இன்னும் 100 வருடம் ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியாத 10 மர்மங்கள்..!
"எல்லாமே சாத்தியம் தான்.!" என்று மார்த்தட்டிக் பெருமையாக சொல்லிக் கொள்ளும் அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியானது, எல்லா விடயத்திலும் வென்று விடுவதில்லை. அதிநவீனத்தை மீறிய சில செயல்களும், எந்த விதமான தொழில்நுட்ப யுகத்திலும் கண்டுப்பிடிக்க முடியாத காரியங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு..!!
அப்படியாக நடந்த சில அசாத்தியமான செயல்கள், காரியங்கள், தகவல்கள் எல்லாமே இன்றுவரை புரிந்து கொள்ளவே முடியாத புதிர்காளாய் தான் இருக்கின்றன. அவைகளை தெளிவாக மிக துல்லியமாக புரிந்து கொள்ள, இன்னும் 100 ஆண்டுகள் தேவைப்படும் என்பதுதான் நிதர்சனம்..!
1. பாக்தாத் பேட்டரி :
1752-ஆம் ஆண்டில்தான் மின்சாரம் என்ற ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.
ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பாக்தாத் பேட்டரிகள் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பது தான் நிதர்சனம்..!
2. சைனீஸ் மொஸையிக் லைன்ஸ் (Chinese mosaic lines) :
இந்த விசித்திரமான கோடுகள் சீனாவின் கன்சு ஸெங் (Gansu Sheng) தீவுகளில் கண்டு பிடிக்கப்பட்டது.2004-ஆம் ஆண்டில் தான் இது உருவாகி உள்ளது என்று கண்டுபிடிக்கப் பட்டாலும் இதன் அர்த்தம் இன்று வரை மர்மம் தான்..!!
3. எஸ்ஓஎஸ் மெசேஜ் :
இந்தோனேஷிய கடலில் மிதந்து கொண்டிருந்த இந்த எஸ்எஸ் ஒரங் மேடான் (SS Ourang Medan) கப்பலில் இருந்து "கேப்டன் உட்பட அனைவரும் இறந்து விட்டனர்..!" என்று ஒரு மெசேஜ் கிடைத்தது. பின் சிறிது நேரம் கழித்து "நானும் இறந்து விட்டேன்" என்று மெசேஜ் வந்தது..!
இதை பேய் கப்பல் என்று சிலர் நம்ப, மறுபக்கம் இப்படி ஒரு கப்பலே இல்லை என்றும் சிலர் கூறுகிறார்கள், எப்படி இருந்தாலும் கப்பலில் இருந்து கிடைத்த மேசேஜ் ஒரு புதிர் தான்..!
4. ஸ்டோன் காலண்டர் (Stone Calender) :
எகிப்து நாட்டின் சஹாரா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இது தான் உலகின் முதல் கல் காலண்டர் ஆகும்.
சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த கல் காலண்டர் சார்ந்த புரிதலும், இன்று வரை ஒரு புரியாத புதிர் தான்.
5. வாவ் சிக்னல் (WOW Siganl) :
1977-ஆம் ஆண்டு கிடைத்த இந்த வாவ் சிக்னல் தான் ஏலியன் தேடலில் இருக்கும் தலைசிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும்.
ஒருமுறை, 220 மில்லியன் ஒளி ஆண்டுகள் கடந்து பூமிக்கு ஒரு சிக்னல் கிடைத்தது, அதை 'வாவ் சிக்னல்' (WOW SIGNAL) என்று கூறுகிறார்கள்.இதை பற்றி அறிய <<இங்கே>> சுட்டவும்...
6. 300 மில்லியன் ஆண்டுகள் பழைமையான இரும்பு ஸ்க்ரூ :
ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் 1998-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது இந்த 300 மில்லியன் ஆண்டுகள் பழைமையான ஸ்க்ரூ (Screw)..!
டைனோஸர்கள் கூட உருவாக அந்த காலகட்டத்தில், இது எப்படி உருவாகியது, இதை யார் உருவாக்கி இருப்பார்கள் என்பது விளங்காத புதிர்தான்..!
7. பண்டைய கால ராக்கெட் ஷிப் :
ஜப்பானில் கண்டுப்பிடிக்கப்பட்ட பண்டைய கால, குகை ஓவியமான இதில் ராக்கெட் போன்ற உருவம் தெளிவாக தெரிகிறது.
இந்த ஓவியத்தின் காலகட்டம் 5000 கிபி ஆகும். இதுவும் ஏலியன்கள் சார்ந்த பலமான ஆதாரங்களில் ஒன்றாகும்..!
8. சறுக்கி செல்லும் பாறை :
கலிபோர்னியாவில் உள்ள வரண்ட குளமான - ரேஸ்ட்ராக் ப்லாயாவின் (Racetrack Playa) நகரும் பாறைகள், ஏன் நகர்கிறது எப்படி நகர்கிறது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.
இதை பற்றி அறிய <<இங்கே>> சுட்டவும்...
9. அன்டிகேதேரா மெக்கானிசம் (Antikythera Mechanism) :
1900-ஆம் ஆண்டு, கிரீஸ் நாட்டின் அருகே நடந்த கப்பல் விபத்து ஒன்றில் இருந்து கிடைத்தது இந்த - அன்டிகேதேரா மெக்கானிசம்..!
இது ஒரு சிக்கலான அனலாக் கம்ப்யூட்டர் (Intricate analogue computer ) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விடயங்களும் இன்று வரை கேள்விக்குறி தான்..!
10. ‘வாய்னிச்’ கைப்பிரதி
‘வாய்னிச்’ என்ற கைப்பிரதி புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இப்புத்தகம், இன்னும் யாராலும் விளக்கம் சொல்ல முடியாத வரி வடிவங்களாலும், படங்களாலும் கையால் எழுதப்பட்டுள்ளது. இது எப்போது எழுதப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கதிரியக்க கார்பன் தேதியாக்க முறை மூலமாக இது எழுதப்பட்ட காலம் 15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியப்பட்டுள்ளது.
இதை பற்றி அறிய <<இங்கே>> சுட்டவும்...