Tuesday, November 4, 2014

2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்!

2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்!

  இந்தக்கட்டுரையை படிப்பதற்கு முன் நம் பண்டைக்கால கடற்கரை நகரம் பூம்புகாரையும் ஈஸ்டர் தீவுபற்றியும், ஜப்பான் மொழியின் மூலம் பற்றியும் அபோகாலிப்டோ படத்தையும், நினைவுகொள்ளவும். 
அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்)

  தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்?

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

  உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

  Olmec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

  இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

 கடலில் மூழ்கிய தமிழர்களின் வாணிகக் கப்பல்:

  நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.




  The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

  ‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

  செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

  செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

மாயன் காலண்டர்
  ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி.12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archaeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

  ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

  கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே. (ஆஸ்திரேலியாவில் தமிழர்களை ஒத்த பழங்குடியினரின் புகைப்படம் கீழே)

  நல்லவேளை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

  உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

நன்றி: மகேந்திரன் ஆறுமுகம் & தமிழால் இணைவோம்

ஆஸ்திரேலியா பழங்குடியினர் :



  ஆஸ்திரேலியாவை சேர்ந்த பழங்குடி மக்களின் புகைப்படம். இதை உங்கள் வீட்டில் காட்டினால் யாருடைய தாத்தா என்றுதான் கேள்வி வரும். இவர்களின் மொழிகூட தமிழை ஒத்துள்ளது. 

நன்றி:  தேடல்

இவற்றையெல்லாம் நம்பாதவர்களுக்கு மேலும் சில ஆதாரங்கள்:

நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துடைய மணி  - காலம்  AD 1200
some related article

எறும்புகள் பற்றிய சில அபூர்வ தகவல்கள்

எறும்புகள் பற்றிய சில அபூர்வ தகவல்கள்

 

*************************************************************

நம்மை விட அளவில் மிகச்சிறியவையான (கிட்டத்தட்ட 10000 மடங்கு சிறியவை) எறும்புகளைப்பற்றி இன்று பார்ப்போம்.

பூமியில் உள்ள மொத்த எறும்புகளின் எண்ணிக்கை பூமியில் உள்ள மொத்த மனிதர்களில் எண்ணிக்கைக்கு சமனானது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன! இதுவொன்றே எறும்புகள்
லேசுப்பட்டவை இல்லை என்பதற்கு சான்று.

எறும்புகள் பற்றிய மேலும் சுவாரஷ்யமான தகவல்களை பார்க்கலாம்…

*** எறும்புகள் டைனோசர்களின் காலத்தில்
இருந்தே இருக்கின்றன. எறும்புகளில் குறிப்பிடத்தக்க பரிமாணம் நடைபெற்று சுமார் 130 மில்லியன் வருடங்கள் ஆகின்றன.

*** 10,000 – 12,000 வகையான எறும்புகள் உலகம் பூராவும் வாழ்கின்றன.

*** எறும்புகள் தனது எடையை விட 20 -50 மடங்கு அதிகமான எடைய தூக்க வல்லன!

*** எறும்புகளின் வாழ்வை 4 வகைப்படுத்தலாம் அவை : egg, larva, pupa, adult.

*** சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள்வரை உயிர்வாழும். ( பிரிட்டானியா ஆய்வுப்படி கறுப்பு பெண் எறும்பு சுமார் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என அறியப்பட்டது.)

*** எறும்புகளுக்கு காதுகள் கிடையாது, நடக்கும்போது எற்படும் அதிர்வுகளை வைத்தே உணருகின்றன.

*** எறும்புகள் சண்டையிட்டால் ஒரு இறப்பு வரும் வரை சண்டை நடைபெறும்!

*** எறும்புகளில் அதிகாரம் உள்ள எறும்பு ராணி எறும்பாகும்.

*** எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு. ஒன்று அவைக்காகவும் மற்றையது ஏனைய எறும்புகளுக்ககவும்!

*** எறும்புகள் பல்வேறு அளவில் இருக்கின்றன. சில எறும்புகளை பூதக்கண்ணாடியினால் மட்டுமே பார்க்க முடியும். அதிகபட்சமாக 3 இன்ச் அளவுடைய எறும்புகளும் இருக்கின்றன.

*** எறும்புகள் எப்போதும் தனித்து வாழாது! கூட்டம் கூட்டமாகவே வாழும். இக்கூட்டத்தை colony(காலனி) என்பார்கள். ( 2002 ஆம் ஆண்டில் பில்லியன் கணக்கான எரும்புகளைக்கொண்ட சுமார் 5800 கிலோ மீட்டர்கள் நீளமுடைய எறும்புகளின் காலனி கண்டறியப்பட்டது. (இது இத்தாலி – ஸ்பெயின் எல்லையில் அறியப்பட்டது.)

*** சில எறும்புகள் சொந்த இனப்பெருக்கம் செய்யக்கூடியன. அவைக்கு ஆண்துணை தேவைப்படுவதில்லை.

*** சில எறும்புகள் நீந்தக்கூடியவை. பொதுவாக 24 மணி நீரம் நீருக்கடியில் உயிருடன் வாழும் தகுதி உடையவை.

*** வட அமெரிக்காவில் நெருப்பு எறும்புகளால் சுமார் 5 பில்லியன் பெறுமதியான உடமைகள் சேதமாகின்றன.

*** எறும்புகள் தமக்கு தேவையான உணவுகளை விவசாயம் செய்யக்கூடியன. மனிதர்களும் எறும்புகளும் மட்டும் தான் விவசாயம் செய்கின்றோம். ஆனால் மனிதன் விவசாயம் செய்வதற்கு முதலிலிருந்தே எறும்புகள் விவசாயம் செய்துள்ளன.
**************************************************************

நமது_முன்னோர்களின்_விஞ்ஞான_அறிவு.

நமது_முன்னோர்களின்_விஞ்ஞான_அறிவு.



நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு
அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .

சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.

தமிழர் பெருமையை பரப்ப இதை share செய்யுங்கள்..

Monday, November 3, 2014

பேய், பிசாசு, ஏலியன் = ஜின்கள்

பேய், பிசாசு, ஏலியன் = ஜின்கள்


அல்குர் ஆன் வழியில் அறிவியல்………..

 ஆதி காலத்திலிருந்து இன்றைய அறிவியல் காலம் வரை மனிதர்கள்  பயப்படுவது ஒன்றே ஒன்றுக்குத்தான் அதுதான் பேய், பிசாசு. உண்மையில் பேய்,பிசாசு உலகில் உள்ளனவா? என்று கேட்டால், “உளன் எனில் உளன், அலன்  எனில் அலன்”, “உண்டு என்றால் அது உண்டு…இல்லை என்றால் அது இல்லை….” என்று கடவுள் நிலைதான் பேய்க்கும் என்றே கூறுவார்கள்.

 இஸ்லாத்தை பொறுத்தவரையில் பேய், பிசாசு என்று ஒன்று இல்லை. இறந்தவர்கள் ஆவி பேயாக உலவும் என்ற கருத்து இஸ்லாமியக் கொள்கைக்கு முரணானது. ஆனால் மற்ற மதங்களில் பேய், பிசாசு உலா வர தாராள இடம் உள்ளது. குறிப்பாக இந்து மதத்தில்,

“வல்ல பூதம் வாலாஷ்டிக பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்,
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்,
கொள்ளிவாய்ப்பேய்களும் குறளைப் பேய்களும்,

பெண்களைத் தொடரும் ப்ருமராட்சதரும்,
அடியேனைக் கண்டால் அலறிக்கலங்கிட….”  என்று வாசிக்கும் பேய்க் காப்பு  “சஷ்டிக்கவசம்”  உள்ளன.

கடவுளாகிய இயேசு கிறிஸ்த்துவை பிசாசு 40 நாள் சோதித்ததாக பைபிள் கூறுகிறது. (மத்தேயு-4:1) இயேசு கிறிஸ்து பேயோட்டிய சம்பவத்தையும் பைபிளில் காணலாம். (மத்தேயு-12:24) இஸ்லாம் மட்டுமே,பேய்,பிசாசு இல்லவே இல்லை என்று உறுதியாக கூறுகிறது. படைத்த இறைவனுக்கு மட்டும் பயப்படுங்கள். படைப்பினங்கள் எதற்கும் பயப்படக் கூடாது என்பதே இஸ்லாம். மூட நம்பிக்கைகளுக்கு அல்குர்ஆன் மற்றும் ஹதீஸில் இடமில்லை. ஆனாலும் மற்ற மதங்களில் உள்ள புரோகிதர்களை போல இஸ்லாம் மார்க்கத்திலும் மூட நம்பிக்கைகளை முல்லா புரோகிதர்கள் தம் சுய நலனுக்காக புகுத்தி விட்டதை மறுக்க முடியாது.

 இன்று உலகில் நடக்கும் சில அமானுசிய சம்பவங்கள், அறிவியலுக்கு அப்பாற்ப்பட்ட செய்திகள் பேய் உண்டு என்று கூறுபவர்களுக்கு பெரிய ஆதாரமாக உள்ளது. இன்றும் கிராம உக்கிர குல தெய்வங்களான அய்யனார், முனி, காளி கோவில்களில் நடக்கும் பேயோட்டும் சடங்குகள். மற்றும் நாகூர், ஏர்வாடி தர்கா சமாதி, சர்ச்களில் பேய் ஓட்டும் நிகழ்ச்சிகள், பேய் நம்பிக்கையை பெரிதும் வளர்க்கின்றன.

 இன்றைய அறிவியல் உலகம் பேய், பிசாசு கதைகளை ஏற்றுக்கொள்வதில்லை. இவை வெறும் மூட நம்பிக்கையே  என ஒதுக்கிவிட்டன. அதேசமயம் ஏலியன் என்று கூறப்படும் வேற்று கிரகவாசிகள், நம்மைப்போன்ற உயிரினம் இருக்க வேண்டும் என அறிவியல் உலகம்  நம்புகிறது. கடந்த 40 ஆண்டு காலமாக ஏலியன்களை “SETI” (Search for extra-Terrestrial Intelligence) அறிவுப்பூர்வமாக ரேடியோ தொலைநோக்கி மூலம் தேடி வருகிறார்கள்.

மலக்கு, ஜின், மனிதன்

இறைவனது பெரும் படைப்பில் மூன்று இனம் உள்ளது. முதலில் ஒளியால் (LIGHT) படைக்கப்பட்டவர்கள் மலக்குகள் (ANGELS), இரண்டாவது ஜின்கள்  (JINN) இவை நெருப்புக்கொழுந்தின் (FIRE-Smokeless Flame, (Plasma) மூலம் படைக்கப்பட்டவர்கள். ஒளியால் படைக்கப்பட்ட மலக்குகள் எப்பொழுதும் இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவனுக்கு துதி செய்பவர்கள். அவனது கட்டளைக்கு மாறு செய்யாதவர்கள்.

நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் சுதந்திர சிந்தனையுடன் படைக்கப்பட்டார்கள். இறுதியில் களிமண்ணின் சத்தைக்கொண்டு படைக்கப்பட்ட மனிதனும் ஜின்களைப்போல பகுத்தறிவோடு படைக்கப்பட்டான். மனு, ஜின்களை படைத்த நோக்கத்தை அல்லாஹ் கூறுகிறான்.

“ஜின்களையும்,மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.” -அல்குர்ஆன்.52:56.

  “களிமண்ணிலிருந்து, அவன் மனிதனைப்படைத்தான். நெருப்புக்கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்” -அல்குர்ஆன்.55:14,15.

களிமண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதன் உடம்பு களி மண்ணாக இல்லை, இரத்தமும் தசையுமாகவே உள்ளது. அதேசமயம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களும் (Minerals) மனித  உடலில் உள்ளது. இது போலவே நெருப்புச் சுடரிலிருந்து படைக்கப்பட்ட ஜின்கள் நெருப்பு சுவாலையாக இருப்பதில்லை. ஆனால் நெருப்பின் பண்பான வெப்ப ஆற்றலைக் (Plasma-Radiant energy) கொண்டுள்ளார்கள்.

பிளாஸ்மா நிலையில் ஜின்கள்

உலகில் ஒவ்வொரு பொருளும் திட,திரவ,வாயு என மூன்று நிலைகளில் இருக்கின்றன. மூன்றாவது நிலையான வாயுவை உஷ்ணப்படுத்தும்போது அணு தனது எலக்ட்ரான்களை இழந்து நேர் மின்,எதிர் மின் அயனிகள் தனித்தனியாக பிரிந்து (Plasma) பிளாஸ்மாவாக மாறுகிறது.

புகையற்ற நெருப்புக் கொழுந்தினால் (Smokeless Flame-Plasma) படைக்கப்பட்ட ஜின்கள் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்ததால் இறைவனிடமிருந்து தூரமாக்கப்பட்டு ஷைத்தான்களாக, வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் நல்ல ஜின்களும் இருக்கின்றனர். இறுதிக்காலம் வரையிலும் இவர்களுக்கு சில சக்திகளை, ஆற்றலை இறைவன் கொடுத்துள்ளான். இதைக்கொண்டே கெட்ட ஜின்கள் (ஷைத்தான்) மனிதர்களை ஏமாற்றி வழி கெடுக்கின்றனர்.

மனிதர்களைப்போல் மூன்று நிலைகளில் (3 டைமேன்சன்) இல்லாமல் நான்காவது நிலையான பிளாஸ்மா எனும் உருவமற்ற நிலையில் இருப்பதால் இவர்களால் அண்டவெளி முழுவதும் குறுகிய நேரத்தில் சுற்றிவர முடியும். இடம், காலம் வெளி, இவர்களுக்கு பொருட்டல்ல!

ஏழு வானங்களில் தாழ்வான வானத்தில் நட்சத்திரத்தை படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இந்த தாழ்வான வானம் வரை ஜின்கள் சென்று வர ஆற்றல் பெற்றுள்ளனர் என்பதை அல்குர்ஆன் மூலம் அறியலாம்.

 “திடமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கிறோம்.

இன்னும் அவற்றை ஷைத்தான்களை (ஜின்கள்) விரட்டும் எரி கற்களாகவும் நாம் ஆக்கினோம்.  –அல் குர்ஆன். 67:5,41:12.

இன்று பேசப்படும் ஏலியன்கள், என்னும் வேற்று கிரகவாசிகள் இஸ்லாம் கூறும் ஜின்களே! ஜின்கள் நம்மோடு நம் பூமியிலும் வசிக்கின்றன, பிரபஞ்ச பெருவெளியிலும் வாழ்கின்றன. நம் கண்களால் இவைகளைக்  காண முடியாது. ஆனால் அவைகளால் நம்மை பார்க்க முடியும். ஜின் என்ற அரபிச் சொல்லுக்கு மறைக்கப்பட்ட என்ற பொருள்.

உதாரணமாக நமது இதயத்தை நம் கண்ணால் காண முடியாது. உடலின் உள்ளே நெஞ்சில் இதயம் மறைக்கப்பட்டுள்ளது. ஜான் (இதயம்) என்ற சொல் வந்ததின் காரணம் இதுதான். ஜின்கள் வெப்பத்தால் படைக்கப்பட்டதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை. மின்காந்த வெப்ப அலை வடிவில் உள்ளனர். (Electromagnetic-Plasma Radiant Energy)


மேலும் ஜின்களால் மனிதர் உருவில் வர முடியும். மேலும் கருப்பு நாய்,யானை,பாம்பு போன்ற உருவில் வரும் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது. மாலை இருள் சூழும் நேரங்களில் குழந்தைகளை வெளியில் விட வேண்டாம், அது ஜின்கள் வெளிவரும் நேரம் என நபி (ஸல்) அவர்கள் கூறியது கவனிக்கத்தக்கது. காத்து,கருப்பு அடித்துவிடும் என நமது  கிராமங்களில் கூறுவது அனைவரும் அறிந்ததே!

இருள் சூழ்ந்த இரவு,கருப்பு நாய்,யானை,பன்றி போன்ற கருப்பு நிற பிராணி உருவங்களை  ஜின்கள் தேர்வு செய்யக்காரணம் என்ன? நெருப்பு வெப்பத்தால் படைக்கப்பட்ட ஜின்கள்  (Thermochromic  aliens change colors at different temperature  in the visible and invisible spectrum.)

http://www.indiadaily.com/editorial/20467.asp

தங்களை மறைத்துக்கொள்வதற்கு (Camouflage) கருப்பு நிறத்தை தேர்வு செய்வது அறிவியல் ரீதியாக சரியானதே. சூரிய ஒளியில் உள்ள வெப்ப அலைகளை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கருப்பு நிறத்துக்கு மட்டுமே உண்டு.

மழைக் காலத்தில் கருப்புக் குடை பிடிப்பது சரியானது. ஆனால் கோடை காலத்தில் கருப்பு குடைகள் வெப்பத்தை உள்ளிழுக்கும் தன்மை கொண்டதால் வெண்மை நிற குடைகளே சிறந்தது. ஏனெனில் வெண்மை நிறம் சூரிய வெப்பத்தை பிரதிபலித்து திருப்பி மேலே அனுப்பும் தன்மை அனைவரும் அறிந்ததே.

கடும் வெப்பத்தால் படைக்கப்பட்டு, பிளாஸ்மா நிலையில் உள்ள ஜின்கள் உருவம் மாறி வரும்போது வெப்பத்தை இழுக்கும் தன்மை கொண்ட கருப்பு நிற உருவில் தங்களை மறைத்துக் கொள்ளுகின்றனர். மேலும் மற்ற நிறங்களை விட கருப்பு நிறமானது கன பரிமாணங்களையும் மறைக்கும் தன்மை கொண்டது. பொதுவாக பெண்களின் பர்தா துணிகள் கருப்பு நிறத்தில் இருக்கும் காரணமும் இதுவே.

சில சமயம் இரவு நேரங்களில் அமானுஷிய உருவங்களை (பேய்?) பார்ப்பவர்கள் அது கருப்பு நிறத்தில் இருந்ததாகவும் அந்த இடம் சில்லென குளிர்ச்சியுடனோ அல்லது அதிக வெப்பத்துடன் இருந்ததாகவோ குறிப்பிடுவார்கள். காரணம் இதுதான், வெப்ப தன்மையுள்ள ஜின்கள் வெப்பத்தை தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் கருப்பு நிறத்தை (Adaptation) தெரிவு செய்து தங்களை மறைத்து கொள்கின்றன.

ஜின்கள்  மின்காந்த அமைப்புடைய (Electromagnetic) உடலைப் பெற்றவை. அவ்விடத்தில் உள்ள வெப்பத்தை அவை கிரகித்துக் கொள்வதால் அவ்விடம் குளிர்ந்து சில்லென்றிருக்கும். தன் உடம்பிலிருந்து  அகச்சிவப்பு கதிர்களை (Infra-Red Rays)  வெளியிடுவதால் அவ்விடம் திடீரென்று வெப்பமாகும்.

1927 ல் சர்.பிரான்சிஸ் யங்ஹஸ்பெண்ட் என்பவர் ஒரு நூல் எழுதுகிறார். (”Life in Star ”by Sir.Fransis Younghusband-Published. John Murray-London.) “நட்சத்திரங்களில் உயிர்கள்”. இதில் நட்சத்திரங்களில் உயிரினங்கள் வசிக்க வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார். நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே.

1980 ல் விஞ்ஞானிகள் (G.Feinberg & R.Shapiro) பெய்ன் பர்க், மற்றும் ஷாப்பிரோ ஒரு ஆய்வு நூல் எழுதுகிறார்கள் “Life Beyond Earth” பூமிக்கு அப்பால் உயிர்கள். (Published by  William Morrow and co.Inc.New York-1980.) அதில் அவர்கள், நட்சத்திரம் மற்றும் நமது சூரியனின் பிளாஸ்மாக்களில் வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் இவ்வுயிரினங்களுக்கு பிளாஸ்மா பீஸ்ட் (Plasma Beast) என்று பெயரிட்டனர்.

பூமியில் கார்பன் மற்றும் நீரின் இரசாயன மாற்றத்தால் வாழும் மனிதன் மற்றும் பல ஜீவ ராசிகள் இரசாயன உயிரிகளாக (Chemical Life) இருப்பது போல் சூரியனின் பிளாஸ்மா வெப்பத்தில் வாழும் ஜின்கள் இயற்பியல் உயிரினமாக (Physical life) இருக்கலாம். இவைகள் சூரியக் கதிர்களை சக்தியாக கிரகித்து (Radiant energy) செயல்படலாம்.

பிரபஞ்சத்தில் பிளாஸ்மா உயிர்கள்

சூரிய வெப்பத்தில் உருவாகும் பிளாஸ்மாக்கள் பிரபஞ்சத்தில் உள்ள தூசு (Cosmic Dust) உடன்  சேர்ந்து மின்னூட்டம் பெற்று பூமியில் உள்ள DNA உயிர்கள் போன்று மாறுவதாக ஜெர்மனி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம் கூறுகிறது.

Could alien life exist in the form of DNA-shaped dust?   http://www.newscientist.com/article/dn12466-could-alien-life-exist-in-the-form-of-dnashaped-dust.html#.UdV04Nz2Ndg

·                           Could alien life exist in the form of dancing specks of dust? According to a new simulation, electrically charged dust can organise itself into DNA-like double helixes that behave in many ways like living organisms, reproducing and passing on information to one another.
“This came as a bit of a surprise to us”, says Gregor Morfill of the Max Planck Institute for Extraterrestrial Physics in Garching, Germany. He and colleagues have built a computer simulation to model what happens to dust immersed in an ionised gas, or plasma.

இதே ஆய்வை விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ( ISS- International Space Station) ரஷ்ய விஞ்ஞானிகள் நிகழ்த்தி பிளாஸ்மா உயிர் உருவாவதை கண்டு பிடித்தனர். இந்த ஆய்வு இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது. http://www.nasa.gov/mission_pages/station/research/experiments/PK-3_Plus.html


Are we living in a Plasma Brain?பிரபஞ்சத்தில் பிளாஸ்மா ஜின்கள்

பூமியில், விளக்கு சுடர், பிளோரசன்ட், நியான் விளக்குகள் மற்றும் இடி மின்னலின்போதும் பிளாஸ்மா உருவாகிறது. விண்வெளி முழுவதும் 99% (Ionised Plasma) பிளாஸ்மாவே நிறைந்திருக்கிறது. நமது பிரபஞ்சம் 96% கரும் சக்தி,கரும் பிண்டம் (Dark Energy & Dark Matter) நிறைந்த இருள் வெளி.

நெருப்புச் சுடரில் (பிளாஸ்மா) ஜின்கள் படைக்கப்பட்டு இருப்பதால், இதனை எளிதாக விளக்க, ஜின்கள் மிகச் சிறிதாக ஒடுங்கி சுருங்கி பிரமாண்ட உருவமாக விரிவடையும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதை அறிந்து கொள்ளவும்.  அரபியர்கள் புகழ் பெற்ற “அலாவுதீனும் அற்புத விளக்கும்” என்ற நூலை உலகிற்கு அளித்தனர்.

வாவ்- ஏலியன்ஸ் பூமியை தொடர்பு கொண்டனவா?..

ஏலியன்களை தொடர்பு கொள்ள ரேடியோ அலை தொலை நோக்கி (Radio Telescope) மூலம் கடந்த ஐம்பது வருடங்களாக கடும் முயற்சி செய்தும் பலனில்லை இதுவரை பதிலில்லை. காரணம் ரேடியோ அலைகளால் ஏலியன்-ஜின்களை தொடர்பு கொள்ள முடியாது. ஏனெனில் ஜின்கள் எலெக்ட்ரோ மாக்னடிக் ரேடியன்ட் ஆற்றல் உள்ளவர்கள். கடும் பிளாஸ்மா வெப்பத்தில் படைக்கப்பட்டவர்கள். அகச் சிவப்பு கதிர்களை வெளியிடக்கூடியவர்கள்.

இந்த மாதம் ஜூன் 2013 ல்  வெளிவந்த புகழ்பெற்ற “ASTRONOMY” இதழில் பிரபல்யமான ஐந்து விண்ணோக்கி ஆய்வாளர்கள் செய்த ஆய்வு முடிவு  வெளி வந்தது. கடந்த நாற்பது வருடமாக ரேடியோ டெலஸ்கோப் (Radio Telescope) மூலம் ஏலியன் என்னும் பிற உயிரினத்தை தேடி அலைந்து  தோல்வியுற்றார்கள்.

காரணம் பிரபஞ்சத்தில் வெப்பத்தை அடிப்படையாக கொண்ட உயிரினங்கள் உள்ளதாகவே ஆய்வுகள் கூறுகின்றன. (“The energy footprint of life and civilization appears as infrared heat radiation,” says Kuhn, the project’s lead scientist University of Hawaii’s Institute for Astronomy,.) எனவே வெப்பத்தை தேடும் (Heat Seeking) அகச் சிவப்பு கதிர் தொலைநோக்கி (Infra-Red Telescope) மூலம் இனி தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளார்கள். இந்த தொலை நோக்கி (The Colossus Telescope) ஒரு பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு இன்னும் ஐந்து ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வருமாம்.

இறுதியில் அல்குர்ஆன் கூறும் ஜின்கள்(ஏலியன்) கடும் வெப்பமுடைய நெருப்பு கொழுந்து சுவாலையால் (பிளாஸ்மா) படைக்கப்பட்டார்கள் என்ற உண்மையை மேலை நாட்டு அறிவியல் உலகம் இன்று ஏற்றுக்கொண்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

“எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருக்கின்றதோ அவர்கள், நிச்சயமாக இவ்வேதமானது உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது விசுவாசம் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்: திடனாக அல்லாஹ் விசுவாசம் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.” –அல்குர்ஆன். 22:54.


அல்லாஹ் மிக அறிந்தவன்.

–எஸ்.ஹலரத் அலி-ஜித்தா.

ஜசகல்லாஹ் க்ஹிர்
readislam.

some  related article ..

வேற்றுகிரகவாசிகள் பற்றிய சில கட்டுரைகள் 






Sunday, November 2, 2014

வீட்டுக்கு ஒரு விமானம்!

வீட்டுக்கு ஒரு விமானம்!


வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதைப்போல வீட்டுக்கு ஒரு கார் வேண்டும் என்று மக்கள் விரும்புவது நம்ம ஊரில். ஆனால், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஸ்புரூஸ் கிரீக் (Spruce Creek) வாசிகள், டிஃபன் சாப்பிடச் செல்வதற்கே வீட்டுக்கு ஒரு விமானம் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சனிக்கிழைமையும் தங்களுடைய விமானங்களை எடுத்துக்கொண்டு, பக்கத்தில் இருக்கும் விமான நிலையத்துக்குச் சென்று, காலை டிஃபன் சாப்பிடுகிறார்கள்.

இதை, 'சாட்டர்டே மார்னிங் காகுல்' (Saturday Morning Gaggle) என்கிறார்கள். விமானத்தில் சென்று டிஃபன் சாப்பிட விரும்புவோர், காலையிலேயே ரன்வேக்கு போய்விட வேண்டும். விமானத்துக்கு மூன்று பேராக 20 விமானங்களில் செல்கிறார்கள். சாப்பிட்டுக்கொண்டே, புதிது புதிதாக வந்திருக்கும் விமானங்களைப் பற்றி பேசுவதும் பிறகு, வீடு திரும்புவதுமாக  இருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போரின்போது, 'ஏர்பார்க்' (airpark) என்ற பெயிரில், அமெரிக்கா அதிக இடங்களில் தனியார் விமான நிலையங்களை அமைத்தது. அதில், ஸ்புரூஸ் கிரீக் விமான நிலையமே பெரியது. 1946ல் அமெரிக்க விமானப் படை, ஏர்பார்க் விமான நிலையங்களை எல்லாம் மூடத் தொடங்கியது. ஆனால், ஸ்புரூஸ் கிரீக் கிராம வாசிகள் மட்டும், 'நாங்கள் இந்த ரன்வேயைப் பயன்படுத்திக் கொள்கிறோம்' என்று சொல்லி, மூடவிடாமல் தடுத்துவிட்டனர்.


ஏனென்றால் இங்கு குடியேறிய பெரும்பாலானோர், போரில் பணியாற்றிய பைலட்கள்,  டாக்டர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள்  ஆவர். இவர்கள் அனைவருக்குமே விமானங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அதனால்தான், 5,000 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில், வீட்டுக்கு ஒரு விமானம் உள்ளது.


இதே ஊரில் வசிக்கும் அமெரிக்காவின் பிரபல நடிகர் 'ஜான் டிரவால்டாவுக்கு போயிங் 707, கல்ஃப் ஸ்ட்ரீம் ஜெட் போன்ற பெரிய விமானங்கள் இருக்கின்றன.

வீட்டின் முன் கார்களுக்கு ஷெட் இருப்பதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் விமானங்களுக்கென ஷெட் அமைத்திருக்கிறார்கள்.

வீட்டின் முன் இருக்கும் சாலைகள் எல்லாமே ரன்வேயை நோக்கியே இருக்கும். பெருமைக்காக  இல்லாமல், சிலர் தங்களின் விமானங்களை வாடகைக்கு விடுகிறார்கள். சிலர், தேர்ச்சிபெற்ற பைலைட்டுகளின் மூலம் விமானம் ஓட்டக் கற்றுத்தருகிறார்கள். இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வர இதுவும் ஒரு காரணம்.

என்.மல்லிகார்ஜுனா, கே.ஆர்.ராஜமாணிக்கம்

Tuesday, October 28, 2014

மீத்தேன் எரிவாயுத் திட்ட அபாயம்.

மீத்தேன் எரிவாயுத் திட்ட அபாயம்.


தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியதாம் என்ற ஒரு பழமொழிச் சொல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அது இப்போது  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை விஷயத்தில் உண்மையாகி இருக்கிறது.

தேவையில்லாத பாதுகாப்புத்துறை செலவீனங்கள் , இமயம் அளவு ஊழல்கள், இந்தியாவுக்குப் பொருந்தாத சந்தைப் பொருளாதாரம் என சூறையாடப்பட்ட இந்தியாவின் பொருளாதாரம் இப்போது அதல பாதாளத்திற்குப் போய்  கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இதில் இருந்து தப்பிக்க வழக்கம் போல இந்தியா தனது மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்க முடிவு செய்து விட்டது. “என்னடா சிக்கும்” என அது தேடும் போது அதற்கு சிக்கி இருப்பது தான் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் "மீத்தேன்" எனப்படும் இயற்கை எரிவாயு.

இந்தப் பகுதியில்  மக்கள் மிக அதிகமாக  வசிக்கிறார்கள் என்ற உணர்வும், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் என்பது குறித்த அக்கறையும், தமிழகத்தின் நீர் ஆதாரம் அடியோடு சீர்குலையும் என்ற கவலையும் இல்லாமல் மத்திய அரசு தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் முழுக்க  ஆழ்கிணறுகளைத் தோண்டி மீத்தேன் எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டப் பகுதிகள் கூறு கூறாக பிரிக்கப்பட்டு மீத்தேன் எடுக்கும் அனுமதி  மூன்று நிறுவனங்களுக்கு   கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பெயர்கள்:

1.இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் - Oil and Natural Gas Corporation Ltd.  (ONGC)

2.இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் - Gas Authority of India Ltd (GAIL)


3.கிழக்கத்திய எரிசக்தி  நிறுவனம் - Great Eastern Energy Corporation Ltd (GEECL)


இந்த நிறுவனங்கள் மூன்றுமே இந்தியாவில் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை. இவர்களுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது. எந்த நிலத்தில் என்ன கிடைத்தாலும், அந்த நிலப் பரப்பில் எத்தனை  மக்கள் வசித்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு அங்கு கிடைக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.

இந்தத் திட்டம் ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கும். சில முக்கியப் பிரச்சினைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.
1.   நிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாக உறிஞ்சப்படுவதால் விவசாயம் செய்ய இப்போது இருக்கும் கொஞ்ச நீரும் கிடைக்காது. குடிநீர் தட்டுப்பாடும் தலை விரித்து ஆடும்.
2.   மீத்தேன் எடுப்பதற்காக ஆழ்குழாய் மூலம் உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விட பலமடங்கு உப்புத் தன்மையுடையது. இந்த நீர் தற்போதுள்ள ஆறுகளிலும் , குளங்களிலும் கலக்கும் போது விவசாய நிலம் உப்பளமாக மாறும்.

3.   மீத்தேன் எடுக்கும் போது நிலத்தில் எற்படும் மாற்றங்களால் குடிநீரோடு இந்த மீத்தேன் எரிவாயு கலக்கும் ஆபத்து இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணைக் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் குழாய்களில் வந்த நீர் தீப்பற்றி எரிந்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. அது ஒரு சிறிய எண்ணைக் கசிவால் ஏற்பட்ட விளைவு. மாவட்டங்கள் முழுக்க எண்ணைக் குழாய்கள் அமைக்கப்பட்டால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள். மீத்தேன் எடுக்கும் பணியில் குழாயில்  கசிவு ஏற்பட்டு மீத்தேன் வாயு சுற்றுப்புறத்தில் கலக்கும் ஆபத்து இருக்கிறது.  (மீத்தேன் என்பது எளிதில் தீ பற்றக் கூடிய வாயு)

4.   அதன் பண்பு நிலையானது மிகக் குறைந்த வெப்பத்திலேயே, தானே தீ பற்றிக்கொள்ளும் தன்மை உடையது. அதுவுமில்லாமல், இது காற்றில் கலந்தால் நாம் சுவாசிக்கும் காற்று முழுக்க நஞ்சாக மாறும். அதனால்,தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஒட்டு மொத்த மக்களின் சுகாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும்.
5.   நிலத்தின் அடியே குறுக்கும் நெடுக்குமாக தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை , திருவாரூர் மாவட்டம் முழுவதும் பூகம்பம் ஏற்படும் ஆபத்தும் உருவாகும்.(நிலத்தின் வழமையான நீரோட்டம் பாதிக்கப் படுவதால்)
6.   மீத்தேன் எடுக்கும்  நிறுவனங்கள் உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுப்பதாகச் சொன்னாலும் அவர்கள் இந்த எரிவாயு எடுக்கும் அனுபவம் உள்ளவர்களையே  பணியில் அமர்த்த முடியும்.இதன் மூலம் தஞ்சை , திருவாரூர் மாவட்டங்களில் பெருமளவு வெளிமாநில மக்கள் குடியேற்றப்படுவார்கள்.
7.   தஞ்சை திருவாரூர் மாவட்டங்களின்   மக்கள்   தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை ஏற்படும்.
8.   இந்த நிறுவனங்கள் தங்கள் எரிவாயுவை கொண்டு செல்லக் குழாய் பதிப்பது , சாலைஅமைப்பது போன்ற பணிகளைச் செய்யும் போது ஏற்கனவே இருக்கும் ஆறுகள், குளங்கள் போன்றவை இந்த நிறுவனங்களால்அழிக்கப்படும்.
9.   இந்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் குடிநீர் நஞ்சாக மாறுவது மட்டுமல்ல , இந்தக் குழாய்களில் ஏற்படும் சேதத்திற்கு நம்  மீது வழக்குப் போடவும் வாய்ப்பு இருக்கிறது.
உயிர் வாயுவை எப்படி உற்பத்தி செய் யும்  முறை 

அது மட்டுமல்ல நமது நாட்டில் உள்ள கால் நடைகளின் சாணம் என்பது ஏற்கனவே மீத்தேன் எரிவாயுவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவானது திடீரென்று தானே தீப்பற்றி எரிந்ததை அந்த நாட்களில் மக்கள் கொள்ளிவாய்ப் பிசாசு பார்த்தேன் என்பர். இன்று ஓரளவு விஞ்ஞானத்தின் வாயிலாக உண்மையை உணர்ந்து கோபார் காஸ் என்று மக்களிடம் விளக்கி அந்த சாணத்தையே தொட்டியில் சேகரித்து அதிலிருந்து கிடைக்கும் மீத்தேன் வாயுவை வீட்டிற்கான சமையல் வாயுவாகப் பயன்படுத்த 1970 -களில் இந்திரா காந்தி அம்மையாரின் அரசாங்கம் முயன்று ஓரளவு வெற்றி பெற்றது. பின்னர் இந்த எளிதில் தீ பற்றும் வாயுவினால் பல விபத்துகள் ஏற்பட்டதால் இத் திட்டம் கைவிடப் பட்டது.

அது மட்டுமல்லாமல், இதற்காக பூமியில் பதிக்கப் படும் பைப்புகள் நம்மூர் மண்ணின் தன்மையால் விரைந்து துருப் பிடிக்கும், பிறகு ஓட்டை விழும்,பின்னர் வாயு கசிவு உண்டாகும். இதெல்லாம் நம் விஞ்ஞானிகளால் 15 நாளில் சரி செய்யப்படும் என்பது நமது அரசு தரும் உத்திரவாதம், இதற்கு நாம் ஒப்புக்கொண்டு என்னதான் நடக்கும் என்று பார்க்க முடிவு செய்தால் அதை விட கொடிய செயல் ஒன்றும் இல்லை.

உடனடிப் பக்க விளைவு என்ன தெரியுமா ? ஒட்டு மொத்த இந்தியாவிலேயே மிகப் பரந்த விளை  நிலங்களும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாய் குறுக்கு நெடுக்காய் பாசனக் கால்வாய்களைக் கொண்ட நெற்களஞ்சியம், தொன்று தொட்ட விவசாயப் பண்பாடு என்பதெல்லாம் தமிழ் நாட்டில், குறிப்பாக சோழ மண்டலத்தில்தான். இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் மலைகளும் குன்றுகளும் இடைமறிக்காத ஒரு பரந்துபட்ட சமவெளி என்பது காணக்கிடைக்காது.

இன்று எரிவாயு அரக்கர்கள் நிலத்தடி நீரையும்,பாசனக் கால்வாய்களையும் ஒரு சேரச் சுற்றுச் சூழல், நிலத்தடி பாதிப்பினை ஏற்படுத்தப் போகின்றனர். வரும் முன் காப்பதுதான் மனித இயல்பு. வந்த பின்பு ஊரைக் காலி செய்தால் நாம் எல்லாம் வெறும் அகதிகளாகத்தான் அலைய வேண்டி வரும். இன்றையக் காலத்தில் அகதிகளுக்கும் பெரும் சோதனை என்பதனை மறக்க வேண்டாம். நம் பிள்ளைகள் அகதிகளாய்அலைய நாம் காரணமாய் இருக்க வேண்டாம்.

ஒன்று பட்டு நிற்போம்.......நம் மண்ணைக் காப்போம்.

நன்றி
முஹம்மத் இக்பால்

Monday, October 27, 2014

எபோலா வைரஸ் காய்ச்சல் பற்றிய தகவல்களும் அவற்றின் அறிகுறிகளும் மற்றும் அவற்றை தடுக்கும் வழிமுறைகளும்

உலகத்தையே உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் காய்ச்சல் பற்றிய தகவல்களும் அவற்றின் அறிகுறிகளும் மற்றும் அவற்றை தடுக்கும் வழிமுறைகளும் :-



1976 இல் ஆப்பிரிக்காவில் பல உயிர்களை வாங்கிய ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோய் தான் எபோலா வைரஸ். இந்த வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் காங்கோவில் உள்ள எபோலா ஆற்றங்கரையில் தோன்றியதால் இந்த நோய்க்கு, 'எபோலா வைரஸ்' என, பெயர் வந்தது. இதுவரை ஆப்பிரிக்காவில் பரவி பல மக்களை கொன்றுள்ளது.

ஏனெனில் ஆப்பிரிக்காவில் இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தது இல்லை. மேலும் இதற்கு இன்னும் போதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோயினால் தாக்கப்பட்டால் மரணத்தைக் கூட தழுவக்கூடும்.

எபோலா வைரஸ் நோயானது காற்று, நீர் போன்றவற்றினால் பரக்கூடியது அல்ல. விலங்குகளான குரங்கு, வௌவால் மூலம் மனிதர்களுக்கு பரவும். மேலும்ம் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் மலத்தில் இருந்து மற்ற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.



இப்போது இந்தியாவில் பரவியுள்ளதாக கூறப்படும் இந்த எபோலா வைரஸின் அறிகுறிகள் மற்றும் அந்த நோய் பரவுவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போம். முக்கியமாக இந்த நோய் தாக்கி இதன் அறிகுறிகள் தெரிய 5-21 நாட்கள் ஆகும். ஆகவே கவனமாக இருங்கள்.

எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...


* எபோலா வைரஸ் தாக்கியிருந்தால், முதலில் காய்ச்சல் வரக்கூடும்.
* காய்ச்சலைத் தொடர்ந்து உடல் எப்போதும் மிகவும் சோர்வுடன் வலிமை இல்லாமல் இருக்கும்.
* குறிப்பாக தலைவலி வரும்.
* வைரஸ் தாக்குதலால் தொண்டையில் புண் ஏற்படும்.

* கடுமையான தசை மற்றும் மூட்டு வலி வந்து, பெரும் தொந்தரவைத் தரும்.

நோய் முற்றிய நிலையில்....
* எதை சாப்பிட்டாலும் வாந்தி வரக்கூடும்.
* வயிற்று வலி வந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் எபோலா வைரஸ் தாக்கியிருந்தால் கடுமையான வயிற்று வலி வரும்.
* அதிகளவு வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும்.
* அதைத் தொடர்ந்து சருமத்தில் அரிப்புகளும், கட்டிகளும் ஏற்படும்.

* குறிப்பாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழக்க ஆரம்பிக்கும்.

* சிலருக்கு நெஞ்சு வலி வரும்.
* மூச்சு விடுவதில் கூட சிலருக்கு சிரமம் ஏற்படும்.

* உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் இரத்தம் வழிய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி கண்கள் சிவப்பாகவும், அடிக்கடி விக்கல் ஏற்படும்.

எபோலா நோய் பரவுவதை தடுக்கும் வழிகள்.....


* நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் அதிகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
* முக்கியமாக அந்நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களின் அருகில் செல்லும் போது கையுறை மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் இரத்தம் உங்கள் மீது பட்டாலும் உங்களுக்கும் இந்நோய் தொற்றிக் கொள்ளும்.
* எப்போதும் எந்த ஒரு பொருளை உட்கொள்ளும் முன்னர் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவி விட வேண்டும்.
குறிப்பு.......
இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், உடலில் அந்த வைரஸை எதிர்த்துப் போராடும் வண்ணம் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுத்து வந்தால், இந்த உயிர்க்கொல்லி நோயின் தாக்குதலில் இருந்து வெளிவரலாம்.

( படிக்கும் அனைவரும் share செய்யவும் நன்றி )