மொபைலுக்கு ரீ சார்ஜ் செய்ய* போகிறீர்களா?-mobile.jpg


மொபைலுக்கு ரீ சார்ஜ் செய்ய* போகிறீர்களா?

(உங்களுக்கான ஓர் எச்ச*ரிக்கை பதிவு)

மொபைல் ஃபோன்கள் வாழ்வின் இன்றியமையாததாக ஆகி விட் டன.

போஸ்ட்-பெய்டு கனெக்*ஷன் என்றால் சம்பந்தமேயில்லாமல் பில்
தொகையை எகிறடித்து மிரட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு
என்பதால் பலர் ப்ரீபெய் டு கனெக்*ஷன் தான் உபயோகப் படுத்துகிறார்கள்.


சமீப வருடங்களில் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் அள்ளும் கடை களாக இந்த மொபைல் டாப்-அப் கடைகள் தான் இருக்கின்றன.


பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே தான் டாப்-அப் செய்கிறார்கள் மக்கள்.

நீங்கள் தொடர்ந்து இப்படி ப்ரீ-பெய்டு டாப்-அப் செய்ய கடைகளுக் குச் செல்கிறீர்களா? உங்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட் இது:

கடைக ளில் டாப்-அப் செய்யக் கேட்கும்போ து ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்கள் கைபேசி எண்ணை குறித்து வைப் பார்கள்.

சில இடங்களில் கைபேசி எண்ணையும், தொகையையும் குறி த்து வைப்பார்கள்.

அடுத்த முறை அப்படி அவர்கள் குறிக்க முயலும்போது நீங்கள் ஒரு
சிறு துண்டுத்தாளில் நம்பரை குறித்துக் கொடுங்கள்.

அல்லது கடைக்காரர் மொபைல் மூலமாக ரீ-சார்ஜ் செய்யும்போது
அவரின் மொபை லை வாங்கி அதில் உங்கள் எண்ணை உள்ளிடுங்கள்.

உங்கள் எண்ணை எழுதி வைக்கும் நோட்டுப் புத்தகங்கள் அந்தந்த ஊரில்
மொ பைல் ஃபோனுக்கு விளம்பரங்கள் எஸ் .எம்.எஸ். அனுப் பி
வைக்கும் நபர்களுக்காகவே எழுதப்படுபவை.

ஆயிரம் மொபைல் எண்களுக்கு நூறு ரூபாய் என்கிற ரீதியில் இவை வாங்கப்பெ றுகின்றனவாம்.

இதில் தொகையும் சேர்த்து எழுதப்பட்டால், நீங்கள் அதிகமான
தொகைக்கு டாப்-அப் செய்திருந்தால் நீங்கள் ‘துட்டு பார்ட்டி’
என்று ரிக்கார்ட் ஆகும் விள ம்பர ஆட்களிடம்.


உங்களுடைய மொபைல் எண்ணை எதற்காக கண்ட விளம்பர
ஆட்களிடம் கொடுக் க வேண்டும்?

சமீப காலமாக ஒரு சில இடங் களில் டாப்-அப் செய்ய வருபவர்களைப் பற்றியும் சங்கேத குறியீடு களை மொபைல் எண்ணுக் குப் பக்கத்திலேயே குறித்து வைக்கும்படி சில விளம்பர நிறுவ னங்கள் சொல்லி வருவதாகவும் தகவல்.


டாப்-அப் செய்ய வந்தது ஆணா, பெண்ணா? பள்ளி, கல்லூரி மாணவர்களா, மாணவிகளா? முதியவரா ?

எழுதப் படிக்கத் தெரிந்தவர் போ ன்ற தோற்றம் உடையவரா? என்பத ற்கெல்லாம் சங்கேதக் குறியீடுகள் கொடுத்து டாப்-அப் செய்யும் நம்பருக்கு அருகிலேயே அந்தக் குறியீடுக ளையும் சேர்த்து வைக்குமாறு
சொல்கிறார்களாம்.

தொலை தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் – ட்ராய் –
“Do Not Disturb” ரிஜிஸ்ட்ரியில் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கு அனுமதியின்றி அழைப்பு,

விளம்பர எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புகிறவர்கள்மீது கடும் நடவடிக்கை
எடுக்கப் படும் என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்தாலும், நடைமுறையில் இந்த மாதிரியான நடவடிக்கைகள் குறைவு தான்!


இதைத் தவிர டாப்-அப் செய்ய வருபவர்கள் முதியவர்களாக,
எழுதப் படிக்கத் தெரியாதவர்க ளாக, கிராமத்தில் இருந்து
வருபவர்களைப்போல இருந்தால்

அவர்களுக்கு டாப்-அப் செய்யாமலேயே, அப்படி செய்ததைப்போல தாங்களாகவே ஒரு எஸ்.எம். எஸ்.ஸை பேருக்கு அனுப்பிவிட் டு
அத்தொகையை ஆட்டையப் போடும் அநியாயமும் நடந்து
வருவதாகக் கேள்வி.


எனவே, மொபைல் டாப்-அப் செய்யும் போது எச்சரிக்கையாக இருங் கள்!

இயன்றவரையில் ஆன் லைனில் அந்தந்த மொபைல் ப்ரொவைடர்களின் இணைய தளத்திலிருந்து டாப்-அப் செய்து கொள்ளுங்கள்!