கறுப்புப் பெட்டி :(Black Box)
உண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி.
"கறுப்புப் பெட்டி" என்பது விமானத்தில்
பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக்
கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும்
இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்த கறுப்புப் பெட்டி பதிவு செய்து
கொண்டே இருக்கும்.
aeroplane crash picture..rko.. |
விமானம் எவ்வளவு பெரிய
விபத்தை சந்தித்தாலும், முழுவதும் தீப்பிடித்து எரிந்தாலும், அல்லது கடலில்
விழுந்து மூழ்கினாலும், இந்த கறுப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல்
தப்பிவிடும். அந்த அளவுக்கு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது.
பிறகு அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான
காரணத்தை அறியலாம்.
இந்த
கறுப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது
மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும், அப்போது தான் எவ்வளவு பெரிய விபத்து
ஏற்பட்டாலும் சேதமடையாமல் இருக்கும். ஒரு விமானத்தில் மொத்தம் 2 கறுப்புப்
பெட்டிகள் இருக்கும். பெரிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் "பிளைட் டேட்டா
ரெகார்டர்". இது விமானம் பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விபரங்களை
பதிவு செய்யும். சிறிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் "வாய்ஸ் ரெகார்டர்". இது
விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும்.
வரலாறு :
கறுப்புப்
பெட்டியை 1953 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர்
கண்டுப்பிடித்தார். 1934 ஆம் ஆண்டு இவரின் தந்தை விமான விபத்தினால்
மறைந்தார். ஆனால் விபத்திற்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. இதனால்
விமானங்கள் விபத்திற்குள்ளாகும் போது
அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்று ஆராய்சியில் ஈடுபட்டு கறுப்புப்
பெட்டியை கண்டுபிடித்தார்.
சில ஆச்சர்யமான தகவல்கள் :
- கறுப்புப் பெட்டியின் உண்மையான நிறம் கருப்பு அல்ல "ஆரஞ்சு நிறம்
- ஒரு கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும்.
- கறுப்புப் பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிகா, டைட்டானியம், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகியவை கலந்த கலவையால் அது உருவாகப்படுவது தான்.
- விபத்து நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து "பீப்" சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது.
-
- இது 2000 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும், 2000 கிலோ எடையுடைய பொருள் விழுந்தாலும், 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாது.
கறுப்புப்
பெட்டி'யின் நிறம் ஆரஞ்சு !!!!
விமான விபத்து நடைபெற்றால் முதலில் 'கறுப்புப் பெட்டி'யைத்தான் தேடுவார்கள். 'கறுப்புப் பெட்டி' என்றால் என்ன? அதற்கும் விமானத்துக்கும் என்ன சம்பந்தம்?
ஒவ்வொரு விமானத்திலும் இந்தக் 'கறுப்புப் பெட்டி' கடடாயம் இருக்கும். ஆனால் இந்தப் பெட்டிக்கும், விமானம் பறப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததால் இதற்கு 'கறுப்புப் பெட்டி' (Black Box) என்று பெயர்.
இக்கருவி விமானத்தின் கருப்புப் பெட்டிக்குள் இருக்கும். இரு பகுதிகளைக் கொண்ட கருப்புப் பெட்டிக்குள், ஒன்று விமானியறை குரல் பதிவி மற்றொரு பகுதி விமான தரவு பதிவி ஆகும். கருப்புப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இது பொறுத்தப்பட்டிருக்கும். விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும், இந்த சமிக்ஞைகளை வைத்து இதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியம். இதில் பதிவாகியுள்ள தரவுகளை வைத்து விமான விபத்திற்கான காரணங்களை அறிந்து கொள்ளமுடியும்.

...
இந்தப் பெட்டியை விமானிகள் இருக்கும் 'காக் பிட்' பகுதியில் பொருத்தியிருப்பார்கள். இதில் இருக்கும் ரெக்கார்டரில், விமானிகள் பேசுவது எல்லாம் பதிவாகும். அது தவிர விமானம் பறக்கும் வேகம், எந்தத் திசையில் பறந்துகொண்டிருக்கிறது என்பன போன்ற முக்கியமான விவரங்கள் பதிவாகும்.
Diagram
of data flow to aircraft black boxes.rko..
|
இந்தப் பெட்டியை விமானிகள் இருக்கும் 'காக் பிட்' பகுதியில் பொருத்தியிருப்பார்கள். இதில் இருக்கும் ரெக்கார்டரில், விமானிகள் பேசுவது எல்லாம் பதிவாகும். அது தவிர விமானம் பறக்கும் வேகம், எந்தத் திசையில் பறந்துகொண்டிருக்கிறது என்பன போன்ற முக்கியமான விவரங்கள் பதிவாகும்.
'கறுப்புப் பெட்டி'யில் பதிவாகும் விஷயங்களைக் கொண்டு,
விமான விபத்து எப்படி ஏற்பட்டது என்று கண்டுபிடித்துவிடலாம் என்பதால் இது
மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
விமான தரவு பதிவி(Flight data
recorder(FDR)/Accident Data Recorder(ADR)) என்பது விமானத்தின்
செயல்களையும் மற்றும் விமானம் பறக்கும்பொழுது விமானம் மற்றும் அதை
சுற்றியுருக்கும் சூழலின் குணாதிசயங்களாகிய வேகம், பறக்கும் உயரம்,
வெப்பநிலை, காற்றழுத்தம் போன்ற 400க்கும் மேற்பட்ட குணாதிசயங்களை கணித்து
அதை பதிவு செய்து வைத்துக்கொள்ளும் கருவியாகும்.
crash black box.. |
இக்கருவி விமானத்தின் கருப்புப் பெட்டிக்குள் இருக்கும். இரு பகுதிகளைக் கொண்ட கருப்புப் பெட்டிக்குள், ஒன்று விமானியறை குரல் பதிவி மற்றொரு பகுதி விமான தரவு பதிவி ஆகும். கருப்புப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இது பொறுத்தப்பட்டிருக்கும். விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும், இந்த சமிக்ஞைகளை வைத்து இதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியம். இதில் பதிவாகியுள்ள தரவுகளை வைத்து விமான விபத்திற்கான காரணங்களை அறிந்து கொள்ளமுடியும்.
hints:
this article i take many people post, so once again thanks to that people.. picture taken from google.com..
this article i take many people post, so once again thanks to that people.. picture taken from google.com..
No comments:
Post a Comment
welcome ur comment,