Wednesday, February 8, 2017

சித்த வைத்தியம்

சித்த வைத்தியம்



நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் மனிதர்களுக்கு தொடக்கமாக உள்ளது நமது இந்திய பண்பாட்டுக்கு உகந்த முறையில் மக்களின் உடலில் கோளாறுகள் உருவாகிறது,அதை சரி செய்ய பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மருத்துவ அறிஞர்கள் சித்தர்கள் மருத்துவ முறைகளை கையாண்டு அனுபூதியான அவர்கள் தனக்கு பின்னால் தாஙகள் கையாண்ட முறைகளை எதிர்கால சந்ததிக்கு கொடுத்தும் ஏடுகளின் மூலமும்,நூல்களின் மூலமும்,குரு பாரம்பரியம்,குடும்ப பாரம்பரியம், மருத்துவ முறைகளை விட்டு சென்றார்கள்.கால வேகம் அரசியல் மாற்றம்,இனபாகுபாடு,இவைகளின் தாக்குதலால், மேற்கண்ட முறை பல வகையாக சிதறின. சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்நிய தேசத்தவர்கள் கையில் நமது தேசம் உட்பட்டது,அவர்களுடைய மருத்துவ முறைகளும் உள்ளே புகுத்தப்பட்டது அந்நிய தேசத்தவர்களின் மருத்துவ முறைகள் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. நமது தேசத்தவர்களின் மருத்துவ முறைகள் மெய்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.விஞ்ஞானம் என்பது விநாடிக்கு,விநாடி மற்றம் அடையக்கூடியது,மெய்ஞானம் ஆதியை உணர்ந்து என்றும் மாறாத நிலைத்த தன்மை உடையது. அவர்களின் நவீன மருத்துவ முறைகளில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் புறக்கணிக்கப்பட்டன. சித்தர்களின் காலத்திற்க்குப்பின் சித்த வைத்தியத்தை தொடர்ந்து கையாண்டவர்களில் சிலர் சுய நல மிக்கவர்களால் தன்வசம் உள்ள மருத்துவ முறைகளை மறைக்க துவங்கினார்கள் இப்படி பல்வேறு அற்புத செய்முறைகள் மறைந்தே போயின.

அனைத்து மாற்று மருத்துவ முறைகளும் சித்த மருத்துவத்தின் அடிப்படியிலிருந்து தான் உருவானது. இன்றைய காலகட்டத்தில் ஆயுர்வேதம் என்று கூறப்படும் மருத்துவமானது ஆயுள் வேதம் என்ற சொல்லின் மருவிய வார்த்தை. இந்த ஆயுள் வேதமானது இராவணன் அவர்களால் இந்த உலகிற்கு மனித குலத்தின் ஆயுளை கூட்டி வாழ்வதருக்கு கொடுக்கப்பட்ட ஒரு கொடை.

இனி மருத்துவத்தை பற்றி பார்ப்போம்.


மருத்துவரின் குணநலன்கள்

சித்த மருத்துவம் செய்பவர்கள் பொறுமை,கருணை,கண்ணியம்,காருண்யம்,தியாகம், சகிப்புத்தன்மை, உழைப்பு,ஊக்கம்,சிறந்த விவேகம்,யூகம், அதீத நுண்ணறிவு இவைகளை கொண்டிருக்கவேண்டும்.
இந்திய  பரம்பரியபடி மருத்துவரின் வயது 40-60 உட்பட்டு இருக்க வேண்டும்


ஒரு மருத்துவரிடம் கூடாதவை

வெற்றிலை போடுவது,பீடி சிகரெட் பிடிப்பது போதை வஸ்துக்கள் பயன்படுத்துவது,புறம் கூறுவது,திருட்டு எண்ணம்,பேராசை,பெறாமை,கொலை பாதகத்திற்க்கு ஈடான செயல்களை செய்வது. ஒரு பொருளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யும் குணம்,குற்ற உணர்வு அற்ற குணம்,இவை எல்லாம் ஒரு மருத்துவருக்கு கூடாதவைகள்.மொத்தத்தில் ஒரு யோகி போல வாழ வேண்டும். ஒரு மருந்தை தொடுவதற்கு முன் கைகளை சுத்தம் செய்து கொண்டு பின்புதான் மருந்தைத் தொடவேண்டும்.ஒரு மருந்தைத்தொட்ட கையால் இன்னொரு மருந்தைத்தொடக்கூடாது! நம்மிடம் வரும் நோயாளிகளுக்கு பத்தியத்தை சத்தியத்தை போல் காக்க சொல்லித் தரவேண்டும்.


வைத்திய முறைகள்
சித்த வைத்திய முறைகளில் கையாளும் மருந்துகள்.


1.பச்சிலை.
2.சம்பை சரக்குகள்.
3.உப்பு சரக்குகள்
4.உபரச சரக்குகள்
5.நவ லோகங்கள்
6.64 பாசானங்கள்
7. வர்ம முறைகள்

8. பல்வேறு உலோகங்கள்

போன்ற முறைகள் மூலம் நோயாளிகளுக்கு உண்டான மருந்தைத் தயாரிக்க வேண்டும்.அவை...
1.பஸ்பம்
2.செந்தூரம்
3.சுண்ணம்
4.ஜெயநீர்
5.களங்குகள்
6.கட்டுக்கள்
7.திராவகங்கள்

இவைகளை மருந்தாகப் பயன் படுத்தவேண்டும்.

நோய் வகைகள்

பரம்பரை நோய்கள் 

கர்ம நோய்கள் 

அசாத்திய நோய்கள் 

சீதோஷ்ண நோய்கள்

எந்த வகையான நோய்களுக்கு என்ன வகையான மருந்துகள் கொடுக்க வேண்டும் என்பதை நாடியை அறிந்து பிறகே தீர்மானிக்கவேண்டும். நாடி அறிதல்:-ஆண்களுக்கு வலது கரமும், பெண்களுக்கு இடது கரமும் கையில் மணிக்கட்டுக்கு கீழ் ஓரங்குலம் தள்ளி கட்டை விரலை நோக்கி செல்லும் விரலில் நமது ஆள்காட்டி விரல் நடு விரல் மோதிர விரல் இம்மூன்று விரல்களால் நிதானமாக பார்க்க வாதம் முதல் விரலில்,பித்தம் இரண்டாவது விரலிலும்,கபம் மூன்றாவது விரலிலும் துடிப்பதை அறிய முடியும்.வியாதி அற்றவர்களுக்கு வாதம்-1, பித்தம் 1/2,சிலோத்துமம் 1/4, துடிப்பு தென்படும்.

சித்தர்களால் 4448 நோய்களை பற்றியும் அதனின் உட்பிரிவினை பற்றியும், அதற்கான மருத்துவ முறைகளை பற்றியும் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே மனித குலத்திற்கு அளிக்கப்பட்டது. ஜீவ அணுக்களை சித்த வைத்திய முறையில் மட்டுமே உருவாக்க முடியும்

No comments:

Post a Comment

welcome ur comment,