1992-ல் நெல்லை, தூத்துக்குடி, குமரியை நிலைகுலைத்த பெருவெள்ளம்
1992ல் நடந்த சம்பவம் இன்றும் ஞாபகம் இருக்கிறது,
அன்று எனக்கு ஐந்து வயது தான் ஆனால் மறக்க முடியாத நிகழ்வு,
நெல்லை மாவட்டம் முழுவதும் அடை மழை,
என்னையும் என் அக்காவையும் வீட்டை வீட்டு வெளியே விளையாட அனுமதிக்காமல் வீட்டு சிறையில் அடைபட்டு இருந்த நேரம்,
தாமிரபரணி நதி வெள்ளத்தை பற்றி என் தந்தை தாயிடம் விவரிக்கும் போது நெல்லை பஸ் ஸ்டண்ட் வரை வந்து தாமிரபரணி தண்ணிர் வந்த்து என்று கூறும் போது, எனக்கு பீதியை ஏற்படுத்தியது,
ஞாயிறு விடுமுறையில் எங்கள் தந்தை அறிவியல் மையம் அழைத்து செல்லும் போது, பேருந்து நிலையத்தில் இருந்து அறிவியல் மையத்திற்கு நடந்து தான் சொல்லுவோம், அதன் தொலைவு தான் எங்கள் பிரமிக்கவைத்து,
தாமிரபரணி வெள்ளம் வடிந்த பின் தான் அதன் கொர தனம் தெரிந்த,
எனது வகுப்பு தோழியும், என் ஆண்டை வீட்டாருமான ஸ்ரீ கூறிய விடயம் தான் நெஞ்சை நடுங்க வைத்தது,
1992 நவம்பர்13 இரவு தொடங்க இருந்த நேரத்தில் என் தோழியின் உறவினர்கள் விக்கிரமசிங்கபுரம் வசித்து இருந்தனர், அன்று இரவு வெள்ள அபாயம் பற்றி எச்சரிக்கையை அரசு தண்டோர செய்ய,
நதிக்கும் வீட்டுக்கு பல கல் தொலைவு இங்கு எப்படி வெள்ளம் வரும் என்கிற நம்பிக்கையில் பாதுகாப்பான இடம் செல்லுவதை தவிர்த்தனர்,
ஆனால் அவர்கள் எதிர்பாக்கவில்லை வெள்ள நீர் அன்று நள்ளிரவிலே அவர்கள் வீடு வரை தாமிரபரணி தன் எல்லையை விரிவுபடுத்தும் என்று,
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வீட்டில் பொருள்கள் வைக்கும் பரண் மீது அவரது பிள்ளைகளையும், அவர் மனைவியுடன் ஏறி அமர்ந்து கொண்டு வீட்டின் கதவுகளை ஐன்னல்களையும் அடைத்து கொண்டு தங்க, கொஞ்சம் கொஞ்சமாக நீர் மட்டம் உயர, கதவுகளிலும், ஐன்னல்கள் இடையே கிடைத்த விரிசல் வழியாக நீர் வீட்டிற்குள் நுழைய கொஞ்சம் கொஞ்சமாக நீர் உயர அரம்பித்து பரண் மேல் அமர்ந்து இருந்தவர்கள் மூழகடிக்க அரம்பித்தது,
அதிகாலையில் தாமிரபரணி அவர் வீட்டையும் மூழ்கடித்து அதன் மேல் பயணிக்க தொடங்கியது,
இரண்டு நாள்களுக்கு பிறகே வீட்டில் பரண் மீது இருந்த அனைவரிடன் உயிர்அற்ற சுடலமே மீட்கப்பட்டது ஸ்ரீயின் தந்தை தான் அவ்வுடல்களை நல்லடக்கம் செய்ய விக்கிரமசிங்கபுரம் சென்றார்,
இதை பற்றி ஒவ்வொரு தடவையும் என்னையே அறியாமல் பீதயை ஏற்படுத்தியது அந்த வெள்ள நினைவுகள்
உங்கள் சகோதரன்
ரஹ்மான்ஃபாயட்./...

நவம்பர் 13, 1992ஆம் ஆண்டு நள்ளிரவு - விடியவே விடியாத என்று எண்ணும் வகையில் ஏக்கத்தை உண்டு பண்ணிய திகில் இரவு. மழை என்றால் அது தான் மழை - விடாத அடை மழை.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றை புரட்டிப்போட்ட 1992-ஆம் ஆண்டு பெருவெள்ளம்
தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் அணைகள் உள்ள மாவட்டம் திருநெல்வேலி. இங்குள்ள 11 அணைகளில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போதெல்லாம் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் தாமிரபரணி கரையோர குடியிருப்புகளையும், வயல்களையும், தாழ்வான இடங்களையும் வெள்ளநீர் சூழ்வது வழக்கமாக நடந்துகொண்டிருக்கிறது.
ஆனால், 1992-ம் ஆண்டில் இந்த மாவட்டங்கள், அதற்கு முன் இல்லாத வகையில் கடும் வெள்ளப் பாதிப்புகளை சந்தித்தது. 1992-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புயல்வெள்ளம் ஏற்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி பாபநாசம் அணைப் பகுதியில் 310 மி.மீ. மழையும், சேர்வலாறு அணைப் பகுதியில் 210 மி.மீ., பாபநாசம் கீழ்அணைப் பகுதியில் 190 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 260 மி.மீ. என்று வரலாறு காணாத வகையில் மழை கொட்டியிருந்தது.
இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு கட்டுக்கடங்காத காட்டுவெள்ளம் வந்தது. திருநெல்வேலியில் சூறாவளியின் காரணமாக எட்டு மணி நேரம் தொடர் மழை பெய்தது
2 லட்சம் கன அடி நீர்
அணைகள் நிரம்பியதன் காரணமாக அதிகாரிகள் நவம்பர் 13 அன்று இரவு பாபநாசம் மற்றும் சேர்வலார் அணை மதகுகளைத் திறந்தனர். இரண்டு பெரிய அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் முண்டந்துறை ஆற்றுப் பாலத்தை சில நிமிடங்களில் அடைந்தது. பாபநாசம் அணையில் நீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து 60 நிமிடத்திற்குள் மணிமுத்தாறு அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அந்த நாளில் மூன்று அணைகளில் இருந்து விநாடிக்கு 2,04,273.8 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
3 அணைகளில் இருந்து திறக்கப்பட்ட வெள்ளத்துடன், திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையும் சேர்ந்துகொண்டதில் தாமிரபரணி ஆற்றில் 2.04 லட்சம் கனஅடி தண்ணீர் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது. இதில், கரையோரக் குடியிருப்புகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கின.
பாபநாசத்தில் பரிதாபம்
பாபநாசத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருந்தது. பாபநாசம் கோவிலில் உள்ள அர்த்த சாம மண்டபம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் பாபநாசம் கோவில் முன்பு இருந்த விநாயகர் கோவிலும் தண்ணீரில் மூழ்கியது.
பாபநாசம், திருவள்ளுவர் நகரில் 1992-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி அதிகாலையில் 17 பேரை வெள்ளம் பலிகொண்டது. அங்கு வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
முண்டந்துறை பாலம்
முண்டந்துறையில் பாபநாசத்தில் இருந்து காரையாறு செல்லும் பாதையில் சேர்வலார் ஆற்றின் குறுக்கே செல்லும் பழங்காலத்துப் பாலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பெரிய பாலம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மூன்று வாரங்களாக போக்குவரத்து இல்லை. ராணுவத்தை அழைத்து புதிய இரும்புப் பாலம் போட்ட பின்னரே - அதாவது மூன்று வாரத்திற்கு பின்பே புதிய இரும்புப் பாலம் மூலமாகப் போக்குவரத்து தொடங்கியது.
முண்டந்துறை சேர்வலார் பாலம் - வௌ்ளம் அடித்துச் செல்லப்பட்ட பின் |
புதிதாய் இராணுவத்தால் போடப்பட்ட இரும்புப் பாலம் |
திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையம் - மூழ்கல்
திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கின. கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் தண்ணீர் புகுந்தது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் த.மு.சாலை வரை கடைகள் வெள்ளத்தில் மூழ்கின.
சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரத்தில் அனைத்து குடியிருப்புகளும் வெள்ளத்தில் தத்தளித்தன. எத்தகைய வெள்ளத்திலும் நிலைகுலையாமல் இருந்த குறுக்குத்துறை முருகன் கோயிலின் மேல்தளத்தில் இருந்த ஓடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. திருநெல்வேலி சந்திப்பில் தேங்கிய வெள்ளம் வடிய 4 நாட்களானது.
குற்றாலம் -
குற்றாலம் கோவில் முழுவதும் வௌ்ளத்தில் மூழ்கியது. பேரருவியில் விழுந்த வௌ்ளம் 10 அடி பள்ளத்தை உருவாக்கி விட்டுச் சென்றிருந்ததது. இன்றும் அக்கோவிலில் அந்த வௌ்ளநீர்மட்டம் வந்த அளவு குறிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தின் எல்லா அணைக்கட்டுகளிலும் உச்சபட்ச நீர் வௌியேற்றம் செய்யப்பட்டது அன்று தான்.
குற்றாலம் மட்டுமல்ல மாவட்டத்தின் அனைத்துப் பக்கங்களிலும் நீர், நீர், நீர்....மட்டுமே.
ஆத்தூர் மற்றும் கடைமடைப்பகுதிகள்
ஆத்தூர் பகுதிகளில் ஆற்றின் கரை உடைந்து வௌ்ளம் ஊருக்குள் புகுந்தது. அனைத்து மக்களும் வௌியேற்றப்ட்டனர். மீண்டும் மக்கள் வந்து குடியமர ஒரு வாரம் ஆனது ஏனென்றால் வௌ்ளம் வடிய அவ்வளவு நாள் ஆனது. வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு பல வாரங்கள் ஆகின. சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், திருநெல்வேலி- ஸ்ரீவைகுண்டத்துக்கு போக்குவரத்து சீராக 3 வாரங்கள் ஆனது.
குமரி துண்டிப்பு
அதே நாளில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்துடனான சாலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், ரப்பர் தோட்டங்கள் மூழ்கின. குழித்துறை தாமிரபரணியிலும், பழையாற்றிலும் பல உடல்கள் அடித்து வரப்பட்டன. சுசீந்திரத்தில் தாணுமாலய சுவாமி கோயில் வரை வெள்ளம் புகுந்தது. சுவாமிதோப்பு உப்பளங்கள் மூழ்கின. இதன்பிறகு 2004-ல் சுனாமி பாதிப்பும் பெரும் சோகத்தை உருவாகியது.
நெல்லை வட்டாரத்தின் வரலாற்றில் 1992 ஆம் ஆண்டு வௌ்ளம் என்றுமே அழிக்க முடியாதது. மீண்டும் அப்படி ஒரு வௌ்ளம் வருமா என்றும் தெரியாது!!??
நெல்லை வட்டாரத்தின் வரலாற்றில் 1992 ஆம் ஆண்டு வௌ்ளம் என்றுமே அழிக்க முடியாதது. மீண்டும் அப்படி ஒரு வௌ்ளம் வருமா என்றும் தெரியாது!!??
No comments:
Post a Comment
welcome ur comment,