போம்… இந்த சம்பவங்களை நான் சொன்ன மாரி இரண்டு வகையாக பார்க்கலாம்… ஒன்று… ஏலியன்ஸ் தமது தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி தமது பறக்குந்தட்டுகளில் இருந்தவாறே கதிர்களின் துணையுடன் இவர்களை உள்ளெடுத்திருக்கலாம்… (அது எதற்காக என்பது தெரியாது…)

ஆனால்… அது எப்படி மனிதர்களை மட்டும் அந்த கதிர்கள் உள்ளெடுத்தது என்பது விளங்கவில்லை… நாம் காந்தத்தை பயன்படுத்தி உலோகங்களை மட்டும் கவர்வது மாதிரி… அவர்களின் தொழில்னுட்ப அறிவில் இது சாத்தியமாகி இருக்கலாம்… ( ஹீ…ஹீ… அப்ப எப்படிநாய் மட்டும் கதிர்களில் அகப்படாமல் தப்பியது??? அதுக்கு இன்னும் வாசித்துதான் தேடனும்…) அந்த குரலுக்கான விளக்கத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்… மற்ற வகைப்படி பார்த்தால்… அணுவில் புரோத்திரனுக்கு எப்படி இலத்திரன் மறையாக இருக்கிறதோ… அதே போன்று இந்த பூமிக்கும் மறையாக பரிமாணங்களில் முற்று முழுதாக மாறுபட்ட இன்னொறு உலகம் தொழிற்படலாம்… அது எப்படி இந்த சம்பவங்களுடன் பொருந்தும் என்பதை இதில் விளக்கினால்… பதிவு ஓவராக நீண்டுவிடும்… அதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்…

————————————————————————————

ம்ம்ம்… நீண்ட நாட்களாக இந்த பகுதியில் மனிதனின் எதிர்கால பரிமாண மாற்றங்கள் பற்றிய விஞ்ஞானிகளின் எதிர்வு கூறல்களைப்பற்றி எழுதிவந்தேன்… காரணம்…. இந்த ஏலியன்ஸ் என அறியப்பட்டிருப்பவர்கள் நாங்களாகவும் இருக்கலாம்… அதாவது… எதிர்காலத்தில் பரிமாண வளர்ச்சியில் நாம் சந்திக்க கூடுமென எதிர்வு கூறப்படும் உடல் மாற்றங்களுக்கும்… இன்று நாம் ஏலியன்ஸ் என இனங்கண்டிருக்கும் உருவத்துக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக்காணமுடியும்… ஆகவே… எதிர்காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக பெரும் வழர்ச்சியடையப்போகும...

இந்த ரைம்ரவலுக்குத்தேவையான வேகத்தையும் அடைந்திருக்க சாத்தியமுள்ளது… ஸோ… இந்த ஏலியன்ஸென அடையாலங்காணப்பட்டவர்கள் எதிர்கால நாங்களாகவும் இருக்கலாம் தானே… இது சம்பந்தமாக கனக்க எழுதவேண்டி இருக்கிறது… எல்லாத்தையும் ஒன்றாக எழுதினால் போராக இருக்கும்… அடுத்த பதிவுகளில்… எதிர்கால நாங்கள் தான் ஏலியன்ஸ் (?) என்பதற்கான சான்றுகளையும்… அப்படி என்றால் ஏன் அவர்கள் எமது நிகழ்காலத்துக்கு வந்த போதும் அந்த தொழில்நுட்ப அறிவுகளை எமக்கு சொல்லித்தரவில்லை…. மாற்று உலக கோட்பாடு… மற்றும் மேலும்சில விசித்திரமான ஏலியன்ஸ் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தகவல்களையும் பார்ப்போம்….
————————————————————————————
By : Chandran Pirabu .

இதன் ஆறாம்  பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ...

ஏலியன்ஸ் 04 - பூமிக்கு விஜயம் செய்த ஏலியன்ஸ் குறிப்புக்கள்.

ஏலியன்ஸ் 04 - பூமிக்கு விஜயம் செய்த ஏலியன்ஸ் குறிப்புக்கள். 

பார்ட்-1
பார்ட்-2

பார்ட் -3

ஏலின்ஸ் முன்றாம்  பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..


போன பதிவில் காலப்பயணம் பற்றிய சில கொள்கைகளையும், பரிமாண மாற்றத்தையும் பார்த்திருந்த அதேவேளை, ஏலியன்ஸினால் பாதிப்புற்ற ஒரு பெண்ணைப்பற்றி சில குறிப்புக்களைப்பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியை இன்று பார்க்கலாம்…

அடுத்து ஒரு 6 மாத காலத்தின் பின்னர்…

காலையில் எழுந்து பார்த்த அந்த பெண் அதிர்ச்சியுற்றாள்… காரணம் அவளது வயிறு பிள்ளை இருப்பதற்கான எந்தவித அறிகுறியுமில்லாமல் இருந்தது….

உடனே டொக்டரிடம் சென்று செக் பண்ணி பார்த்தார்கள்… என்ன ஆச்சரியம்… வயிற்றில் பிள்ளை இருந்தமைக்கான எந்தவித அறிகுறியுமே இல்லை!!!!

 மீண்டும் ஹிப்னாடிஸம்… அதே போன்ற சம்பவத்தையே பெண் மீண்டும் சொன்னால்… அப்படியானால் என்ன நடந்து இருக்கும்????...

வேற்றுக்கிரக வாசிகள் என பரவலாக நம்பப்ப‌டும் ஏலியன்ஸ் ஏன் அந்த பெண்ணின் வயிற்றில் குழந்தையை உருவாக்கி இருக்க வேண்டும்… ஏன் மறுபடியும் அந்த கருவை கலைத்திருக்க வேண்டும்… அல்லது 6 மாதமான அந்த கருவை அவர்கள் தமது பரிசோதனைகளுக்காக கொண்டுசென்றார்களா??? பூமியிலுள்ள மனிதர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள் என்பதை அறிவதுதான் அவர்களின் நோக்கம் என்றால் அது ஏன்????

போன்ற பல கேள்விகள்… தேங்கி நிற்கின்றன....

———————————————————————————
அடுத்து ஒரு இன்னொரு விசித்திர சம்பவம்…

இதுவும் பெயர்,ஊர் தெரியாதது… ( தெரிந்தவர்கள் கூறவும்…) இரண்டு நண்பர்கள்…

ஆற்றங்கரையோரமாக வந்து கொண்டிருந்தார்கள்… அப்போது… கண்ணைக்கூசச்செய்யும் வெளிச்சத்துடன்… பறக்கும் தட்டு ஒன்று வந்திறங்கியது… அந்த அதிர்ச்சியில் ஒரு நபர் மயக்கமுற்றுவிட்டார்… மற்றவர் பார்த்தபோது ஒன்றுமே இல்லை… தனது நண்பர் மட்டும் மயக்கமுற்றிருப்பதைக்கண்டு… உடனே அவரை ஹொஸ்பிட்டலுக்கு கூட்டிச்சென்றார்… மயக்கம் தெளிந்த பின்னர் அந்த நபர்… டொக்டர்களிடம் தமக்கு நடந்தவற்றை கூறினார்…...

அங்கு இருந்த யூ.எஃப்.ஓ ஆராச்சியாளர்களுக்கு தகவல் அனுபப்பட்டு… அவர்கள் இந்த நபர்களை பரிசோதிக்க முடிவெடுத்தார்கள்… இருவரையும் ஹிப்னாடிஸத்துக்கு உட்படுத்தியபோது… ஒரு சிறிய வியப்பு காத்திருந்தது…. ஆம்… அந்த மயக்கமுற்ற நபரிடம் ஏலியன்ஸ்கள் எந்தவிதமான சோதனைகளையும் செய்யவில்லை… மாறாக… சுய நினைவுடனிருந்த நபர் சொன்னபடி… அவரை தமது ஓடத்துக்குள் அழைத்துச்சென்று… சில கருவிகள் மூலமாக இவரின் உடலில் துளைகள் இடாமலே ஏதேதோ ஆராச்சிகள் செய்தார்களாம்…...

இதிலிருந்த சில முடிவுகளை நாங்கள் எடுக்க முடியும்…

இங்கு… மயக்கமுற்ற நபருக்கு… ஏலியன்ஸ் வந்தது தெரியும்…( அதை பார்த்த பின்னர்தான் அவர் மயக்க மடைந்தார்…) ஆனால், சுய நினைவுடனிருந்தவருக்கு அது தெரியாது… அப்படி என்றால்… ஏலியன்ஸ் ஏதோ ஒரு முறையை பயன்படுத்தி நினைவுகளை அழித்திருக்கிறார்கள். அவ்வாறு அழிப்பதற்கு மனிதன் சுய நினைவுடனிருக்க வேண்டும். இல்லை என்றால்… ஏன் அவர்கள் அந்த மயக்கமுற்ற‌ நபரின் நினைவை மட்டும் அழிக்கவில்லை… ஆகவே… அவர்கள் எமக்கு உட்படாத தமது பரிமாணத்தை பயன்படுத்தியோ… அல்லது… அவர்களது அறிவை ( 7 வது அறிவு என்றும் வைத்துக்கொள்ளலாம்…) பயன்படுத்தியோ… எமது கண்கள்(????) ஊடாக தமது கட்டுப்பாட்டுக்குள் எங்களை ஆட்படுத்துகிறார்களாக இருக்கலாம். ( மயக்கமுற்றமையால் அந்த நபரை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை போலும்… ) ———————————————————————————
அடுத்து…...

கோர்டன் குஃபெர் என்ற ஜேர்மனிய விண்வெளி வீரர்… தான் இராணுவத்தில் பணியாற்றிய போது தனக்கு நிகழ்ந்ததை விபரிக்கின்றார்… “நான் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது… எனது விமானத்தை தாண்டி ஒரு மாறுபட்ட விமானம் பறந்தது… நான் அதை பின்தொடர்ந்து சென்றபோது… அது எதிர்பார்க்க முடியாத அளவுக்கு விரைவாகவும் கிட்டத்தட்ட 90 பாகையில் அதன் திசையை மாற்றி மறைந்துவிட்டது…”

இந்த சம்பவத்தில் அவர்கள் எம்மை விட எவளவு கூடிய அறிவை பெற்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகும்… அதாவது… இவரின் கூற்றுப்படி பார்க்கும் போது அது… கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பறந்திருக்கிறது என்ற முடிவுக்குவரலாம்…. 90 பாகையில் மாறி மாறி திசை திருப்புவது என்பது நமது அறிவுக்கு இன்னமும் சாத்தியமாகாதது… ———————————————————————————... 
சம்பவங்கள் இருக்கட்டும்… இவ்வாறான மேலும் சில முக்கிய சம்பவங்களை பிறகு பார்க்கலாம்…... 

அதுக்கு முதல்…. எகிப்திய சுவரோவியங்களை பார்த்தொமானால்… அதில் வேற்றுக்கிரக வாசிகள் என கருதப்படும் ஏலியன்ஸின் உருவ அமைப்புக்கள் காணப்படுகின்றன… ஆனால் என்ன குழப்பம் என்றால்… அவை மனிதனுடன் சேர்ந்து உதவுவதுபோன்று வரையப்பட்டுள்ளது. ( இது சில நேரம்… அவர்கள் இணைந்து செயற்படாவிடினும் அவர்களிடம் இருந்து பெற்ற அறிவுகளை தாம் எவ்வாறு பயன் படுத்தினோம் என்பதை காட்டுவதற்காகவும் வரையப்பட்டு இருக்கலாம்.)... 

மேலும்… புராதன குகைகளிலும் ஏலியன்ஸின் உருவ அமைப்பை ஒத்த உருவங்கள் வரையப்பட்டுள்ளன…... 

இதற்கு மேலாக… இராமாயணத்தில் இராவணனின் வாகனமான புஸ்பக (புட்பக) விமானத்தின் இயக்கமானது… தரையிலிருந்து செங்குத்தாக கிழம்பி எங்கு வேணுமென்றாலும் குறுகிய நேரத்தில் செல்லத்தக்கது என்று கூறப்படுகிறது. இது உண்மையோ இல்லையோ… அது வேறுவிடையம் ஆனால், புராதன மக்கள் ஏலியன்ஸின் இயக்கத்தை உண்ணிப்பாக அவதானித்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும். ———————————————————————————... 
அடுத்து நான் போன பதிவில்…. தற்போது மனிதனின் பரிமாணவளர்ச்சி பற்றி கூறியிருந்தேன்… அதன்படி பார்க்கையில்… இனி… எதிர்காலத்தில்… மனிதன் தந்து உடல் வலுவைவிட மூளையைத்தான் பயண்படுத்தப்போகிறான்… ஆகவே… நமது விஞ்ஞானிகளின் கணிப்பு படி… அடுத்த கட்டமாக… மனிதனின் உடல் சிறுத்து… தலை பெருக்கும்… அத்தோடு பார்வைப்புலன் விரிவடையவே கண்ணும் அகலாம்… என்னதான் கருவிகள் வந்தாலும்… பெரும்பாலும் அவை கைகளாக் இயக்கப்படுபனவே… எனவே கையும் நீளகாகலாம்… (உடம்ப்பு சிறிதாகும் போது கை நீளமாகாவிடினும் ஆகியதாகத்தானே தோன்றும்… )

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்பது இப்போது விளங்கியிருக்கு… வரும் பதிவுகளில்… அதை தெளிவாக விளக்குகிறேன்….

By : Chandran Pirab...

இதன் ஐந்தாம் பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ...

ஏலியன்ஸ் 03 - காலப்பயண சாத்தியமும், ஏலியன்ஸ் உருவாக்கமும்!

ஏலியன்ஸ் 03 - காலப்பயண சாத்தியமும், ஏலியன்ஸ் உருவாக்கமும்!

பார்ட்-1
பார்ட்-2
ஏலின்ஸ் இரண்டாம் பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..


“காலம் மூலம் பின்நோக்கி செல்லுதல் சாத்தியம் என்பதை நான் விளக்குகிறேன். ஒரு பொருளை நாம் பார்க்க பயன்படுவது அதன் மேல் பட்டு வெளிப்படும் போட்டான்ஸ் (photons). பூமி போட்டான்ஸ் வெளியிடமுடியாது, ஏனெனில் இது கிரகம். சூரியனால் முடியும் , ஏன்னா அது நட்சத்திரம். இப்ப நம்மால் பார்க்க சாத்தியம் ஆவது போட்டான்ஸ் ஒரு பொருள் மேல போய் மோதுவதால் . உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் சூரியனிலிருந்து புறப்பட்டு ஒரு போட்டன்ஸ் (light) பூமியை அடைய 8 min 24 sec ஆகும்.

அதாவது சூரியனில் ஒளி வெளிப்பட்டுவிட்டது, செயல் நடந்து விட்டது. ஆனால் அதை நாம் பார்த்தல் மூலம் அறிய 8 min 24 sec ஆகுது. இது காலத்தால் நிகழுது. இதே நாம் இன்னும் தூரத்தில் இருந்தால் இன்னும் தாமதமாகும். அதாவது ப்லூட்டோ கிரகத்தை பொறுத்தவரை அந்த செயல் நடைபெறவில்லை. ஏனென்றால் ஒளி இன்னும் சென்றடையவில்லை.

இததுதான் கால பின்னோக்கி செல்லுதலை நிருபிக்கிறது. அதாவது ஆற்றல் அழிவின்மை விதிப்படி நடந்த நிகழ்ச்சிகளின் காட்ச்சிகளால் வெளிபடுத்தப்பட்ட போட்டான்கள் சென்று கொண்டே இருக்கும். நாம் ஒளியை அதாவது போட்டானை விட வேகமாக சென்று பார்த்தால் அதனை அறிய முடியும். இது தான் time travel என்கிறோம். அப்படிஎன்றால் எதிர்காலத்திலிருந்து நம் காலத்திற்கு யாராவது வந்திருப்பார்களே என்று நீங்கள் கேக்கலாம். அவர்கள் காட்ச்சிகளைதான் பார்க்க முடியும் செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அதாவது one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம்.

அதுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் டைஹோ பிராகி 1624 -ல் ஒரு நட்சத்திர வெடிப்பை பார்த்து பதிவு செய்தார். அது அந்த நிமிடம் நடந்த நிகழ்வு இல்லை. அது நடந்து பல நூற்றாண்டுகளுக்கு பின்தான் அறியப்பட்டது. ஏனென்றால் அந்த நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் தூரம் அதிகமாவதால் ஒளி நம்மை அடைய அவ்வளவு காலம் ஆயிற்று. இந்த நொடியே சூரியன் வெடித்து அழிந்தால் கூட அதை நாம் அறிய 8 min 24 sec ஆகும்....

இதன் மூலமா ஒளியின் வேகத்தைவிட வேகமாக பயணித்தால் இறந்த காலத்திற்குதான் செல்ல முடியும்(அறிய முடியும்), எதிர் காலத்திற்கு அல்ல. எனக்கு time travel மூலம் எதிர் காலத்திற்கு செல்வோம் என நம்பிக்கை இல்லை. சிலர் parallel universe எனும் கோட்பாட்டின் படி இரண்டும் சாத்தியம் என்கிறார்கள். negative velocity ல பயனிச்சா எதிர் காலத்திற்கு செல்லுதல் சாத்தியமாகலாம்.”...

///one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம். /// இதில் இரண்டு விதமான கொள்கைகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்…...

ஒன்று… உலக இயக்கம் ஒரே தொடராக நடந்து கொண்டிருக்கிறது… இதன் அடிப்படையில் பார்த்தால், எதிர்காலத்திலிருந்து வருபவர்களால் (???) இறந்த காலத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றத்தினால்… உலக இயக்கத்தின் தொடர்ச்சி மாற்றமடையும்....
அதாவது… உங்களை எதிர்காலத்திலிருந்து வந்தவர் கொன்று விட்டால்… உங்கள் மூலமாக எதிர்காலத்தில் உருவாகி இருக்கக்கூடிய ( பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்…) அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுமாம். இந்த கொள்கையில்.

எவ்வாறு அந்த மாற்றம் நிகழும் என்பதற்கு தெளிவான விளக்கமில்லை… அதாவது, ஒருவரை இறந்த காலத்தில் கொன்றால்… நிகழ்காலத்தில் அவருடன் தொடர்புடைய நிகழ்வுகள் திடீரென அழியுமா/ மறையுமா? எனும் கேள்விக்கு சிறந்த விளக்கமில்லை. :(...

சூரியனிலிருக்கும் ஒளி எம்மை வந்து சேர 8 நிமிடம் எடுக்கின்றது. எப்பவோ நடந்த நட்சத்திர வெடிப்பு தற்போது தான் தெரிகிறது. அதே போலத்தான்… இந்த பிரபஞ்சம் தோன்றிய போது ஏற்பட்ட பெரு வெடிப்பினையும் தற்போதும் பார்க்கலாம்… இது 14.5 (??) பில்லியன்ஸ் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டது. இதை நாம் படம் பிடிக்க முடியாது… ஏன் என்றால் நம்மிடம் வேகமில்லை… :(...

விஞ்ஞானிகள்… மனிதனின் அடுத்த பரிணாமம் பற்றி எதிர்வு கூறியுள்ளார்கள்…
அதில் ஒன்று…
அதிகமாக மூளையை பயன்படுத்தும் பகுதியை சார்ந்த மக்களின் தலை பெரிதாக பரிணாமமடையும் எனவும்… இயந்திரங்கள் மனிதன் செய்ய வேண்டிய பல வேலைகளை எதிர்காலத்தில் செய்யும் என்பதால்… மனிதனுடைய உடல் வலு தற்போது தேவைப்படும் அளவுக்கு தேவைப்படாது. எனவே, உடல் சிறுத்துவிடும். ( தொந்தி வயிறு இப்போது அதிகரித்து வருகிறது… பேந்து எப்படி உடல் சிறுக்கும் என்று டவுட் வரலாம்… இது இப்போது உடனே ஏற்படப்போகும் மாற்றமில்லை…

சில வேளை எதிர்காலத்தில்…
இ ப்போது, விண்வெளி வீரர்கள் பாவித்துவரும்… சத்து மாத்திரைகள், சாதாரணபாவணைக்கு வந்தால், தேவையில்லாத தொந்தி வர வாய்ப்பில்லை… ) இதற்கும்… ஏலியன்ஸிக்குமிடையிலான தொடர்பினை ஜோசித்து பாருங்கள்… ( அடுத்த பதிவில் தொடர்பினை எழுதுகிறேன்…)...

இனி நாம்… ஏலியன்ஸ் சம்பந்தமானதை பார்ப்போம்… ஏலியன்ஸ் தொடர்பான பிரலமான சம்பவங்களை முதலில் பார்ப்போம்…

( சம்பவங்களில் சம்பந்த பட்டவர்களின் பெயர்கள் நினைவில்லை…

அமெரிக்காவில்… ஏதோ ஒரு பிரதேசத்தில்… ஒரு கன்னிப்பெண்னின் நடவடிக்கையில் மாற்றமேற்படவே… அவளது பெற்றோர், அவளை டொக்டரிடம் அழைத்துச்சென்றார்கள். அவளை பரிசோதித்த டொக்டர்ஸ் அவள் கர்ப்பம் அடைந்து இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், அப் பெண்ணோ அதனை அடியோடு மறுத்தால்… மேலும்… பெண்ணின் நடத்தையிலும் சில மாற்றங்கள் தென்படவே… டொக்டர்கள் அவளை ஹிப்னாடிஸத்துக்கு உட்படுத்த முடிவெடுத்தார்கள்.... 

ஹிப்னாடிஸத்தின் போது… அப்பெண் சொன்ன விடையங்கள் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது…. அவள் சொன்னதன் சுருக்கம் இது தான்…. 

ஒரு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் தனியாக வீட்டிலிருந்த போது… ஜன்னலடியில் ஏதோ சத்தம் கேட்பதாக உணராவே, ஜன்னலோரமாக சென்று பார்த்தேன். அங்கு சில குள்ளமான…ஒல்லியான…. பெரிய தலையுடைய மனிதரை ஒத்த உருவங்கள்… வீட்டை நோக்கு வந்துகொண்டிருந்தது. நான் வீட்டை தாள்பால் போட்டு விட்டு… உள்ளேயே இருந்தேன்… அவர்கள், கதவை திறக்காமலே உள்ளே வந்து… என்னை நோக்கி ஏதோ செய்துவிட்டு… என்னை அவர்கள் வந்த வாகனத்துக்குள் அழைத்து சென்றார்கள். பின்னர்…. எனது உடலில் ஏதேதோ சோதனை நடத்தினார்கள். இறுதியில்… நான் எங்கு இருந்தேனோ அங்கேயே இருந்தேன்…. இது தான் அப்பபெண் சொன்னது…. உடனெ இத்தகவல்… யு.ஃப்.ஓ இக்கு அறிவிக்கப்பட்டு பதுவு செய்யப்பட்டது. 6,7 மாதங்களில்… இன்னொரு பெருமதிர்ச்சி ஏற்பட்டது… அது என்ன என்பதையும்…மேலும் சில சம்பவங்களையும்… அடுத்த பதிவில் பார்ப்போம்… :)...

PART -4
நான்காம் பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ...