Wednesday, April 9, 2014

பெட்ரோல் நிரப்பும்போது கோல்மால்களிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்!

பெட்ரோல் நிரப்பும்போது கோல்மால்களிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்!


இன்று வாகன உரிமையாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது எரிபொருள் கொள்ளை. சில பெட்ரோல் நிலையங்களை தவிர்த்து பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் அளவீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.
சில பெட்ரோல் பங்குகள் ஒரு படி மேலே போய், கலப்படம் செய்து பெட்ரோல், டீசலை விற்பனை செய்கின்றன. இதனால், எஞ்சினின் ஆயுட்காலம் சுருங்கத் தொடங்கி விடுவதுடன், உரிமையாளர்களுக்கு பராமரிப்பு செலவீனத்தை பன்மடங்கு அதிகரிக்க வைக்கின்றன.
இது போதாது என்று பெட்ரோல் நிலைய பணியாளர்கள் அளவீடுகளில் செய்யும் முறைகேடுகளும் வாகன உரிமையாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கின்றன. இந்த நிலையில், பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பும்போது முன் யோசனையுடன் நடந்து கொண்டால் இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து ஓரளவு விடுபடலாம்.

பெட்ரோல் நிரப்பும்போது காரில் இருக்கும் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பேசுவதை தவிருங்கள். அதேபோன்று, உங்களிடம் பெட்ரோல் நிலைய ஊழியர் பேச்சுக் கொடுத்தாலும், சற்று பொறு என்று சொல்லிவிட்டு முழு கவனத்தையும் பெட்ரோல் மீட்டர் மீது வைத்துவிடுங்கள்.

சார் கார்டா, கேஷா...
பெட்ரோல் மீட்டரை ஆன் செய்தவுடனேயே அங்கிருக்கும் ஊழியர், சார், கார்டா, கேஷா என்று கேட்டு உங்களது கவனத்தை திசை திருப்ப முயல்வர். அப்போது கவனமாக இருங்கள். பெட்ரோல் நிரப்பி முடிந்த பின்னரே கார்டு அல்லது பணத்தை செலுத்துங்கள்.

இதிலும் கவனம் தேவை

பெட்ரோல் நிரப்பும்போது பம்ப்பின் நாசிலில் பெட்ரோல் நிலைய ஊழியரை கைவைக்க வேண்டாம் என்று கூறுங்கள். தற்போது தானியங்கி முறையில் பெட்ரோல் நிரப்பும் வசதி இருப்பதால், பெட்ரோல் முழுமையாக நிரப்பிய பின்னர் பம்ப்பின் நாசில் தானாகவே ஆஃப் ஆகிவிடும் வசதி உள்ளது.

ரசீது

பெட்ரோல் நிரப்பியுடன் அச்சிடப்பட்ட ரசீதை பெற்று சரிபாருங்கள். அதில் பெட்ரோல் அளவு சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு பணத்தை செலுத்துங்கள்.

பெட்ரோல் நிலையத்தில் சேவை குறைபாடுகள் மற்றும் அளவீடுகளில் பிரச்னை இருந்தால் பெட்ரோல் நிலைய மேலாளரிடம் இருக்கும் புகார் புத்தகத்தை வாங்கி புகாரை பதிவு செய்து விட்டு வாருங்கள். இந்த விஷயத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மிகுந்த அக்கறையுடனும், தீவிரமாகவும் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கின்றன.

காரை நிறுத்தும்போதே...
காரை நிறுத்தும்போதே முடிந்தவரை பம்ப்பை விட்டு சற்று தள்ளியே நிறுத்துங்கள். பெட்ரோல் நிரப்பும் குழாயை மடக்காமல் சற்று நீளமாக இழுத்து வந்து பெட்ரோல் நிரப்பும்போது, அதிலிருந்து பெட்ரோல் முழுமையாக டேங்கிற்கு எளிதாக செல்லும்.

கலப்பட பெட்ரோல்
சிறந்த பெட்ரோல் நிலையங்களே கேட்டு தெரிந்துகொண்டு அங்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்புவதை வழக்கமாகி கொள்ளுங்கள்.

பெட்ரோல் அளவு சரியாக இல்லாதபட்சத்தில் நமக்கு பல்வேறு சந்தேகங்கள் மனதில் எழும். நம் டிரைவிங் சரியில்லாததால் மைலேஜ் தரவில்லை என்று சிலர் நினைக்க கூடும். சாலை சரியில்லை, எஞ்சின் சரியில்லை என்று கால்குலேட்டரும் கையுமாக அலைய வேண்டியிருக்காது. ஒரு சில கிமீ தள்ளி இருந்தாலும் நம்பகமான பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்புங்கள். ஒவ்வொரு பயணமும் சந்தோஷமாக அமையும்.

எந்த நேரத்தில் பெட்ரோல் நிரப்புவது சிறந்தது?
எந்த நேரத்தில் பெட்ரோல் நிரப்புவது சிறந்தது? டிப்ஸ் செய்தியை படிக்க இங்கே <<கிளிக்>> செய்யவும்.

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?


thanks to
one india a

No comments:

Post a Comment

welcome ur comment,