Monday, January 14, 2019

ஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.

ஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.

  எகிப்திய மன்னன் துட்டன்காமன் கல்லறையில் மம்மியுடன் கண்டுப்பிடிக்கப்பட்ட கத்தி விண்கல்லில் செய்யப்பட்டது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்ச மன்னன் துட்டன்காமன். 9-வது வயதில் பட்டத்திற்கு வந்த இவன் கி.மு. 1333 முதல் கி.மு. 1324 வரை புதிய இராஜ்ஜியம் என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். பதவியேற்று சுமார் 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான்.

இந்நிலையில், 1922-ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர், பொக்கிஷங்கள் அடங்கிய துட்டன்காமன் மம்மியுடன் கூடிய கல்லறையை கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து துட்டன்காமன் கல்லறையில் உள்ள பொக்கிஷங்கள் ஆராயப்பட்டு வருகிறது.


அந்த வகையில் துட்டன்காமன் உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் சிறந்த வேலைப்பாடுகளை கொண்ட சிறிய கத்தி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கத்தியை தொல்லியல் ஆய்வாளர்களும், அறிவியல் ஆய்வாளர்களும் ஆய்வு செய்தனர். சமீபத்தில் இந்த கத்தியை ஆய்வாளர்கள் எக்ஸ்-ரே பரிசோதனை செய்து பார்த்தபோது, நம்ப முடியாத முடிவுகள் கிடைத்துள்ளன.

அந்த கத்தியானது விண்கல் ஒன்றின் இரும்பில் இருந்து செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது நிக்கல் மற்றும் கோபால்ட் ஆகிய தனிமங்களை கொண்டிருந்ததும் தெரியவந்தது.


கத்தியின் வேதியியல் கூறுகள், 2000-ஆண்டில் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விண்கல்லோடு ஒத்துப்போவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், விண்கல்லின் ஒன்றில் இருந்து அழகிய வேலைப்பாடுகளை கொண்டு கத்தி செய்யப்பட்டுள்ளது ஆய்வாளர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி
தகவல்
மாலைமலர்

No comments:

Post a Comment

welcome ur comment,