தென்அமெரிக்கா கண்டத்தில் பிரேசில் நாட்டில் ஆன்டிஸ் மலைத் தொடரில்
உற்பத்தியாகி அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் அமேசான், உலகிலேயே பெரிய நதிகளில் ஒன்று. இது பல அதிசய உண்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
உலகில் கடலில் கலக்கப்படும் மொத்த நீரின் அளவில் அமேசானின் பங்கு 20 சதவீதம். 6,437 கி.மீ., நீளமுள்ள இந்த நதியில் பாயும் நீரின் அளவானது, உலகின் மற்ற 7 பெரிய
நதிகளின் மொத்த நீரின் அளவை விட அதிகம். வட அமெரிக்காவில் பாயும் பிரமாண்டமான மிசிசிப்பியைப் போல பத்து மடங்கு பெரியது. தென்அமெரிக்க கண்டத்தின் 40 சதவீத நிலப்பரப்பு (70 லட்சம் சதுர கி.மீ.,) அமேசானின் வடிநிலமாக இருக்கிறது.
அமேசான் நதியின் ஆதாரம்
அமேசான் நதியின் அதிகப்படியான நீருக்கு, தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உயர்ந்து நிற்கும் ஆன்டிஸ் மலைத்தொடரின் பனி மூடிய சிகரங்களும், நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்யும் கனமழையும் தான் காரணம். அமேசான் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆண்டுக்கு சராசரியாக ஐந்து ஆயிரம் மி.மீ., மழை பெய்கிறது. அமேசான் நதிக்கு பெரும்பாலான நீர் மழையின் மூலமாகவே கிடைக்கிறது. இந்த கனமழை ஆண்டின் பெரும்பாலான நாட்களில் 40 லட்சம்சதுர கி.மீ., பரப்பளவுக்கு கொட்டித்தீர்க்கிறது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து, அமேசான் உலகத்திலேயே மிகப் பெரியநதியாக இருப்பதற்கு காரணமாகிறது.மழை அதிகம் பெய்யும் காலங்களில் அமேசான் ஆற்றில் விநாடிக்கு 80 லட்சம் கன அடி வரை நீர் பாய்கிறது. அந்த சமயத்தில் ஆற்றின் அகலம் 50 கி.மீ., வரை இருக்கும். நீரின் ஆழம் 300 அடி வரை இருக்கிறது. அமேசான் கடலில் கலக்கும் இடத்தில் சுமார் 300 கி.மீ., சுற்றளவுக்கு கடல் நீரை உள்தள்ளி நன்னீராக இருக்கிறது.
துணை நதிகள்: அமேசானுக்கு 1,100க்கும் மேற்பட்ட துணை நதிகள் உள்ளன. ரியோநெக்ரோ, கைனியா, மரோனா, ஜாபுரா, காகுடா, உகேயாலி, புருஸ், டாபஜோஸ், சிங்கு போன்றவை முக்கியமான துணை நதிகள். நீர் பாயும் கன அளவைப் பொறுத்த வரை ரியோநெக்ரோ, அமேசானுக்கு அடுத்தபடியாக 2வது பெரிய நதியாக இருக்கிறது.
மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள்
* அமேசான் நதியை சுற்றி இருப்பதால் அமேசான் காடுகள் என பெயர் வந்தது. இதுவே உலகின் பெரிய மழைக்காடு. இதன் மொத்த பரப்பளவு
55 லட்சம் சதுர கி.மீ.,
* இதன் 60 சதவீத பகுதி பிரேசிலில் உள்ளது.பெரு 13 மற்றும் கொலம்பியா 10 சதவீதத்தை
கொண்டுள்ளது. தவிர வெனிசுலா, பிரஞ்சு கயானா, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் சிறிய அளவில் உள்ளன.
* உலகில் வாழும் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த காடுகளில் உள்ளன. இதனால் உலகின் பெரிய ஆய்வு பிரதேசமாகவும் விளங்குகிறது.
* பலவகையான மருத்துவ செடிகள், மூலிகைகளையும் கொண்டுள்ளது.
* 25 லட்சம் வகையான பூச்சியினங்கள், 10 ஆயிரம் தாவர வகைகள், 2 ஆயிரம் பறவைகள் மற்றும்பாலூட்டிகளுக்கு இருப்பிடமாக திகழ்கிறது.
* அமேசான் காடுகளிலும், நதியிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே
உள்ளன. இந்த