"முஸ்லிம்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய நவீன கண்டுபிடிப்புக்கள்-2"
இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களே இன்றைய காசோலை (Cheque) முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள். பல நாடுகளுக்கும் சென்று வர்த்தகம் செய்யும் இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து தமது பணத்தை பாதுகாப்பதற்காகவே இதனை அறிமுகம் செய்தனர். அரபியின் saqq என்ற வார்த்தையே cheque என்று மருவியது. அன்று சீனாவில் பணத்தை வைப்பு செய்துவிட்டு பக்தாத்தில் மீளப்பெறும் முறை முறை இருந்திருக்கிறது.
கலிலியோ கலிலி உலகம் உருண்டை என்றும் சூரியனை உலகம் ஓர் நேர்கோட்டில் சுற்றிவருவதாகவும் கூறுவதற்கு 500 வருடங்களுக்கு முன்பாகவே மாபெரும் வானவியலாளர் இப்னு ஹசம் இதனை கூறிவிட்டார். 9 ஆம் நூற்றாண்டிலேயே உலகின் சுற்றளவு 40,253.4 km என்று எழுதியும் வைத்திருந்தார். (40,075.16 Km என்று தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்)
அல்- இத்ரீஸ் என்பவரே உலக வரைபடத்தை முதலில் வரைந்தவர்
அல்- இத்ரீஸ் |
குறிப்பு:
-----------
இதற்கும் மேலதிகமாக பல நூறு கண்டுபிடிப்புக்கள் நிச்சியமாக இருக்கின்றன.
இஸ்லாமிய ஸ்பெயினின் (அந்தலூசியா) வீழ்ச்சியும், பாக்தாத் மீதான மங்கோலிய படையெடுப்பும் முஸ்லிம்களின் அறிவியலின் ஒட்டுமொத்த அழிவுக்கு காரணமாகியது. அந்தலூசியா வீழ்ச்சியடைந்து முஸ்லிம்கள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டாலும் அங்கிருந்த அறிஞர்கள் வெறியேற அனுமதிக்கப்படவில்லை.
அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு அங்கிருந்த அனைத்து (100%) நூல்களும் மொழிமாற்றம் செய்து தருமாறு வற்புறுத்தப்பட்டனர். அனைத்து நூல்களையும் மொழி மாற்றுவதற்கு மட்டும் 4 வருடங்கள் சென்றது. அதன் பின்னர் original நூல்கள் அனைத்தும் முற்றாக எரித்து சாம்பலாக்கப்பட்டன.
அதைப்போல அப்பாசியர்களின் காலம் முதல் அறிவியலின் சிகரமாக விளங்கிய பாக்தாத் மங்கோலியர்களால் முற்றுகையிடப்பட்ட வேளை, பாக்தாத் நூலகத்தில் இருந்த இலட்சக்கணக்கான புத்தகங்களை (எத்தனை இலட்சம் புத்தகங்கள் என்பது இன்றுவரை தெரியாமல் இருக்கிறது) டைக்ரீஸ் நதியில் வீசி எறிந்தனர். புத்தகங்களின் மையினால் அந்த நதி கருப்பு நிறமாக மாறியதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள்.
இந்த இரண்டு சம்பவங்களும் நடைபெற்றிருக்காவிட்டால் நாம் காணும் இன்றைய உலகு வேறுவிதமாக இருந்திருக்கக்கூடுமோ?
No comments:
Post a Comment
welcome ur comment,