பாலஸ்தின மக்களுக்காக கவலைபடுபவரா நீங்கள்?
RAHMANFAYED : உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தார்கள் மீதும், இறைவனின் சாந்தியும் சமாதனமும் நிலவுவதாக...
என் உடன்பிறவாக சகோதர சகோதரிகளே, உங்களிடம் நான் சில கேள்விகள் கேட்க நினைக்கிறேன், உங்களுக்கு மட்டும் அல்ல, அதே கேள்வி என்னை நோக்கியும் கேட்டு கொள்கிறேன்..
கடந்த ஒரு மாதமா காலமாக உலகில் பல இடங்களில் இஸ்லாமியர்களுக்கு துன்பம் இழைக்கபடுகிறது, இலங்கையில் சிங்களர்களால்,
ஈரானின் ஒர் இறை கொள்கையை ஏற்ற ஷியா, சன்னி முஸ்லிம்கள் தங்களுக்குள் அடித்து கொள்கின்றனர்.
பாலஸ்தீனில் இதை விட கொடுமையாக, நபிமார்கள் அதிகம் இறங்கப்பட்ட இனமான யுதர்களால் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்படும் கொடுமை ஏன, எல்லா இடங்களிலும் இஸ்லாமியர்கள் அடிவாங்குகிறார்களே, அது ஏன் என்று சிந்திதர்களா நீங்கள்??
பாலஸ்தின மக்களுக்கு அதிரவாக யுத பொருள்களான கோக், பெப்சி என எல்லா பொருள்களை தவிர்பதால், பெரிய அளவில் மாற்றம் ஏற்பட போவது இல்லை,
ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் போது அவர்களுக்காக துவா செய்கின்ற அந்த ஒன்று மட்டுமே, அவர்களுக்கு நாம் செய்கின்ற நேரடி உதவியாக இருக்கும்.
சரி பாலஸ்தின மக்களுக்கு இந்த நிலை ஏற்பட முக்கிய காரணம் நாம் தான், முஸ்லிம்களாகிய நாம் மட்டுமே காரணம்,
இலங்கையிலும் அதே நிலை தான், காரணம் பல ஜமாத்தாக பிரிந்து இருக்கின்ற காரணத்தால் தான்.
ஈராக்கில் இஸ்லாமிய சமுதாயத்துக்குள்ளே ஷியா சன்னி என இரு சமுதாயத்துக்குள்ளே நடக்கின்ற சண்டையில் மரணிப்பது கலிமாவை சொல்லிய இஸ்லாமியர்கள் தான்.
அரபு தேசத்தின் மத்தியில் இருந்து கொண்டு ஒரு பாலஸ்தின் நாட்டை அபகரித்து கொண்டு ஆட்டம் ஆடும் இஸ்ரேல் என பயங்கரவாத நாட்டை அடக்க கூட முடியாமல் இருக்க காரணம். இஸ்லாத்தை பின்பற்றும் அரபு நாடுகளில் இடையே ஒற்றுமை இல்லாத காரணம் தான், என்பதை தவிர வேறு பெரிய காரணத்தை சொல்ல முடியுமா நம்மால்??
ஒரு காலத்தில் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் என்றால், ஒற்றுமையான சமுதாயம், கண்ணியமிக்க ஒழுக்கமானவர்களாக மற்றவர்கள் மதிக்கும் வகையில் இருந்த இஸ்லாமிய சமுதயம்,
இன்று மாற்று மதத்தவர்கள் மிதிக்கும் வகையில் ஒற்றுமையும் கண்ணியத்தை இழந்து நிற்கிறது நமது இஸ்லாமிய சமுதாயம் என்று சொல்லும் வகையில் மாறிவிட்டது.
இஸ்லாத்திற்கு எதாவது பிரச்சனை என்றால் ஒற்றுமையுடன் போராடுவது பாராட்டக்கூடியது, ஆனால் அதில் விளம்பரம் தேடும் சில ஜமாத்துகளை நினைத்தாலே வெக்கமாக இருக்கிறது, போராட்டத்திற்கு முதல் ஆளாக வரும் இஸ்லாமிய இளைஞர்களே, ஏன் அது போல ஜவேளை தொழுகைக்காக பள்ளிவாசல் பக்கம் வர ஏன் தயக்கம்.??
ஒரு தாய் வயற்றில் பிறந்த அண்ணன், தம்பிகள் வெவ்வேறு ஜமாத்தை சேர்ந்தவராக இருந்தால், இருவரும் எதிரிகள் போல பிரிந்து, வீட்டு விசேசங்களில் இருந்து எல்லாவற்றீலும் ஒதுங்கி கொள்ளும் அவலத்தை தமிழகத்தில் உள்ள பல இஸ்ஸலாமிய வீட்டில் பார்க்கும் நிலை தற்போது. இப்படிபட்டவர் தன் உடன்பிறந்தவனையே வெறுக்கும், ஏங்கோ பிறந்த வேறு இனத்தை சேர்ந்த பாலஸ்தின மக்களுக்காக வடிக்கும் கண்ணீர் முதலை கண்ணீர் தான், இதை எல்லாரையும் பார்த்து சொல்லவில்லை..
பள்ளிவாசலில் தொழுகை வருபவர்களை தொழுகைக்கு அனுமதிக்காத அவலம் நம் இஸ்லாமியர்களிடம் ஏற்படுவது மிகப்பெரிய கொடுமை, மாற்று மதத்தவர்களையே உள்ளே வர தடுக்ககூடாது என்ற போது, வேறு ஜமாததை சேர்ந்தவன் என்ற காரணத்தால் அனுமதிக்காத இஸ்லாமியர்கள், தன் இனம் அல்லாத அரபு இனத்தவருக்கு வருந்துவது நகைச்சுவையாகவே உள்ளது.
பாலஸ்தின மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், உங்கள் அண்டை வீட்டில் வசிக்கும் ஏழை முஸ்லிம்களுக்கு உதவுங்கள், புனிதமிக்க ரமலான் மாதமான இந்த மாதத்தில் அதிகமாக தான தர்மங்களை உங்கள் ஏழை சொந்தங்களுக்கு உதவுங்கள், அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்ற வியாபாரம் செய்ய உதவுங்கள், அல்லது அந்த வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவுங்கள்,
முடிந்தவரை சொந்த பந்தங்களுடன் இனைந்து வாழுங்கள் சகோதரர்களே, வெவ்வேறு ஜமாத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் அவர்கள் புரிதலை மறந்து இனக்கம் காட்டுங்கள், அவர்களின் தவறுகள், அவர்கள் சினம் கொள்ளா வகையில் அன்பாக சொல்லி திருந்துக்கள்,
ஒர் இறை கொள்கையான தவ்ஹிதையும், இறை தூதர் முஹ்ம்மது நபி அவர்களின் சுன்னத்தையும் பின்பற்றுபவராக நாம் அனைவரையும் இறைவன் ஆக்கிவைப்பானாக.
இன்ஷா அல்லா, நமது ஒற்றுமையின் முலம் இறைவன் பாலஸ்தின மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலகில் வாழும் மக்கள் அனைவருக்கு நிம்மதியூடன் வாழ அல்லா அருள்புரிவானாக.
ஆமின்...
No comments:
Post a Comment
welcome ur comment,