Friday, June 24, 2016

அமேசான் காட்டில் காணப்படும் மர்ம நதி


அமேசான் காட்டில் காணப்படும் மர்ம நதி


பெரு நாட்டுப் பகுதி அமேசன் மழைக்காடுகளில் மர்மமான நதி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.              6.4 கி.மீ நீளத்திற்கு இந்த நதியின் நீர் வெப்ப நீராக மாறி இருக்கிறது. 50 பாகை முதல் 90 பாகை செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது. சில இடங்களில் அதிகபட்சமாக 100 பாகை செல்சியஸ் வெப்பம் காணப்படுகிறது.

இந்த நதிக்குள் தவறி விழும் விலங்குள் சில நிமிடங்களில் உயிரிழந்து, மிதக்கின்றன வெப்ப நதிக்குப் பல காரணங்களைக் கதைகளாகச் சொல்கிறார்கள். 1930 ஆம் ஆண்டு முதலே வெப்ப நீர் நதி பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்த நீர் ஏன் வெப்பமாக மாறுகிறது. என்பதற்குச் சரியான அறிவியல் விளக்கம் இன்று வரை கிடைக்கவில்லை.

அமேசனிலிருந்து 400 மைல்கள் தூரத்தில் ஓர் எரிமலை இருக்கிறது.அதனால் எரிமலையில் இருந்தும் இந்த நீர் வருவதற்கன வாய்ப்பில்லை என்கிறார்கள்.ரூஸோ என்ற இளம் விஞ்ஞானி இந்த பகுதிக்கு வந்து,ஆராய்ச்சி செய்த பிறகு தன்னுடைய அனுபங்களைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்.
Andrés-Ruzo-boiling-river-1200x675

“தண்ணீருக்குள் கை வைத்தபோது,மிகவும் சூடாக இருந்தது.சட்டென்று கையை எடுத்துவிட்டேன்.தவறி விழுந்தால் உயிர் பிழைக்க முடியாது.ஆற்றில் இருந்து ஆவி வந்துகொண்டே இருக்கிறது.இந்த தண்ணீருக்கு மருத்துவக்குணங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.இந்தப் பகுதிக்கு வருவது எளிதல்ல.அதிக வெப்பமாக இருக்கிறது.விஷப் பூச்சிகள் கடிக்கும்.இங்கே வருவதே ஆபத்தான விஷயம்” என்கிறார் ரூஸோ.