Friday, February 8, 2019

அடித்தளமே இல்லாத தாஜ்மஹால் யமுனை நதி உள்ள வரை மட்டுமே இருக்கும்.! என் ???

அடித்தளமே இல்லாத  தாஜ்மஹால் யமுனை நதி உள்ள வரை மட்டுமே இருக்கும்.! என் ???


காதல் சின்னமாக அனைவராலும் போற்றப்படும் தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரியாத பல பகிர் உண்மைகளை இப்பொழுது கூறப்போகிறோம். 

காதல் தின கொண்டாட்டங்கள் இன்று முதல் துவங்கிவிட்ட நிலையில் காதல் சின்னமான தாஜ்மஹால் பற்றிய உண்மைகளைத் தெரியாமல் இருந்தால் எப்படி? 

21 ஆண்டு காலம் நடைபெற்ற கட்டிடப்பணி.! 


உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 1632 ஆம் ஆண்டு தனது கட்டுமான பணியை துவங்கியது. முகலாய பேரரசர், ஷாஜகான் தலைமையில் 1653 ஆம் ஆண்டு தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டது. தாஜ்மஹாலை கட்டி முடிக்க மொத்தம் 21 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தாஜ்மஹால் இல் 28 விதமான கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

387 ஆண்டுகளைக் கடந்து உறுதியாய் நிற்கும் தாஜ்மஹால்.! 

இரகசியம் என்ன? தாஜ்மஹால் கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 387 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. இவ்வளவு உறுதியாகப் பல நூற்றாண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் தாஜ்மஹாலிற்கு அடித்தளம் கிடையாது என்பது உங்களுக்கு நாங்கள் சொல்லும் முதல் அதிர்ச்சி அளிக்கும் தகவல். 

மரக்கட்டையிலான மேடையில் நிற்கும் தாஜ்மஹால்.! 


அடித்தளம் இல்லாமல் எப்படி 387 ஆண்டுகளாக தாஜ்மஹால் உறுதியாய் உள்ளதென்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கும். அதற்கான பதிலை இப்பொழுது கூறுகிறோம், தாஜ்மஹால் மரங்களினால் ஆனா ஒரு மேடை மேல் தான் நிறுவப்பட்டுள்ளது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அதுமட்டுமின்றி தாஜ்மஹால் இன்னும் பல ஆயிரம் நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கப்போவதற்கும் மரத்தினால் ஆனா இந்தக் கட்டைகள் தான் காரணமாக போகிறது என்பது தான் உண்மை. 

மிரள வைக்கும் தாஜ்மஹாலின் கட்டிடக்கலை திட்டங்கள்.! 


கட்டிட கலையில் 500 ஆண்டுகளுக்கும் முன்பே பல புதிய யுக்திகளை மேற்கொண்டு தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது என்பது தான் இப்பொழுது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மரக்கட்டைகள் எப்படி 1000 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்? 

மரக்கட்டைகள் எப்படி 1000 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்? 



சாதாரண மரக்கட்டைகள் சில வருடங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும், ஆனால் இங்கு அவர்கள் பயன்படுத்தியுள்ள முறை தான் இந்த மரக்கட்டைகளை 1000 நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும்படி மாற்றியுள்ளது. யமுனை ஆற்றின் கரையினில் அவர்கள் தாஜ்மஹால் கட்ட தேர்வு செய்தது தான் முதல் காரணம். அத்துடன் மரக்கட்டைகள் ஈரத்தில் இருக்கும் போது மிக வலிமையுடனும் நீண்ட ஆயுளுடனும் நிலைத்து நிற்கும் என்று அவர்களுக்கு அப்பொழுதே தெரிந்துள்ளது.

யமுனை நதி உள்ள வரை மட்டுமே தாஜ்மஹால் இருக்கும்.! 


யமுனை நதியினால் தான் அடித்தளத்தில் நிறுவப்பட்டுள்ள மரக்கட்டைகள் ஈரமாக இருந்து, தாஜ்மஹாலுக்கு எந்த பாதிப்பும் வராமல் பாதுகாத்து நிற்கிறது. யமுனை நதி தற்பொழுது வேகமாக மாசடைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் உலக அதிசயங்களில் ஒன்றை இன்னும் சில பல ஆண்டுகளில் நாம் இழந்துவிடுவோம் என்பதே ஆர்வலர்களின் வருத்தம். 


தினமும் 3 முறை நிறம் மாறும் தாஜ்மஹால்.! 


தாஜ்மஹால் கட்டிடத்தை புகழாதவர்களே கிடையாது. அதை நேரில் கண்டவர்களுக்கு அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு இனிமையான தருணமாக அது அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தாஜ்மஹால் தினமும் மூன்று முறை தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பது தான் கூடுதல் சிறப்பு. இதற்குக் காரணம் தாஜ்மஹால் இல் பயன்படுத்தப்பட்டுள்ள 28 வகை கற்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

தங்க நிறத்தில் தன்னை பிரதிபலிக்கும் தாஜ்மஹால்.! 


அதிகாலை நேரத்தில் தாஜ்மஹால் பிங்க் நிறத்தில் தன்னை பிரதிபலிக்கிறது, சூரியன் நடு வானில் உள்ள நேரத்தில் மட்டும் பால் போன்று வெள்ளை நிறத்தில் தன்னை பிரதிபலிக்கிறது, அதுமட்டுமின்றி மாலை நேரத்தில் தாஜ்மஹால் தங்க நிறத்தில் சொர்கத்தின் காதல் கோட்டையாய் தன்னை பிரதிபலிக்கிறது என்தே உண்மை. 


தாஜ்மஹால் சுற்றி உள்ள தூண்களின் சிறப்பு.! 
தாஜ்மஹால் சுற்றி உயரமான நான்கு தூண்கள் அழகுக்கே அழகு சேர்க்கும் விதமாக நிறுவப்பட்டுள்ளது. இதன் தனி சிறப்பு என்னவென்றால் இந்தத் தூண்கள் நான்கும் வெளி நோக்கிச் சாய்வாய் கட்டப்பட்டுள்ளது. பூகம்பம் அல்லது நில நடுக்கம் ஏற்பட்டால் தாஜ்மஹாலிற்கு பாதிப்பு வராமல் இருக்கும்படி, இந்த நான்கு தூண்களும் வெளி நோக்கி விழும்படி சாய்வாய் கட்டப்பட்டுள்ளது. 

ஷாஜகான் மற்றும் மும்தாஜின் போலி சமாதி.! 

ஷாஜகான் மற்றும் மும்தாஜின் போலி சமாதி.!
மக்கள் பார்வைக்காக தாஜ்மஹாலில் அனுமதி வழங்கப்பட்டுள்ள இரண்டு சமாதிகளும் உண்மையான ஷாஜகான், மும்தாஜின் சமாதிகள் இல்லை என்தே உண்மை. மக்களின் பார்வைக்காக போலி சமாதிகளை தாஜ்மஹாலின் மேற்தட்டில் வைத்துள்ளனர். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் உண்மையான சமாதி தாஜ்மஹாலின் அடித்தளத்தில் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது என்பதே உண்மை. 

பெட்ஷீட் போட்டு தாஜ்மஹால் மூடப்பட்டதா? 


வரலாற்றில் இது வரை மூன்று முறை தாஜ்மஹால் பெட்ஷீட் போட்டு முழுவதுமாய் மூடப்பட்டுள்ளது என்பது தான் அதிர்ச்சி தகவல். என்னப்பா சொல்ரீங்க மூன்று முறையானு கேட்ட? ஆமாம், இரண்டாம் உலகப் போரின் போது ஒரு முறை, தாஜ்மஹால் இன் பாதுகாப்பு கருதி போர்வை போட்டு மூங்கில் பூதர்களால் மூடப்பட்டது என்பதே உண்மை. அதேபோல் 1965 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரின் பொழுதும் தாஜ்மஹால் முழுவதுமாக போர்வை போட்டு மூடப்பட்டது என்பது ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஃபேஷியல் செய்யப்படும் தாஜ்மஹால்.! 

பெண்கள் தங்களின் அழகை இயற்கையான முறைப்படி பாதுகாத்துக்கொள்ளுவது போல், தாஜ்மஹாலின் அழகும் இயற்கை முறைப்படி பாதுகாக்கப்படுகிறது. முழு தாஜ்மஹாலையும் முல்தானி மெட்டி பூசி, ஊர வைத்து அடிக்கடி இயற்கை முறைப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது தான் இன்னொரு அதிர்ச்சி தகவல்.

No comments:

Post a Comment

welcome ur comment,