Wednesday, January 8, 2014

இரகசிய சமுதாயம் - தொடர்-9

இரகசிய சமுதாயம் - தொடர்-9
 
ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற
முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

 
இரகசிய சமுதாயம் - தொடர்-8 

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள். தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான். (2:208)

இரகசிய சமுதாயம்!. ஒற்றுமை இணையவாசகர்களை ஒரு மாதகாலமாக வலம்வந்த இத்தொடரின் நிறைவுப்பகுதி இது. இத்தொடர் கட்டுரைகள் மூலம் நவீன ஷைத்தானிய, தாவூத்திய சக்திகளின் படுபாதகங்களையும், சூழ்ச்சிகளையும் ஓரளவு அறிந்து கொண்டோம் அல்ஹம்துலில்லாஹ். அத்தகைய சூழ்ச்சிகளை வெற்றிகொண்டு முழுமைபெற்ற முஸ்லிமாக வாழ்ந்திட இயலுமோ என்று ஏங்குபவர்களுக்கு சில முக்கிய தகவல்களை வழங்குவதே இந்நிறைவு பகுதியின் நோக்கம். ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற முஸ்லிம்கள் செய்ய வேண்டியவைகள் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னர் சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.
முஃமின்கள் (இறைவிசுவாசிகள்) மீது ஷைத்தானுக்கு அதிகாரமில்லை.

இறைவிசுவாசிகளே! ஷைத்தானின் சூழ்ச்சிகள் மிகப் பிரம்மாண்டமாகவும் சக்திமிக்கதாகவும் தெரிந்தாலும் உண்மையில் ஷைத்தான் மிகவும் பலஹீனமானவன் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். ஆம் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனது கட்டளைகளை சரிவர நிறைவேற்றி, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித்தந்த இறைநெறியில் வாழும் ஒரு உண்மை முஃமினுக்கு முன்னால் ஷைத்தான் மிகவும் பலஹீனமானவன். இன்னும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ள அத்தகைய முஃமின்கள்மீது ஷைத்தானுக்கு எவ்வித அதிகாரமுமில்லை.

எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக ஷைத்தானுக்கு எவ்வித அதிகாரமுமில்லை. திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் செல்லும். (16:99-100)
''நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர'' என்று கூறினான். நிச்சயமாக உன்னைப் பின்பற்றும் அனைவரும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும். (15:42-43)

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான் ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள் அவன் தன்னைப் பின்பற்றும் தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான். (35:6)

ஷைத்தானை வணங்கும் இலுமனாட்டிகளும் பலஹீனமானவர்களே!
அறிவாற்றல், ஆட்சி அதிகாரம், பணம்பலம் மற்றும் படைபலம் என்று இவ்வுலகின் அனைத்து சக்திகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த மிரோவிஞ்ஜியன் இலுமனாட்டிகளை நாம் வெற்றிகொண்டு தூய இஸ்லாத்தை நிலைநாட்டுவது சாத்தியமா? என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படலாம். அத்தகையவர்களுக்கு நாம் தெளிவாக சொல்லிக் கொள்கிறோம், லூசிஃபர் எனும் ஷைத்தானின் ஆட்சியை இப்பூமியில் அமைத்திடத் துடிக்கும் இந்த மிரோவிஞ்ஜியன் இலுமனாட்டிகளும் முஃமின்களுக்கு முன்னால் பலஹீனமானவர்களே!. ஆம் நாம் முஃமின்களாக இருக்கும் பட்சத்தில், அல்லாஹ்வின் உதவி நமக்கு இருக்கும் வரை நம்மை எந்த ஷைத்தான்களாலும் வெற்றி கொள்ள இயலாது என்பதை கீழ்க்காணும் இறைவசனங்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

... மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான். (4:141)

...அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.(8:7)

எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நன்மாராயம். ஆகவே என்னுடைய நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! (39:17)

எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் அருள் மிக்க அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
(2:249)

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொல்லாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (3:139)
எனவே உண்மை முஃமின்களுக்கு முன்னால் ஷைத்தானிய இலுமனாட்டிகளும் பலஹீனமானவர்களே என்பதையும், இலுமனாட்டிகளை ஒப்பிடும்போது உண்மை முஃமின்கள் சிறுகூட்டத்தினராக, பலம்குன்றியவர்களாகத் தெரிந்தாலும் இறுதிவெற்றி முஃமின்களுக்குத்தான் என்பதையும் அறியமுடிகிறது – அல்ஹம்துலில்லாஹ்.
நாம் முதலில் முஃமின்களாக இருக்கவேண்டும்.

ஆனால் ஒரு நிபந்தனை!. அல்லாஹ்வின் உதவியும், ஷைத்தானிய சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்பும், வெற்றியும் நமக்குக் கிடைக்க வேண்டுமெனில் நாம் முதலில் முஃமின்களாக வாழவேண்டும். இதுவே அந்த நிபந்தனை. நாம் உண்மையான, உளத்தூய்மையான, உறுதிமிக்க முஃமின்களாக வாழ்ந்தால் மட்டுமே உன்னதமான வெற்றிகளை அடைய இயலும். இதைத்தான் திருமறைகுர்ஆனும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களுக்குத் தகுதி கொடுத்து உங்களை நம்மளவில் நெருங்கி வைக்கக் கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான நல்ல அமல் செய்கின்றாரோ அத்தகையோருக்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு. மேலும் அவர்கள் சுவனபதியின் உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள். (34:37)

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும் நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (6:32)

நபியே! யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். (6:70)

ஏனென்றால் அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.
(7:51)
எனவே ஒவ்வொரு உண்மை முஃமினுடைய இலட்சியமும், குறிக்கோளும் நாளை மறுமையில் ஈடேற்றம் அடைவதை நோக்கியே இருக்கவேண்டும். மறுமையை மறந்து அற்பமான இவ்வுலக வாழ்க்கையின் தற்காலிக சுகபோகத்தில் மயங்கிக் கிடப்பவன் உண்மை முஃமின் அல்ல. அவனுக்கு அல்லாஹ்வுடைய உதவியோ, இம்மை மறுமை வெற்றியோ, ஈடேற்றமோ கிடையாது என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

எனவே இவ்வுலக மாயையில் சிக்குண்டு, இஸ்லாமிய மார்க்கத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்ட அத்தகையவர்களுக்கு ஷைத்தான்கள், இலுமனாட்டிகள் என்று (நம் ஒற்றுமை இணையதளம் போல எத்தனை இணையங்கள்) எத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்காது. இவ்வுலக இச்சைகளில் மயங்குவதை விட்டொழித்து மறுமை வெற்றியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படும்வரை அவர்கள் பரிசுத்த முஃமின்கள் என்ற நிலையை அடையவே மாட்டார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

முஃமின்கள் அல்லாஹ்வின் சோதனைகளுக்கு உள்ளாவர்

பிரிவினைகளும், சுயநலமும், சுகபோகமும், சூழ்ச்சிகளும் நிறைந்த இச்சோதனையான காலகட்டத்தில் ஒரு உண்மையான முஃமினாக நாம் வாழ்வதென்றால் கருங்கல்லில் நாற் உரிப்பதைப்போன்று மிகக்கடுமையான ஒன்றாகத்தான் தெரியும். இத்தகைய சூழ்நிலைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் முஃமின்கள் எதிர்நோக்கித்தான் இருந்துள்ளனர். இது ஒருபக்கம் இருக்க, ஒரு முஃமினாக இவ்வுலகில் வாழ்ந்து எல்லையும், உவமையும் இல்லாத பேரின்ப சுவனத்தை இறைவனின் பரிசாகப் பெறவேண்டுமென்றால் படைத்த இறைவனின் சோதனைகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும்.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமை, பிணி போன்ற கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன. 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்'' என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் ''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது'' என்று நாம் ஆறுதல் கூறினோம்.
(2:214)

முஃமின்களே! உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணைவைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறைவனிடம் பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
(3:186)

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் இன்னல்களை சகித்துக் கொள்ளுங்கள் ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் இம்மையிலும், மறுமையிலும் நீங்கள் வெற்றியடைவீர்கள்!.
(3:200)

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்.(3:103)

ஆம் உலக சரித்திரத்தில் தங்களுக்கென்று தனிமுத்திரை பதித்துள்ள உலகத்திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும், அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட உத்தமத் தோழர்களான சத்திய ஸாஹாபாக்களின் சோதனைமிக்க வரலாறுகளில் நமக்கோர் அழகிய முன்மாதிரி நிச்சயம் இருக்கிறது. சோதனைகளை அல்லாஹ்வின் உதவிகொண்டு சாதனைகளாக மாற்றிக்காட்டி, ஈருலவெற்றிகளின் இருப்பிடமாய்த் திகழும் அத்தியாகச் செம்மல்களிடம் இருந்தது ஒன்றுதான். அது கற்பாறைகளையும் விஞ்சும் உறுதிமிக்க ஈமான் என்றால் மிகையில்லை. எனவே நம்மை எதிர்நோக்கும் சோதனைகளைக் கண்டு துவண்டுவிடாமல், தடைக்கற்களாகத் தெரிபவற்றை படிக்கற்களாக மாற்றி அந்த உத்தமத்தோழர்களின் வெற்றிவழியில் நாமும் நடைபோடுவோமாக.

அல்லாஹ் முஃமின்கள் மீது பேரன்பு கொண்டவன்:

அல்லாஹ் மிகப்பெரும் கருணையாளன், நீதியாளன். அல்லாஹ் வெருமனே முஃமின்களை சோதித்துவிட்டு இருந்துவிடுவதில்லை. மாறாக அதற்கான பரிசுகளையும் வழங்கும் இறைவன் நம்மீது பேரன்பும், நிகரற்ற கருணையும் வைத்துள்ளான் என்பதற்கு கீழ்க்காணும் நபிமொழிகள் (ஹதீஸ்குத்ஸி) சான்று பகர்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனதிற்குள் நினைவு கூர்ந்தால், நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான வானவர்கள் நிறைந்த சபையில் அவனை நினைவு கூறுகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன். நூல்:புகாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் அல் கிஃபாரி(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அல்லாஹ் கூறினான்: 'அடியார்களே!  அநீதி இழைப்பதை என் மீது ஹராம் ஆக்கியுள்ளேன். (நீங்கள்) உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதையும் தடை செய்துள்ளேன். எனவே, ஒருவர் மற்றவருக்கு அநீதி இழைக்காதீர்கள்.

என் அடியார்களே! உங்களில் நான் நேர்வழி காட்டியவர்களைத்தவிர மற்றவர்கள் அனைவரும் வழி கேட்டிலுள்ளீர்கள். எனவே என்னிடம் நேர் வழியை வேண்டுங்கள். நான் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கின்றீகள். எனவே என்னிடம் உணவை வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிப்பேன்.

என் அடியார்களே!  உங்களில் நான் ஆடையளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆடையின்றி உள்ளீர்கள். எனவே என்னிடம் ஆடையை வேண்டுங்கள். நான் உங்களுக்கு ஆடை அணிவிப்பேன்.

என் அடியார்களே!  நீங்கள் இரவும், பகலும் பாவம் செய்கின்றீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். எனவே என்னிடம் பாவமன்னிப்பை தேடுங்கள். நான் பாவங்களை மன்னிப்பேன்.

என் அடியார்களே!  எனக்கு நன்மையோ, தீமையோ செய்வதற்கு உங்களால் கண்டிப்பாக முடியாது. அவ்வாறு இயன்றால் அல்லவா எனக்கு நன்மையோ, தீமையோ செய்வீர்கள்.

என் அடியார்களே!  முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் பயபக்தியுடையவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் அதிகரித்து விட முடியாது.

என் அடியார்களே!  முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் கொடியவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் குறைக்க முடியாது.

என் அடியார்களே!  முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் (எதையாவது) வேண்டினால், நான் அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டியதை கொடுத்தாலும், என்னிடமுள்ளவற்றுக்கு, ஒரு ஊசியைக் கடலில் முக்கி எடுத்தால் ஏற்படும் இழப்பைவிட அதிகமான இழப்பு ஏற்படாது.

என் அடியார்களே!  நிச்சயமாக நான் உங்களுடைய செயல்களைக் கொண்டே அடையாளம் காண்பேன். பிறகு அவைகளுக்கு கூலியும் வழங்குவேன். எனவே (மறுமையில் தனக்கு) நன்மையைக் காண்பவன் அல்லாஹ்வாகிய என்னை புகழட்டும். இதற்கு மாறாக காண்பவன், தன்னைத் தானே பழித்துக் கொள்ளட்டும். நூல்:முஸ்லிம்.
முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
1) இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி. ஆம் டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நீங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் வீட்டின் குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன் மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு, காதல் - காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி.

2) அத்தகைய மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மலர ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை இஸ்லாத்தில் முழுமையாக நுழைத்திட வேண்டும். நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள நிபந்தனைகள் அடிப்படையில், பெயரளவில் முஸ்லிம் என்று இல்லாமல் இஸ்லாத்தின் கடமைகளையும், சட்டதிட்டங்களையும் தெளிவாக விளங்கி செயல்படக்கூடிய முன்மாதிரி முஸ்லிமாக முதலில் நீங்கள் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் 5 முக்கியக் கடமைகளான சாட்சிபகர்தல், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்றவற்றில் மிகுந்த பேணிக்கையுடன் நடந்து காட்டவேண்டும். ஒரு முஸ்லிமின் அடிப்படை அம்சங்களான உண்மை, நேர்மை, பணிவு, நன்னடத்தை, வாக்குறுதி மீறாமை போன்ற நற்பண்புகளின் உறைவிடமாக நீங்கள் திகழவேண்டும். இந்திய மண்ணில் இஸ்லாம் வேரூண்டக் காரணமாக அமைந்தவைகளுள் ஒன்று நம்மக்களிடம் அன்றைய அரபுமுஸ்லிம் வணிகர்கள் நடந்து காட்டிய நேர்மையான நன்னடத்தைகள் என்பதையும் கவனத்தில் கொள்க.

3) உங்கள் வீட்டின் குழந்தைகள் ஒரு முன்மாதிரி இஸ்லாமியக் குழந்தைகளாகத் திகழவேண்டும். பசுமரத்தாணிபோல என்ற உவமைக்கு ஒப்ப இஸ்லாமியக் கோட்பாடுகளை உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தெளிவாக பயிற்றுவிக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய எழுச்சி ஒரளவு துடிப்போடு இருக்கும் நமது காலகட்டத்திலேயே இத்தனை சவால்களை நாம் எதிர்கொள்கிறோம் என்றால் நாளைய இளைய சமுதாயமாக மாறவிருக்கும் நம் குழந்தைகள் எத்தகைய ஷைத்தானிய சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டிவரும்? என்பதை கனத்த மனதுடன் நினைத்துப் பார்க்கிறோம். அத்தகைய இடர்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் அளவிற்கு அவர்களின் ஈமானிய பலத்தை குழந்தைப் பருவத்திலேயே அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

4) இஸ்லாமிய குடும்ப உறவுகள் மேம்படவேண்டும். சிறுசிறு கருத்துவேறுபாடுகள், பிரச்சனைகளால் பல முஸ்லிம் குடும்பங்களுக்குள் பல பிரிவினைகள் ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல அத்தகைய பிளவுகள் அனைத்திற்கும் முதற்காரணமாக இருப்பது, மறுமைக்கான பரிசோதனைக் கூடமான அற்ப உலக வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள பற்றுதலே. சுயநலமாகவும், அகங்காரமாகவும், பழிவாங்கும் எண்ணத்துடனும் வாழ்ந்திருந்து இறுதியில் நாம் எதைக் கொண்டு செல்லப்போகிறோம்? என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். தனிப்பட்ட விரோதங்கள்தாம் நாளடைவில் குடும்பப் பிரச்சனைகளாக வலுக்கிறது. நம் குடும்ப உறவுகளை முறித்து, பல பிளவுகளை நமக்குள் ஏற்படுத்தி அவற்றையே ஒரு இயக்கப்பிளவாக, ஒரு சமுதாயத்தின் பிளவாக மாற்றி, நம்மை கோழைகளாக ஆக்கிவிடுவது கெட்ட ஷைத்தானுடைய (இப்லீஸ் - லூசிஃபருடைய) வேளைதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கான வித்து உங்கள் குடும்பத்திலிருந்து ஊன்றப்பட வேண்டும்.

5) உங்கள் குடும்பம் ஒரு உள்ளரங்கு இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாறிடவேண்டும். உங்கள் பெற்றோர்கள், மனைவியர் மற்றும் குழந்தைகள் உட்பட உங்கள் குடும்பத்தார்கள், உங்கள் பொறுப்பிலுள்ளோர் என்று அனைவருக்கும் ஷைத்தானுடைய, இலுமனாட்டிகளுடைய சூழ்ச்சிகளை விளக்கவேண்டும். மேலும் அவர்களையும் தூய இஸ்லாத்தின் கோட்பாடுகளால் வார்த்தெடுத்து இஸ்லாம் என்னும் சத்தியமார்க்கத்தில் இறுகிப் பிணைத்திடவேண்டும். ஒரு வீட்டிற்கு படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்பன எவ்வாறு அவசியமோ அது போல ஒவ்வொரு முஸ்லிம்களின் வீட்டிலும் குறைந்தது 50 புத்தகங்களாவது கொண்ட ஒரு இஸ்லாமிய நூலகம் அவசியம் இருக்க வேண்டும். உங்கள் வீட்டிற்குள் வரும் வருகையாளர் இஸ்லாத்தின் அம்சங்களில் எதையாவது ஒன்றை கற்று அறிந்தவராக உங்கள் வீட்டைவிட்டு திரும்பிச்செல்ல வேண்டும்.

6) முஸ்லிம்கள் பயனுள்ள கல்வி பெறவேண்டும். கல்வி கற்பதை இஸ்லாம் வலியுறுத்தும் அளவிற்கு வேறு எந்த மார்க்கமும் வலியுறுத்தவில்லை. உலக கல்வி வேறு, மார்க்கக் கல்வி வேறு என்று கல்வி இருகூறாக பிரிக்கப்பட்டுள்ளதின் பின்னனியில் யூதசூழ்ச்சிகள் இருப்பதையும், மார்க்கக் கல்வியோடு கூடிய உலக கல்விதான் உங்களுக்கு பயனளிக்கும் என்ற உண்மையையும் உணர்ந்து கொள்ளுங்கள். கல்வி கற்பதை நம் மார்க்கம் கடமையாக்கியுள்ளதை உணர்ந்து நீங்களும், உங்கள் குடும்பமும் அத்தகைய இருகல்விகளையும் ஒருங்கே பெற முயலுங்கள். பிரித்து வைக்கப்பட்டுள்ள இருகல்விமுறையை ஒன்றிணைக்கவும், இதைப்பற்றிய விழிப்புணர்வை நீங்கள் வாழும் பகுதியில் ஏற்படுத்திடவும் பாடுபடவேண்டும். உலக ஊடகங்கள் பொரும்பாலும் இஸ்லாத்திற்கெதிரான நச்சுக்கருத்துக்களை வெளியிடுவதையும், பொய்களைப் பரப்புவதையுமே மூலதனமாகக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவைகளை பிரித்தறிந்து உண்மையை விளங்கும் அளவிற்கு அறிவாற்றல் பெற்றவராக நீங்கள் திகழவேண்டும். ஊடகங்களில் வெளியிடப்படும் இஸ்லாத்திற்கெதிரான விஷயங்களை உணர்ச்சிப் பூர்வமாக அணுகிடாமல் அவற்றை அறிவுப்பூர்வமாக அணுகி உண்மை நிலையை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும்.

7) வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் இஸ்லாத்தையே முன்னிலைப் படுத்துங்கள். உங்களின் வேலைப்பளுக்கலோ, நீங்கள் வாழும் சுற்றுச்சூழலோ, அல்லது நீங்கள் வகிக்கும் பதவிகளோ நீங்கள் இறைவிசுவாசியாக வாழ்வதற்கும், மேற்காணும் நல்ல விஷயங்களை செயல்படுத்துவதற்கும் தடையாக இருப்பின் அத்தகைய நிலையைவிட்டு தெளிவான திட்டமிடலுடன் விரைவாக மீட்சிபெற முயலுங்கள். உங்கள் ஈமானை பலஹீனப்படுத்தி மறுமையை மறக்கடித்திடும் அளவுக்குள்ள பொருளீட்டலோ, வேலைப்பளுவோ, பதவிகளோ அல்லது சுற்றுச்சூழலோ அபாயகரமானது, அவசியமற்றது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். நான் மிகவும் வேலைப்பளு மிக்கவன், இஸ்லாமிய அறிவில் பலஹீனமானவன் என்பன போன்ற தாழ்வு மனப்பான்மையான, போலியான மாயையை விட்டொழித்து தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் இஸ்லாத்தை முன்னிலைப்படுத்திட உறுதிகொள்ளுங்கள்.

இவ்வாக்கத்தில், நீங்கள், உங்களின், உங்களுடைய போன்ற முன்னிலை வாசகங்கள் எங்களையும் சேர்த்தே குறிக்கும். எனவே அவற்றை நாம், நமது, நம்முடைய என்ற பொருளில் புரிந்துகொள்ளவும். இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ள விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க முன்வரும் நன்மக்களாக நம் யாவரையும் ஆக்கிஅருள்வதற்கு வல்ல அல்லாஹ் போதுமானவன். ஷைத்தானிய இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற்ற முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ்ந்திட பிராத்தனைகளுடன் வாழ்த்தி முடிக்கிறோம்.

... எங்கள் கடமை இறைவனின் தூதுச் செய்தியை விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை (36:17)

எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (13:11)

இரகசிய சமுதாயம் - தொடர்-6

இரகசிய சமுதாயம் - தொடர்-6

666 - பார்கோடு இரகசியம்
பார்கோடு என்பதற்கு பட்டைக் குறியீடு என்று பெயர். 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பெர்னார்டு சில்வர் (Bernard Silver) மற்றும் நோர்மன் ஜோசப் உட்லேண்ட் (Norman Joseph Woodland) ஆகியோரது முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது நமதூர் சில்லரைக் கடைகளில் கிடைக்கும் அற்பமான தின்பண்டங்கள் முதல் பல்பொருள் அங்காடிகளின் விலையுயர்ந்த பொருட்கள் வரை இந்த பார்கோடு குறியீட்டின் மூலமே முறைபடுத்தப் பட்டிருப்பதை நாம் காண்கிறோம். இதில் என்ன பரம இரகசியம் என்று நினைக்கிறீர்களா? ஆம் இதையும் விட்டுவைக்கவில்லை இந்த இல்லுமனாட்டி லூசிஃபர்கள்.
நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன் இருதயங்களில் மறைத்து இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.(35:38)

பார்கோடுகளில் மேலிருந்து கீழாக அச்சிடப்பட்டிருக்கும் கோடுகளின் இறுதியில் அதற்கு ஈடான மதிப்பு எழுதப்பட்டிருக்கும். பார்கோடு மொழியில் இரட்டைக்கோடு என்பது
6 என்ற எண்ணைக் குறிக்கும். உலகில் அச்சிடப்பட்டிருக்கும் சர்வதேச பார்கோடுகள் அனைத்திலும் மூன்று முறை இந்த இரட்டைக்கோடுகள் வருவதைக் காணலாம், அதாவது 6- 6- 6. மேலும் இவ்வாறு மூன்றுமுறை அச்சிடப்பட்டிருக்கும் 6 என்ற எண்ணுக்குரிய கோடுகளில் அதன் மதிப்பெண்ணான 6 இடம்பெற்றிருக்காது. இன்னும் அந்த மூன்று இரட்டைக்கோடுகளும் மற்ற கோடுகளின் அளவைவிட சற்று நீளமாக இருப்பதைக் காணலாம். (இதை உங்கள் அருகிலுள்ள பொருட்களின் பார்கோடுகளை பரிசோதித்துப்பாருங்கள் அல்லது கீழுள்ள படத்தை உற்றுநோக்குங்கள்.)

ஆம் உலகின் அனைத்துப் பொருட்களிலும் அச்சிடப்பட்டிருக்கும் இந்த பார்கோடுகளின் வாயிலாக
666 என்ற எண் மறைமுகமாக பிரபலப்படுத்தப்படுகிறது. அதுசரி இந்த 666 என்றால் என்ன என்கிறீர்களா? அதன் பின்னனியில் பைபிள் வசனம் இருக்கிறது. ஆக்கத்தை இறுதிவரை பொறுமையாக படியுங்கள். அந்த பைபிள் வசனம் இதோ

பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன், அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது. அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.

மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும்,அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. [Rev 13 : 11-18]

தெளிவாகச் சொல்வதென்றால் பைபிளின் கருத்துப்படி 666 என்ற எண் ஷைத்தானிய மிருகத்தையும், அந்திகிருஸ்துவான தஜ்ஜாலையும் குறிக்கும்.


முஸ்லிம்களே! இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றிவிட்டார்கள். மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, ''நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்'' என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களுள் சிலர் அவர்களுள் சிலருடன் தனித்திடும்போது, ''உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடு வதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த தவ்ராத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, இதை நீங்கள் உணரமாட்டீர்களா? என்று யூதர்கள் சிலர் கூறுகின்றனர். அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?. மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர். கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. (2 : 75-78)

மேற்கண்ட
666 என்ற எண்ணிற்கு சூரிய இலக்கம் என்றும் கூறுவர். நமதூர் ஹஜ்ரத்மார்கள் சொல்லும் பால்கிதாபு கணக்குபோல சூரியவணங்கிகள் அமைத்த இந்த சதுரக்கணக்கின் விளக்கத்தை கீழேபாருங்கள்.

அதாவது ஒருசதுரத்தை
6 Rows, 6 Columns ஆக பிரித்தால் 36 சிறிய சதுரங்கள் வரும். அதில் 1 முதல் 36 வரையுள்ள எண்களை மேற்காணும் படத்தில் உள்ளதுபோல அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு Row மற்றும் Column வரிசையில் இடம்பெற்றிருக்கும் எண்களின் கூட்டல் மதிப்பு 111. அதை சதுரத்தின் மொத்த Row-Column கட்டமைப்பு எண்ணான 6 ஆல் பெருக்கினால் வருவது 666 .

1 முதல் 36 வரையுள்ள எண்களை வரிசையாகக் கூட்டினால் வருவதும்
666 .  (1+2+3…+36=666)
இன்னும் சதுரத்தில் அமைந்துள்ள 3 சிறிய சதுரங்கள் மற்றும் 6 கனசதுரங்களிலுள்ள எண்களின் கூட்டல் மதிப்பு 74 என்று வரும். அதாவது

      6 + 1 + 31 + 36 = 74         11 + 8 + 26 + 29 = 74          16 + 15 + 21 + 22 = 74
      7 + 3 + 12 + 25 = 74         19 + 24 + 13 + 18 = 74         32 + 35 + 2 + 5 = 74
      3 + 34 + 4 + 33 = 74         14 + 23 + 17 + 20 = 74         27 + 28 + 9 + 10 = 74
3  சிறிய சதுரங்கள் மற்றும் 6   செவ்வகங்கள் என்ற இந்த 9 சதுரங்களையும் 74 ல் பெருக்கினால் வருவது 666 (9X74=666)
மேலும் 1 முதல் 9 வரையுள்ள எண்களை எழுதி அதில் கீழ்க்கண்டவாறு கூட்டலை அமைத்தால் கிடைப்பதும் 666.
        1 + 2 + 3 + 4 + 567 + 89 = 666
        123 + 456 + 78 + 9 = 666.
        9 + 87 + 6 + 543 + 21 = 666
இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. [Rev 13 : 18]
ஞானமும் விளங்காது ஒரு மண்ணாங்கட்டியும் விளங்காது, இப்படியே சென்றால் பைத்தியம்தான் பிடிக்கும், இறுதியில் நரகப்படுகுழியே விளங்கும். ஆக 666 என்பது லூசிஃபரை வணங்கும் இல்லுமனாட்டி ஷைத்தானியக் கும்பல் அமைத்த ஒரு கணிதமுறையாகும்.
இந்த 666 என்ற எண்ணை பெரிய மாயாஜால வித்தையாக நம்பி பாப், ராக் மற்று ஜாஸ் இசைக் கச்சேரிகள் மூலம் தற்போது பிரபலப் படுத்தப்படுவதைக் காணலாம்.
பார்கோடுகளின் வாயிலாக உலகம் முழுவதும் பரவச் செய்யப்பட்டிருக்கும் 666 என்ற எண்ணிற்குப்பின்னே மறைக்கப்பட்டிருக்கும் இரகசியங்கள் மேலும் கிழிவதை கீழுள்ள வீடியோ தொகுப்புகளின் மூலம் அவசியம் காணுங்கள்.

வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள் அவன் மீதே உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை. (11:123)

எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை, அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை, நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது
. (53:28)

எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு இவ்வுலகில் கிடைத்துக்கொண்டே இருக்கும். நம்முடைய வான தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றும் போது (அவ்வானதூதர்கள்) ''அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?'' எனக் கேட்பார்கள், அதற்கு ''அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் மறைந்து போய்விட்டார்கள்'' என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
(7:37)

இரகசிய சமுதாயம் - தொடர்-5

இரகசிய சமுதாயம் - தொடர்-5

டயானா படுகொலை - புதைக்கப்பட்ட உண்மைகள்

டயானாவின் வீழ்ச்சி வில்லியமுக்கு எழுச்சி
வேல்ஸ் இளவரசி டயானா (Diana, Princess of Wales, இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், பிறப்பு : ஜூலை 1, 1961). இயேசுவின் இரத்தபந்தத்தைப் பாதுகாக்கும் புனிதக்கிண்ணமாக வர்ணிக்கப்பட்ட டயானாவிற்கும், இளவரசர் சார்லஸூக்கும் 1981 ஜூலை 29 ம் நாள் திருமணம் நடந்தது. வில்லியம் (1982) ஹாரி (1984) என்ற இருபுதல்வர்களைக் கண்ட இத்தம்பதியினர் தங்களின் 15வருட மணவாழ்க்கைக்குப் பின்னர் 1996 ம்ஆண்டு ஆகஸ்டு 28 ம் நாள் இவ்விருவருக்கும் மணமுறிவு ஏற்பட்டது.
இளவரசர் சார்லஸூடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொதுவாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். உலகளாவிய அளவில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.
அந்த 15 வருட இங்கிலாந்தின் இளவரசி என்ற படோட வாழ்க்கையால் மீடியாக்களில் படாதுபாடுபட்டார் டயானா. இவரது அசிங்கங்கள் நிறைந்த கவர்ச்சி வாழ்க்கையை நாம் எழுதித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்றில்லை. அந்த அளவிற்கு அறைகுறை ஆடை காட்சிகள், குடிபோதையில் அரைநிர்வான ஆட்டங்கள் என்று மேற்கத்திய கலாச்சார அனாச்சாரங்கள் இவரை கவ்விக்கொண்டுதான் இருந்தன என்பதே உண்மையிலும் உண்மை.

எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)


இந்த விவாகரத்திற்குப் பின்னர், தன்னை மருமகளாக ஏற்ற வின்ட்ஸர் அரச குடும்பத்தாலேயே தான் கொலைசெய்யப்பட இருக்கிறோம் என்பதை சுதாரித்துக்கொண்டார். அதை ஆவனமாகவும் பதிவுசெய்து கீழ்க்கண்டவாறு எழுதியும் வைத்தார்.

I am sitting here at my desk today in October, longing for someone to help me & encourage me to keep strong & hold my head high. This particular phase in my life is the most dangerous. My Husband is planning 'an accident' in my car. brake failure & serious head injury in order to make the path...Princess Diana, Oct. 1996.
''இந்த அக்டோபர் 1996 ம் நாளில் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்து உதவிசெய்பவர் யாரும் உண்டோ என்று ஏங்கிய வண்ணம் இருக்கிறேன். எனது கணவரோ (சார்லஸ்) என்னை கார் விபத்துக்குள்ளாக்க விரும்புகிறார். எனது காரின் வேகம் நிறுத்தியை செயலிழக்கச்செய்தும் எனது தலையில் பயங்கர காயத்தை ஏற்படுத்தியும் அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்...''

இந்நிலையில் டோடி என்னும் இமாத் முஹம்மது அல் ஃபாயித் என்ற முஸ்லிம் இளைஞரை தனக்கு ஆதரவு அளிப்பவராகக் கண்டு காதலித்தார். வழக்கம்போல இருவருக்கும் உள்ள உறவு பற்றிய சர்ச்சையில் மீண்டும் சிக்கினார்.
 

கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும், நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் தகுதியானவர்கள். (24:26)

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும் தீய வழியாகவும் இருக்கின்றது.
(17:32)

டோடியின் பழக்கம் ஏற்பட்ட பின்னர் எயிட்ஸ் நோயாளிகளுக்கு  சேவைகள், தர்ம அரக்கட்டளைகள் நிறுவுதல் என்று சற்று மாறத்துவங்கிய டயானா மக்கள் சேவை புரிதலே தான் தன் தலையாயக் கடமை என்றார். அன்பு, மக்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையில்லா போக்குகள் பற்றி பொதுப்படையாக பேசத் துவங்கினார்.
I think like any marriage, especially when you've had divorced parents like myself; you want to try even harder to make it work. So many people supported me through my public life and I will never forget them. The biggest disease this day and age is that of people feeling unloved. The greatest problem in the world today is intolerance. Everyone is so intolerant of each other. The kindness and affection from the public have carried me through some of the most difficult periods, and always your love and affection have eased the journey. Nothing brings me more happiness than trying to help the most vulnerable people in society. It is a goal and an essential part of my life - a kind of destiny. Whoever is in distress can call on me. I will come running wherever they are. - Princess Diana
அந்த நேரத்தில்தான் அவர் யூகித்த அந்த படுகொலை சம்பவம் நடந்தும் விட்டது. 1997 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ம் தேதி நல்லிரவு. உலகிலேயே அதிகவிலையும், பாதுகாப்பும் நிறைந்த கார்களில் ஒற்றாகக் கூறப்பட்ட அந்தக்கார் இளவரசி டயானாவையும், அவரது அப்போதைய காதலர் டோடி ஃபாயிது, இவர்களுக்கு மெய்க்காப்பாளர் ஒருவர், மற்றும் ஓட்டுனர் என்று நாள்வரை சுமந்து சென்றது. டயானாவின் கவிர்ச்சியான தோற்றத்தை புகைப்படமெடுத்து பரபரப்பு செய்திகளை வெளியிட காத்துக்கிடந்த பத்திரிக்கை புகைப்படக்குழுவினர் டயானாவின் காரை பின்தொடர்ந்ததாக தகவல். பாரிஸ் நகர சுரங்கப் பாதையில் அதிவேகத்தில் சென்ற டயானாவின் கார் பெரும் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சிலவினாடிகளில் டோடி ஃபாயிதும் ஓட்டுனரும் இறந்துபோயினர். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த டயானா சிகிச்சை பலனிற்றி இறந்தார். அவரது மெய்காப்பாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டயானா ரசிகர்களின் கோபக்குமுறல்கள் அந்த புகைப்படக் குழுவினரை நோக்கி பாய்ந்தன. ஃபிரான்ஸின் தடவியல்துறையினருடன், உளவுத்துறையினரும் களத்தில் இறங்கி விபத்து குறித்தி நடத்திய புலன் விசாரனையில் ஓட்டுனர் அதிகம் மது அருந்தியிருந்ததாகவும் அதனாலேயே கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் கூறி விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
டயானா இறந்த ஒரு வாரத்திற்குள் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை டயானா பெயரில் தானம் செய்து ஃபிரான்ஸின் ஸ்பென்ஸர் குடும்பம் டயானாவின் இறப்பின் துக்கத்தை வெளிக்காட்டினர். மேற்கத்திய பத்திரிக்கைகள் இப்படுகொடுலையை இப்படி எழுதின அவள் அரசகுடும்பத்தில் ஒருத்தியாக இருந்தும் அவர்களாளேயே பலிவாங்கப்பட்டார். [She was "one of them" (the royal family) and yet was also victim of them]
டயானாவின் உடல் அடக்கம் 1997 செப்டம்பர் 6 ம்நாள் நடைபெற்றது. தனது இருமகன்கள் மற்றும் முன்னால் கணவர் சார்லஸ், அவரது அரசகுடும்பம் மற்றும் டயானா தன் பொறுப்பில் துவங்கிய 110 அறக்கட்டளைகளிலிருந்தும் பிரதிநிதிகள் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட அவரது இறுதி ஊர்வலத்தை இப்பூமியில் பாதிக்கும் அதிகமான மக்கள் அன்று தொலைக்காட்சி மூலம் கண்டதாகத் தகவல். அதனால்தானோ என்னவோ பிரிட்டனை ஆளும் வின்ட்ஸர் அரசாங்கம் தங்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அனுதாபம் தேடிக் கொண்டனர்.
அவர்கள் தேடிய அனுதாப அலையில் மண்ணை அள்ளிப்போடும் முகமாக டோடியின் தந்தை முஹம்மது அல் ஃபாயித் பத்திரிக்கையாளர்களை அழைத்து அதிர்ச்சி பேட்டியளித்தார். அதாவது தன் மகன் டோடி மற்றும் டயானாவின் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் பிரிட்டனின் அரசகுடும்பத்தின் நேரடி ஈடுபாட்டுடனேயே இப்படுகொலை நடந்துள்ளது என்றும், அமெரிக்காவின் சிஐஏ வும், பிரிட்டனின் உளவுத்துறையுமே இப்படுகொடுலையைச் செய்தனர் என்றும் உண்மைகளை போட்டு உடைத்தார்.


இளவரசி டயானா கார் விபத்தில் இறக்கவில்லை அவர் கொலை செய்யப்பட்டார் என்ற தகவலும் பரவலாக கிளம்பியுள்ளது. இதை இங்கிலாந்தின் முன்னணி வக்கீல் மைக்கேல் மேன்ஸ் பீல்ட் தெரிவித்துள்ளார்.  டயானா - டோடி அல் ஃபாயித ஆகியோருக்கு இடையே இருந்த உறவை முறிப்பதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. அல்மா சுரங்க சாலையில் நிகழ்ந்த கார் விபத்து
முன் கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொலை சதி என்றும் அவர் கூறியுள்ளார்.

The Princess of Wales was assassinated by MI6 and the CIA not merely because she was about to marry a Muslim but also because she was being "courted" by supporters of the Merovingian Bloodline - of which she herself was a member...[she] posed such a threat to the future of the British Royal Family.  The Sion Revelation p. 288
The maiden with the title of Princess of Wales died on August 31, 1997 at 4:05 AM. No one seems to have taken notice, but the moment she died, her zenith was aligned precisely with the birth zenith of the Prince of Wales. The death of the Princess of Wales meant a rebirth of the Prince of Wales. She had came to prepare him to become a King. Saturn sat upon the passageway to the bottom of the sea. Like the Phoenix, Diana was the Holy Grail who came to carry the sword Excalibur for the distance of one lifetime. When her spirits had passed the bottomless pits of self despair, she pulled on the handle of the Excalibur ancient sword. Thereafter, she became a Queen of a Princess to all England. In the end she was taken to a lake just like Excalibur, the Lady of the Lake...her soul was cast upon the sacred waters. Is this a sad ending to a legend, or was something else at work in the Heavens? Secrets of the Code p. 298
டயானா படுகொலையின் பின்னனி பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
நாம் இங்கு சொல்ல வருவது டயானாவின் படுகொலைப் பற்றியது அல்ல. அதன் பின்னனியில் உள்ள ஷைத்தானிய இல்லுமினாட்டிகளின் திட்டம் பற்றிதான்.

1) ஆம் விவாகரத்திற்குப் பின்னர் டோடியிடம் தஞ்சம் புகுந்த டயானா கர்ப்பம் தறித்திருக்கிறார் என்ற செய்தியும் பரவலாக அடிபட்டது. வருங்கால லூசிஃபர் மன்னன் வில்லியமின் தாய் ஒரு (பெயர்தாங்கி) முஸ்லிமுக்கு மனைவியா? அதன் மூலம் ஒரு முஸ்லிம் குழந்தையையும் பெற்றெடுக்க இருக்கிறாளா? என்ற செய்தி வின்ட்ஸர் அரசவைக்கு பெருத்த கலக்கத்தை ஏற்படுத்தியது. இதை தங்கள் மிரோவிஞ்ஸியன் வம்சவழிக்கு பெரும் அவமானமாகக் கருதினர்.

2) டயானா உயிரோடு இருந்தால் வில்லியம் என்ற மிரோவிஞ்சியன் லூசிஃபர் இளைஞரை பிரிட்டனின் மன்னராக்க இயலாது. அந்த வாய்ப்பு சார்லஸூக்கோ அல்லது டயானாவுக்கோ போகும் நிலைதான் இருந்தது. இவர்களின் ஷைத்தானிய நம்பிக்கைபடி இவ்வுலகை இக்கூட்டம் ஆண்டு அந்தி கிருஸ்துவை வரவழைக்க வேண்டுமெனில், இளவரசன் வில்லியமுக்கே முடிசூட்டவேண்டும்.

3) எலிசபெத்தின் மறைவிற்குப் பின்னர் சார்லஸ் தன் மகனுக்காக பட்டத்தை விட்டுக்கொடுத்தாலும், தன் மாமியார் எலிசபெத்தைவிட, கணவர் சார்லஸை விட உலகில் அதிக பிரபலமடைந்துவிட்ட இளவரசி டயானா பிரிட்டனின் ஆட்சி பீடத்திற்கு வந்துவிடுவாரோ என்ற எண்ணம் வின்ட்ஸர் குடும்பத்திற்கு இருந்தது.
4) டயானாவின் வேலை தன் இரத்தத்திலிருந்து வின்ட்ஸர் பரம்பரையில் ஒரு குழந்தையை ஈன்றெடுத்துக் கொடுப்பதே. அந்த வேளை முடிந்துவிட்டபடியால் அவளுக்கு விடைகொடுத்துவிட்டு வில்லியமை பட்டத்திற்காக முழுவீச்சில் தயார்படுத்துகிறார்கள்.

டயானாவின் மரணத்திற்குப் பின்னர் வில்லியமுக்கு அவசர அவசரமாக முடிசூட்டும் வேலையும் படுஜோராக நடக்கிறது. அவர் பள்ளிக்குச் செல்வது முதல் தனது காதலியோடு ஊர்சுற்றித் திரிவதுவரை படமெடுக்கப்பட்டு வில்லியம் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டது போல மீடியாக்களில் பரப்பப்படுகிறது. ஒருநாள் வில்லியம் நமதூர் அரசியல்வாதிகளை கூட மிஞ்சும் அளவிற்கு ரோட்டில் படுத்துறங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இத்தகவல்கள் அனைத்தையும் கீழ்க்காணும் வீடியோக்களில் பார்த்துக்கொள்ளுங்கள்.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு துதிசெய்கின்றன, அவனுக்கே ஆட்சி உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே, அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன். (64:1)

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? (2:107)

மனிதர்களே! உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம். அவர்களிடம் அவர்களுடைய இறைத்தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள் எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம். (10:13)

to be continue <<click>> this....





இரகசிய சமுதாயம் - தொடர்-3

இரகசிய சமுதாயம் - தொடர்-3

ஐக்கிய இரகசிய இராஜ்ஜியம்
இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 சுயாட்சி நாடுகளின் அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். பிப்ப்ரவரி 1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் இறந்தவுடன் ஏழு நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். ஐக்கிய இராச்சியம் தவிர, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெமெய்க்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள் (Commonwealth realm) என அழைக்கப்படுகின்றன.




 
         



பிரிட்டானிய அரசி எலிசபத்தின் அரசகுடும்பம் தாங்கள்தாம் தாவீது ராஜாவின் வம்சவழியினர் என்பதாக பரைசாற்றுகின்றனர். பிரிட்டனை ஆளும் இந்த (windsor) வின்ட்ஸர் அரச பரம்பரையினரே ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் ஆட்சி புரிகின்றனர்.
இந்த வின்ட்ஸர் பரம்பரையோடு ஸ்காட்லாந்தின் ஸ்பென்ஸர் (ஸ்டிவார்ட்) அரச குடும்பம் மிக நெருக்கமான உறவு வைத்துள்ளனர். மறைந்த இளவரசி டயானாவும் இதே ஸ்பென்ஸர் பரம்பரையைச் சார்ந்தவர்தாம். கிபி 1060 பிறந்த பிரென்சு படைவீரன்; காட்ஃபிரே ஆப் ப்ய்லன் (Godfrey of Bouillon) தன்னை மிரோவின்ஜியன் இரத்தபந்தம் என்று அறிவித்துக் கொண்டு ஜெரூசலத்தின் மீது பலமுறை சிலுவையுத்தங்களை நடத்தினான். பின்னர் தன்னை ஜெரூசலத்தின் மன்னனாக கி.பி 1099ல் பிரகடனப் படுத்தினான்.

இது உலகை ஆண்ட பிரிட்டனின் முடியாச்சிக்கு பெரும்  தலையிடியாக அமைந்தது. எனவே வின்ட்ஸர் அரச குடும்பம் பிரிட்டன் முடியாச்சியை சக்திமிக்க பேரரசாக மாற்றி இவ்வுலகை ஆளவேண்டுமெனில் தங்களோடு மிரோவின்ஜியன் இரத்தபந்தமும் கலந்து அதில் பிறக்கும் ஒருவனாலேயே முடியும் என்ற முடிவிற்கு வந்தனர். தங்களின் கொடுங்கோள் பரம்பரைதான் ஐரோப்பாவை ஆள வேண்டும் என்ற தீராதமுடிவிலுள்ள இந்த எலிசபெத் வகையராக்கள் இறுதியில் மிரோவின்ஜியன் இரத்தபந்தத்தில் பிறந்த இளவரசி டயானாவை தெய்வீகம் பொருந்திய புனிதப் பெண்மணி என கண்டுபிடித்தனர். ஏசுவின் பரிசுத்த இரத்தம் இளவரசி டயானா மூலம் பாதுகாக்கப்படுகிறது என்ற நம்பிக்கையில் இளவரசர் சார்லஸூக்கு அவளை மணமுடித்தனர்.

வின்ட்ஸரின் அரச பரம்பரையினர் மட்டுமே கலந்து கொண்ட அந்தத் திடீர் திருமணத்தில் பலவிதமான இரகசிய சடங்குகள் செய்யப்பட்டன. திருமண மேடையில் வீற்றிருந்த டயானா அன்று 3 மாத கற்பிணி. திருமணமாகி 6 மாதங்களில் இளவரசன் வில்லியம்ஸ் என்ற குழந்தையைப் பெற்றெடுத்தாள். இதுபோன்ற இரகசியங்கள் 1982 ம் ஆண்டு வாக்கில் வெளியுலகிற்குத் தெரியவந்தது.


இவர்களின் ஷைத்தானிய வேலைகளை தோலுரித்துக் காட்டும் அருள்மறை குர்ஆனின் எச்சரிக்கை வசனங்கள் இதோ...
(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு இணையுண்டென்று பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும். இதுவே அவர்களுடைய பகிரங்கமான பாவத்துக்குப் போதுமான சான்றாக இருக்கின்றது. (4:50)

இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் வம்சாவளி உறவை கற்பனையாக ஏற்படுத்துகின்றனர். ஆனால் ஜின்களும் மறுமையில் இறைவன் முன் நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள். (37:158)

... அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள் அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான் இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான். (6:100)

தாவீது ராஜாவின் பரம்பரை, ஏசுவின் இரத்தபந்தம், தெய்வீக பெண்ணின் கருவரை, என்பதெல்லாம் இவர்கள் தேசங்களை ஆள்வதற்கு அமைத்துக் கொண்ட வீன் கற்பனையே அன்றி வேறில்லை. இவர்கள் புனித வேதமாகக் கருதும் பைபிளையும், கடந்த கால நாகரிகத்தின் வரலாறுகளையும் ஆய்வுசெய்து கற்பனையாக வடிவமைத்த இரகசிய அரசியல் கோட்பாடுகள் இறுதியில் அவர்களை சாத்தானை வணங்கும் அளவிற்கு இட்டுச்சென்றுவிட்டதை தெளிவாக அறியமுடிகிறது.

இதற்கு சிறந்த உதாரணமாக இவர்கள் ஆட்சிபுரியும் பக்கிங்ஹாம் அரண்மனை முதல், அதன் வாயில், கொடி என்று துவங்கி இவர்கள் அணியும் ஆடைகள்வரை சாத்தானிய குறியீடுகளை முன்னிலைப் படுத்துவதைக் காணலாம்.


இந்த படத்தில் காணும் 'சிவப்பு கடல் நாகம்' சாத்தானை குறிப்பதாகும். ஏசுவின் இரத்த பந்தத்திலும், சாத்தானின் வித்திலும் உருவாகும் 13 வது மிரோவின்ஜியன் வாரிசிலிருந்துதான் அந்தி கிருஸ்துவான தஜ்ஜால் வருவான் என்பது இவர்களின் நம்பிக்கை. மேற்காணும் இந்த படத்தின் பின்னனியில் பைபிளின் ஒரு சரித்திரம் உண்டு. பைபிளோடு தொடர்புடையவர்களுக்கு நன்கு புரியும்.அதை அப்படியே கீழே தருகிறோம். (இதன் வீடியோ பதிவை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.)

1 பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றினதரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான்.

2 தானியேல் சொன்னது: இராத்திரி காலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.
3 அப்பொழுது வௌ;வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.
4 முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது. அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது. அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது. மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
5 பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன். அது ஒரு பக்கமாய்ச் சாய்து நின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது. எழும்பி வெகு மாம்சம்தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது.
6 அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன். அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது. அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது. அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.
7 அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன். அது கொடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது. அதற்குப் பெரிய இரும்புப்பற்கள் இருந்தது. அது நொறுக்கிப் பட்சித்தது. மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது. அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.
8 அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று. அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது. இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. (Dan 7 :1-8)
நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது, அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன, வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. (Rev 13:2)
அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும், தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத்தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைப்குறித்தும், அவற்றின் பொருளை அறிய மனதாயிருந்தேன். (Dan 7:20)
அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று. அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது. இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. (Dan 7:8)
அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது. இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. (Dan 7:8)
அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
(2 Thess 6-7)
(Note : The cult and preachings of so called Hashshashin movement as given by the below video clip is NOT related to any of the true Islamic principles. Readers are advised to evaluate further.)
இது போன்ற சாத்தானிய சக்த்திகளை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சித்திரங்களை,  கட்டிடங்கள், சினிமாக்கள், புத்தகங்கள், ஆடைகள் போன்றவற்றில் இவர்கள் திட்டமிட்டு விளம்பரம் செய்கின்றனர். அதன் உள்நோக்கம் என்ன என்பதை தனி கட்டுரையில் விரிவாக வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ். எனவே இத்தொடர் கட்டுரைகளை நீங்கள் படிப்பதோடு, மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்திட வேண்டுகிறோம்.
இவர்கள்தாம் தங்களுக்கு தாங்களே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்கள் இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் யாவும் தீர்ப்பு நாளில் இவர்களை விட்டு மறைந்துவிடும். (11:21)

... நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசகிறோம் அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது. பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான். (21:18)


to be continue <<click>> this.

                                     இரகசிய சமுதாயம் - தொடர்-4

Tuesday, January 7, 2014

யார் இந்த லூசிஃபர்? தொடர்-2

இரகசிய சமுதாயம் - தொடர்-2

யார் இந்த லூசிஃபர்?


 இரகசிய சமுதாயம்!" 1.
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் ஆவான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான். ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - வழி கெடுக்கும் ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள். அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள் அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர் (2:257).

லூசிஃபர்! முஸ்லிம்களிடத்தில் இந்த வார்த்தை பிரபலமில்லாதிருப்பினும், யூத கிருஸ்தவ உலகத்திற்கு நன்கு பரிட்சயமான ஒன்று இந்த லூசிஃபர். இலத்தின் மொழியில் லூசிஃபர் என்பதற்கு வெளிச்சத்தை வழங்குபவன்(?) என்று பொருள். சூரிய உதயத்திற்கு முன்னர் பிரகாசிக்கும் அதிகாலை நட்சத்திரமான வீனஸூக்கும் இப்பெயருக்கும் சில தொடர்புண்டு. அதாவது லூசிஃபா என்பது அந்த அதிகாலை நட்சத்திரத்திலிருந்து 'இறங்கும் தேவதை' என்ற மூடநம்பிக்கைதான் அது.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, யூத, கிருஸ்தவர்களின் நம்பிக்கைபடி லூசிஃபர் என்பவன் ஆதாம் ஏவாளை சுவனத்தில் தடுக்கப்பட்ட கனியை புசிக்கச்செய்து இறை சாபத்தால் பூமிக்கு தூக்கி எறியப்பட்ட சாத்தானியத் தலைவன் என்பதே. இதுதான் சரியான கருத்து. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சொல்வதென்றால் இப்லீஸ் என்ற ஷைத்தானைத்தான் யூத, கிருஸ்தவர்கள் லூசிஃபர் என்று அழைக்கின்றனர்.
இத்தொடர் கட்டுரையின் நோக்கம் வெறுமனே லூசிஃபரை பற்றி அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக லூசிஃபர் என்ற இந்த ஷைத்தானை வணங்கி அவனுடைய ஆட்சியை இவ்வுலகில் நிலை நிறுத்த இரகசியமாக பாடுபடும் மேற்கத்திய அரசகும்பலையும், அவர்களின் ஜாஹிலியாவையும்,  உலகமக்களுக்கு விளக்குவதுமேயாகும். மேலும் தன்னைத்தானே கடவுள் என்று பிரகடனப்படுத்திய கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் வாரிசுகளாகச் செயல்படும் இந்த யூத-கிருஸ்தவ நெட்வொர்க், ஷைத்தானின் ஒட்டுமொத்த உருவமான தஜ்ஜால் மீது எந்த அளவிற்கு பற்றும்-பாசமும் வைத்து அவனுடைய வருகைக்காக வழிமீது விழிவைத்துக் காத்திருக்கின்றனர் என்பதையும் தமிழ் இஸ்லாமிய உலகிற்கு வெளிப்படுத்துவோம் - இன்ஷா அல்லாஹ்.  

லூசிஃபரை கடவுள் என்று பிரகடப்படுத்தப்படுவதை கீழுள்ள வீடியோ தொகுப்பில் காண்க

இந்த ஷைத்தானிய லூசிஃபரை பற்றி கிருஸ்தவ உலகில் கீழ்க்காணும் இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

  1) லூசிஃபர் என்பவன் ஷைத்தான்தான் என்ற கிருஸ்தவர்களின் கருத்து
ஆவியானது தோன்றும் போதே அளவில்லா வல்லமையுடன் இரண்டு விதமாகவும் இருந்தன.

1. படைக்கும தன்மையும், பகுத்தறியும் தன்மையும் உள்ள நல்லதையே செய்யக்கூடிய பரிசுத்தமான ஆவி.
2. பகுத்தறியும் தன்மை அற்ற, படைத்ததை கெடுக்கும் தன்மையுள்ள தீமையையே செய்யக்கூடிய தீய ஆவி.
ஆதமும் ஏவாளும் என்று பாவம் செய்தார்களோ அன்றிலிருந்து சாத்தான் இந்த பூமியில் தனது ஆதிக்கத்தை தொடங்கிவிட்டான். மனம் திரும்புவான் என்று எதிர்பார்க்கப்பட்ட தேவதூதன் இறைவனுக்கு மிக பெரிய எதிரியாக நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்று தேவனுக்கு எதிரான கடின நிலையை அடைந்தான்.
அசுத்த ஆவிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு அவைகளை அடைத்து வைக்க தேவனால் உருவாக்கப்பட்ட பாதாளத்தை தனது உறைவிடமாக கொண்டுள்ள சாத்தான் ஆண்டவரின் சந்நிதிவரை சென்று வரும் வல்லமை படைத்தவனாக இருந்தான்.

முதல் மனிதனாகிய ஆதாம் இறைவனின் வார்த்தைகளை மீறி புசிக்க கூடாது என்ற கனியை புசித்து சாத்தானின் அடிமை ஆகிவிட்டதால் அவன் சந்ததியாகிய எல்லா மனிதர்களும் தொடர்ந்து சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் பிறக்கின்றனர். அந்த மனிதர்களுக்கு பூமியில் முடிந்த அளவு துன்பங்களை கொடுத்தும், முடிவில் மரித்த உடன் அவர்களை தன்னுடைய இடமாகிய பாதளம் கொண்டு சென்று நித்ய நித்யமாக துன்புருத்துவதன் மூலம் இறைவனுக்கு தாங்கொண்ணா மனவேதனையை கொடுத்துக்கொண்டே இருப்பது தான் இவன் திட்டம்.

இன்றுவரை அவன் நினைத்ததுபோல உலகத்தின் அதிபதி போல உலகத்தின் தேவனாக இருந்துகொண்டு அந்த லூசிபர் என்ற சாத்தனை ஆட்சி செய்து வருகிறான்.ஆனால் தீமையை அழிக்க இறைவனால் படைக்கப்பட்ட எல்லோரும் தங்கள் எதற்கு படைக்கப்பட்டோம் என்று கொஞ்சமும் கவலை இல்லாமல் தீமைக்கு அடிமையாகி இறைவனை விட்டு பிரிந்து தங்கள் விருப்பம் போல வாழ்ந்து வருகின்றனர்.


கடவுளின் சக்தியோடு லூசிபரின் சாத்தானிய சக்தி சண்டையிடுவதுபோல எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி
  2)லூசிஃபர் என்பவன் ஷைத்தான் அல்ல என்பதற்கு சில கிருஸ்தவர்கள் கூறும் காரணம்.

விடிவெள்ளி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் தோன்றும் பிரகாசமுள்ள நட்சத்திரமாக (வீனஸ் கிரகம்) இருப்பதனால், ஏசாயா 14:12ல் பாபிலோனிய அரசன் "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி" என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இத்தகைய அர்த்தத்துடன் 2 பேதுரு 1:19ல் விடிவெள்ளி (லத்தீனில் லூசிபர்) என்னும் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தல் 22:16ல் இயேசுகிறிஸ்துவும் "விடிவெள்ளி" என்று அழைக்கப்பட்டுள்ளார். லத்தீன் வேதாகமத்தில் இவ்விடத்திலும் லூசிபர் என்னும் சொல்லே உள்ளது. வெளிப்படுத்தல் 2:28லும் விடிவெள்ளி என்னும் சொல் உள்ளது. லூசிபர் என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சாத்தானுடைய பெயராயிருந்தாலும் வேதாகமத்தில் இப்பெயர் சாத்தானுக்கு கொடுக்கப்படவில்லை. வேதாகமத்தில் "பிசாசு" (மத் 4:1), "சர்ப்பம்" (2கொரி 11:3), "வலுசர்ப்பம்" (வெளி 12:7), "இப்பிரபஞ்சத்தின் தேவன்" (2கொரி 4:4), "இந்த உலகத்தின் அதிபதி" (யோவா 12:31,16:11), "சோதனைக்காரன்" (மத் 4:3), "பொல்லாங்கன்" (மத் 13:19, 1யோவா 5:18,19), "ஆகாயத்து அதிகாரப் பிரபு" (எபே 2:2), "பெயல்செபூல்" (மத் 12:24) என்னும் பெயர்கள் சாத்தானுக்கு உள்ளன.

எது எப்படி இருந்தாலும் லூசிஃபர் என்பவன் இறைவன் இல்லை. இறைவனைத் தவிர வேறெதையும் வணங்கக் கூடாது என்பதை வேதம் வழங்கப்பட்ட எந்த சமூகத்தினரும் மறுக்கமாட்டார்கள். மேலும் வணங்கத்தகுதியான ஒரே இறைவனுக்கு இணையாக மற்றொன்றை சிந்திக்க வைப்பது ஷைத்தானுடைய வேளைதான் என்பதும் திண்ணம். திருமறைக்குர்ஆன் இத்தகைய ஷைத்தான்களையும், அவற்றை வணங்குபவர்களையும் பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னறிவிப்பும் எச்சரிக்கையும் செய்துவிட்டது. அத்தகைய வசனங்களில் ஒரு சில...

அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர், அறிந்து கொள்க: ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்! (58:19).

மேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களை வழிகெடுப்பதற்காக பொய்த் தெய்வங்களை அவனுக்கு இணையாக்குகின்றனர். நபியே! அவர்களை நோக்கி, ''இவ்வுலகில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக நீங்கள் இறுதியாகச் சேருமிடம் நரகம்தான்'' என்று நீர் கூறிவிடும்.
(14:30)
எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம். ஆகவே என்னுடைய நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!. (39:17)

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான். மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.
(4:120)

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
(5:91)

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை ஏமாற்றிச் சோதனைக்குள்ளாக்க வேண்டாம் நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
(7:27)

ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான் இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
(7:30)

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், செய்ய நிச்சயமாக ஏவுவான். அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் தவ்பா செய்து தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
(24:21)

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான் ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள் அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான்.
(35:6)
  

to be contine <<click>> this.


ஒற்றுமை இணையத்தளமின் இல்லுமினாட்டிகள்"இரகசிய சமுதாயம்!" 1.

 ஒற்றுமை இணையத்தளமின் இல்லுமினாட்டிகள்"இரகசிய சமுதாயம்!" 1.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.         Download Video (English) : [1]   
ஷைத்தானின் கோரப் பிடியில் சிக்கித்தவிக்கும்.
I L L U M I N A T I     C O N S P I R A C Y    S E C R E T S
முன்னுரை (தொடர்-1)
(நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் எவரிடத்தும் தேவையற்றவன். அவன் எவரையும் பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112: 1-4).

இரகசிய சமுதாயம்! இத்தலைப்பு சிலருக்கு அறிமுகமானதாகவும் பலருக்கு ஆச்சரியமாகவும், நம்ப முடியாத புதுமையாகவும் இருக்கலாம். இருப்பினும் இத்தொடர் கட்டுரைகளின் கருப்பொருளை சுருக்கமாக விளக்குவதென்றால்,

நபி மூஸா அலை அவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட இறைமார்க்கத்தை நிராகரித்த பிர்அவ்ன், தன்னைத்தானே கடவுள் என்று பிரகடனப் படுத்தினான். ஷைத்தானுக்கு பட்டுக்கம்பளம் விரித்து, தீயசக்திகளின் தலைவனான ஒற்றைக் கண் தஜ்ஜாலை வரவேற்று தான் அமைத்த பிரமிடுகளுக்குள் பல சின்னங்களையும் அமைத்தான். இறுதியில் இறைவழியை பின்பற்றிய நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களை பின்பற்றிய நல்லவர்களையும் அழித்திட முயலவே இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிந்தான். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அவ்வாறு அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் சந்ததியினரில் ஒருசிலர் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அன்று முதல் இன்று வரை Frankish Merovingian bloodline என்ற அவர்களின் இரத்தவழி பந்தங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது (Priory of Sion) என்று சிலர் நம்புகின்றனர். அது மட்டுமல்லாமல் உலகமக்களின் பாவங்களுக்காக சிலுவையில் உயிர்நீத்ததாக கிருஸ்தவர்கள் நம்பும் ஏசுவிற்கும் மேரிமெக்டலின் என்ற பெண்மணிக்கும் திருமணம் நடந்ததாகவும், சிலுவையில் ஏசு மரணிக்கும் போது மேரிமெக்டலின் கருவுற்றிருந்தாள் என்றும், அவளின் குழந்தைவழியாக ஏசுவின் இரத்தபந்தமும் இன்றுவரை பாதுகாக்கப்படுகிறது என்றும் நம்புகின்றனர். (இந்த அடிமுட்டாள்தனத்தை முஸ்லிம்களாகிய நாம் வன்மையாக மறுக்கிறோம் என்பது தனிவிஷயம்).

இவ்விரு இரத்த பந்தங்களின் கலப்பில் பிறக்கும் ஒரு அரசன் இவ்வுலகைக் கட்டி ஆள்வான், அவனுடைய ஆட்சி (ஃபிர்அவ்ன் எந்த சக்தியை முன்னிலைப்பத்தினானோ அந்த தீய சக்தியான) அந்தி கிருஸ்து என்னும் தஜ்ஜாலுக்கு வழிகோலுவதாக அமையும் என்று ஒரு கூட்டம் திடமாக நம்புகிறது.

அவர்கள்தாம் இன்றைய நூற்றாண்டில் உலகை ஆளும் ஐரோப்பிய வல்லரசுகள். உலகப்பொருளாதாரம், ஊடகம், இராணுவம் நீதித்துறை, அறிவியல் ஆய்வு என்று இவ்வுலகையே தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடத் துடிக்கின்றனர். இவர்கள் யூத கிருஸ்தவர்களாக இருப்பினும், யூத கிருஸ்தவ மதங்களுக்கு மாறுசெய்து லூசிஃபர் என்ற அசத்திய ஆவியை அந்தரங்க கடவுளாக வணங்குகின்றனர். அந்த லூசிஃபரின் ஆட்சியை இவ்வுலகில் அமைப்பதே இவர்களின் முக்கியக் குறிக்கோள்.


இவர்களின் நிலை ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப்போன்றதேயாகும்;. இவர்களைப் போலவே அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர். அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.
(8:52)

என்ன ஆச்சரியமாக உள்ளதா? இத்தொடரை முழுவதுமாக படிப்பது மட்டுமல்லாது இத்தொடர் கட்டுரைகள் மூலம் நாம் வெளியிட இருக்கும் வீடியோ பதிவுகளையும் தவறாது பாருங்கள்.

(Note : The cult and preachings of so called Hashshashin movement as given by the below video clip is NOT related to any of the true Islamic principles. Readers are advised to evaluate further.)


அன்பின் சகோதர சகோதரிகளே இத்தொடர் கட்டுரைகளை நாம் வெளியிடுவதின் நோக்கம்,
1.நவீன ஷைத்தானிய தாவூத்திய சத்திகளை முஸ்லிம் சமுதாயத்திற்கு அடையாளம் காட்டுவதும்,
2.முஸ்லிம்கள் தங்களை சுற்றி பின்னப்பட்டுள்ள ஜாஹிலிய்யா என்னும் மடமையை அறிந்து அதிலிருந்து அவர்களை விடபட வைப்பதும்,
3. 21ம் நூற்றாண்டின் அசுர வளர்ச்சியாகக் காட்டப்படும் இஸ்லாத்திற்கெதிரான சதிவளைகளைப் பற்றி விழிப்படையச் செய்வதுமாகும்.


இன்டெர்நெட் என்னும் இவ்வுலகலாவிய வளைதளத்தில் வெளியாகும் தகவல்களெல்லாம் உண்மை என்று நம்பும் மக்கள் நம்மிடையே அதிகமதிகம் உள்ளனர். அத்தகைய நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறோம். அதாவது இணையதளங்களில் வெளியாகும் செய்திகளில் நீங்கள் சந்தேகமாக எதை எண்ணுகிறீர்களோ அதை முடிந்த வரை விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் படிக்கும் தகவல்கள் குர்ஆன் சுன்னாவிற்கு முரணாக இருப்பின் அதை நீங்கள் அலட்சியம் செய்வது மட்டுமல்லாது கட்டாயமாக எவரிடத்திலும் அவைகளை அறிமுகப்படுத்தாதீர்கள். உங்களைவிட அதிகம் கற்றறிந்தவர்களிடம் நீங்கள் பெற்ற தகவலின் உண்மை நிலையை பற்றி அவசியம் விளக்கம் கேளுங்கள்.

ஏனெனில் நாம்
Illuminati conspiracy secrets  என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடவேண்டும் என்று எண்ணிய நேரத்தில், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், வீடியோ பதிவுகளையும் நாம் பார்வையிட நேர்ந்தது – அல்ஹம்துலில்லாஹ். அத்தகைய ஆக்கங்கள் மற்றும் வீடியோ பதிவுகளில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாவற்றை முஸ்லிம் அல்லாத நண்பர்களே வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட அத்தகைய வீடியோக்களில் கூட இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. மேலும் அத்தகைய வீடியோ தொகுப்புகளில்

ஏசுவை பின்பற்றுங்கள், அவர் விரைவில் திரும்பி வருகிறார், ஷைத்தானிய சக்தியை பின்பற்றாதீர்கள் என்று கூறிக்கொண்டே ஏசுபிரானின் உண்மையான இறைக் கோட்பாடு திரித்துக் கூறப்பட்டிருந்தது.

மனதை மயக்கும் பாப் இசைகளுடன் பதிவு செய்யப்பட்டிருந்த பல வீடியோ பதிவுகளில் பெண்களின் நிர்வாண ஓவியங்கள், அரைகுறை ஆடை காட்சிகள் புகுத்தப்பட்டிருந்தன.

ஷைத்தானுக்கு பூஜை செய்தல், செய்வினை, ஜோஸியம் போன்ற இஸ்லாம் தடைசெய்திருக்கும் காரியங்கள் கொஞ்சம் தூக்கலாக காட்டப்பட்டிருந்தது, மேலும் ஷைத்தானை புகழ்ந்து பல சித்திரங்கள்கூட வரையபட்டுள்ளன. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்நிலையில் இரகசிய சமுதாயம் என்றும் நம்முடைய தொடர் கட்டுரைகளின் தலைப்பிற்கு தொடர்புடைய பதிவுகளை மட்டும் இங்கு வெளியிட்டுள்ளோம். மேற்கூறிய விஷயங்களில் நம்முடைய சக்திக்கு உட்பட்டு நாம் கவனமாகவே இருந்திருக்கிறோம். பதிப்புரிமை பெற்ற சில வீடியோக்களை நாம் எந்தவிட மாறுதலும் செய்யாமல் அப்படியே வெளியிட்டுள்ளோம். மனிதர்கள் என்ற அடிப்படியில் எங்களிடம் கவனக்குறைவுகள் மற்றும் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். நாம் வெளியிடுபவற்றில் சரியானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் தவறை சுட்டிக்காட்டுங்கள் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறோம் என்று கூறி இத்தலைப்பிற்குள் நுழைவோம்...


to continue <<click>> this

யார் இந்த லூசிஃபர்? தொடர்-2


thanks to
ஒற்றுமை இணையத்தளம்